சுண்டு விரல் கூட அந்த பொண்ணு மேல படல! விலை உயர்ந்த கார்ல போனாலும் கலாச்சாரத்தை மறக்காத மனுஷன்! அவரா இது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப விலை 19.94 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 31.34 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும் (Ex-showroom Price). பொதுவாக இந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களை எல்லாம் பாலிவுட் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் வாங்குவது கிடையாது.

ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், ஹர்ஷ்வர்தன் ரானே (Harshvardhan Rane) குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அத்துடன் தமிழிலும் கூட ஒரு திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

Harshvardhan Rane Spotted In Toyota Innova Hycross

அது நீ எங்கே என் அன்பே ஆகும். கடந்த 2014ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நயன்தாரா (Nayantara) உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஹர்ஷ்வர்தன் ரானே நடித்திருந்தார். இந்த சூழலில் தனது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் ஹர்ஷ்வர்தன் ரானே பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் காரில் ஏறுவதற்கு முன்னதாக நிறைய பேருடன் ஹர்ஷ்வர்தன் ரானே புகைப்படம் எடுத்து கொள்வதை நாம் பார்க்கலாம். சரியாக காரில் ஏறுவதற்கு முன்னால் இளம்பெண் ஒருவர், அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ளும் ஆர்வத்தில் வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

Toyota Innova Hycross

அவருடன் ஹர்ஷ்வர்தன் ரானே புகைப்படம் எடுத்து கொண்டார். ஆனால் அப்போது அவர் செய்த ஒரு காரியம்தான், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹர்ஷ்வர்தன் ரானே அந்த பெண்ணின் தோளின் மீது கை போட்டார். ஆனால் அவரது கை அந்த பெண்ணின் தோள் பட்டையை தொடவில்லை.

அதாவது தோளின் மீது கை போட்டிருப்பது போன்று, ஹர்ஷ்வர்தன் ரானே போட்டோவிற்கு 'போஸ்' மட்டுமே கொடுத்தார். ஆனால் உண்மையில் அந்த பெண்ணை அவர் தொடவில்லை. ஹர்ஷ்வர்தன் ரானேவின் இந்த செயலுக்கு, சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கினார். அதாவது அவர் இந்த காரை வாங்கி சுமார் ஒரு வருடம் மட்டுமே ஆகிறது. இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின்கள் ஆகும்.

இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 172 ஹெச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களிலும், 2.0 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் ஒட்டுமொத்த பவர் அவுட்புட் 184 ஹெச்பி-ஆக இருக்கிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. அத்துடன் இந்த காரில் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும் 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் (Features) டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹர்ஷ்வர்தன் ரானே பயன்படுத்திய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700), மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 27, 2025, 16:27 [IST]
English summary
Actor harshvardhan rane spotted in toyota innova hycross viral video check car price features engine
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+