பிரபல நடிகரின் தந்தையா இது? அவர் ரேஞ்சுக்கு விலையுயர்ந்த புது மெர்சிடிஸ் கார் உடன்...

ஹிரித்திக் ரோஷன் (Hrithik Roshan), பிரபல பாலிவுட் நடிகர் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இவரது குடும்பத்தில் புதியதாக மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 கார் வாங்கப்பட்டு உள்ளது. ஆனால், காரை டெலிவிரி பெறும் போதுதான் ஒரு சுவாரஸ்யமான விஷயமே நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர், நடிகைகள் அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. குறிப்பாக, மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் என்றால் சினிமா ஸ்டார்களுக்கு கூடுதல் விருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். லக்சரியான பென்ஸ் கார்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்.

hrithik roshan father buys mercedes

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் குடும்பத்தில் புதியதாக விலையுயர்ந்த மெர்சிடிஸ்-மேபக் காரை வாங்கியுள்ளனர். ஹிரித்திக் ரோஷனின் குடும்பத்தினரால் தற்போது வாங்கப்பட்டு இருப்பது மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் என்கிற லக்சரி செடான் கார் ஆகும். இந்த காரின் எஸ்580 வேரியண்ட் கார் இந்த குடும்பத்தினரால் வாங்கப்பட்டுள்ளது.

நடிகர் ஹிருத்திக் ரோஷனிடமும் மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் கார் உள்ளது. ஹிரித்திக் ரோஷனிடம் இருப்பது எஸ்600 வேரியண்ட் கார் ஆகும். ஆக, ஹிரித்திக் ரோஷனின் குடும்பத்தில் இணைந்த 2வது மேபக் கார் மேபக் எஸ்580 ஆகும். புதிய மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரை ஹிரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் வாங்கியுள்ளார்.

hrithik roshan father buys mercedes

ஆதலால், ஹிரித்திக் ரோஷனின் பெற்றோரின் பயன்பாட்டிற்காக இந்த புதிய மேபக் கார் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மகனை போல் தந்தையும் வெள்ளை நிறத்தில் மேபக் எஸ்-கிளாஸ் காரை வாங்கியுள்ளார். இந்தி பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் என பன்முக திறன் கொண்ட ராகேஷ் ரோஷன் புதிய எஸ்580 லக்சரி காரை டெலிவிரி எடுக்கும்போது எடுக்கப்பட்ட படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த படங்களில் ராகேஷ் ரோஷனின் கையில் சில பரிசுப் பொருட்கள் இருப்பதையும் காணலாம். அதாவது, காருடன் சேர்த்து டீலர்ஷிப் ஷோரூம் சார்பில் பரிசு பொருட்களுடன் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த & லக்சரி செடான் கார், மேபக் எஸ்-கிளாஸ் ஆகும். எஸ்580 மற்றும் எஸ்680 என்கிற இரு விதமான வேரியண்ட்களில் மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது.

hrithik roshan father buys mercedes

இதில் எஸ்680 ஆனது விலையுயர்ந்த வேரியண்ட்டாக விளங்குகிறது. நடிகர் ஹிரித்திக் ரோஷன் வாங்கிய எஸ்600 வேரியண்ட் தற்சமயம் விற்பனை செய்யப்படுவதில்லை. ஏனெனில், ஹிரித்திக் ரோஷன் வாங்கிய பின் எஸ்-கிளாஸ் கார் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது. ராகேஷ் ரோஷன் வாங்கியிருக்கும் மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.71 கோடியாகவும், எஸ்680 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.43 கோடியாகவும் தற்சமயம் உள்ளன.

ராகேஷ் ரோஷன் வாங்கியுள்ள மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின்-டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. 48-வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 496 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் இந்த காரில் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ஹிரித்திக் ரோஷனின் குடும்பத்தாருக்கு ரூ.3 கோடியில் கார் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. ஹிரித்திக் ரோஷனின் குடும்பத்தில் தற்போது 2 மேபக் கார்கள் உள்ளன. மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை காட்டிலும், மெர்சிடிஸ்-மேபக் கார்கள் விலைமிக்கவை மற்றும் லக்சரியானவையாக விளங்குகின்றன. இதனால்தான், ஹிரித்திக் ரோஷன் போன்றோர் பென்ஸ் கார்களுக்கு பதிலாக மேபக் கார்களை வாங்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 25, 2024, 19:51 [IST]
English summary
Actor hrithik roshan father takes delivery of mercedes maybach s class
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X