ஐபிஎல் துவக்க விழாவில் ஆட்டம் போட்ட கையோடு அஸ்டன் மார்ட்டின் வாங்கிய ஹிருத்திக் ரோஷன்!!

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரை வாங்கி இருக்கிறது. அண்மையில் குடும்பத்தினருடன் இந்த காரில் பயணித்து மகிழ்ந்துள்ளார். 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த

By Saravana Rajan

ஆடி கார்கள் பக்கம் ஓடிக் கொண்டிருந்த பாலிவுட் நட்சத்திரங்கள் இப்போது அஸ்டன் மார்ட்டின் பக்கம் கவனத்தை திசை திருப்பி இருக்கிறது. ஆம். ரன்பீர் சிங்கை தொடர்ந்து அடுத்து ஒரு பாலிவுட் பிரபலம் அஸ்டன் மார்ட்டின் காரை வாங்கி அசத்தி இருக்கிறார்.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

ஆம், அண்மையில் நடந்த ஐபிஎல் துவக்க விழாவில் ஆட்டம் போட்ட கையோடு, புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரை டெலிவிரி பெற்றிருக்கிறார் பாலிவுட் நடனப் புயல் ஹிருத்திக் ரோஷன். ரூ.3.90 கோடி எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட இந்த காரை டெலிவிரி பெற்றதோடு, தனது குடும்பத்தினருடன் அதில் பயணித்து மகிழ்ந்திருக்கிறார் ஹிருத்திக்.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

பொதுவாக பாலிவுட் பிரபலங்கள் கருப்பு அல்லது அடர் வண்ணங்களை தேர்வு செய்வது வழக்கம். ஆனால், அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரின் சில்வர் வண்ணத்தை தேர்வு செய்து வாங்கி இருக்கிறார் ஹிருத்திக். இந்த காரின் இன்டீரியர் அடர் வண்ணத்தில் இருக்கிறது.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

அஸ்டன் மார்ட்டின் கார்களில் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மாடலாக இது கருதப்படுகிறுது. 4 கதவுகள் கொண்ட இந்த கார் சிறப்பான இடவசதியை அளிக்கிறது. குறிப்பாக, இந்தியர்கள் மத்தியில் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்றிருப்பதற்கு நடைமுறை பயன்பாட்டிற்கு சிறந்த மாடலாக இருப்பதே காரணமாக பார்க்கப்படுகிறது.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரில் சக்திவாய்ந்த 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 552 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இசட்எஃப் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

ரேபிட் குடும்ப வரிசையில் தற்போதைய தலைமுறை மாடல்தான் மிக மிக சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல். இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 327 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை வாய்ந்த ஸ்போர்ட்ஸ் செடான் ரக கார்.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

இந்த காருக்கு பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளையும், இன்டீரியர் கஸ்டமைஸ் வசதிகளை அஸ்டன் மார்ட்டின் வழங்குகிறது. குறிப்பாக, இந்த காருக்கு வழங்கப்படும் 1000 வாட் திறன் கொண்ட பேங் அண்ட் ஒலுஃப்சன் ஆடியோ சிஸ்டம் வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கி பொருத்தப்படுகிறது.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

இந்த காரை தினசரி பயன்பாடு மற்றும் ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்துவதற்காக முன்புறத்திலும், பின்புறத்திலும் டபுள் விஷ்போன் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த ஓட்டுதல் தரத்தையும், கையாளுமையும் வழங்கும். மோசமான சாலைகளை எதிர்கொள்ளும் வகையில் ஆக்டிவ் டேம்பிங் இருப்பதால், அலுங்கல் குலுங்கல் இல்லா பயண அனுபவத்தை பெறலாம்.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

இந்த விலை உயர்ந்த காரில் டியூவல் காஸ்ட் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டார்க் கன்ட்ரோல், இபிடி தொழில்நுட்பம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் ஏராளம்.

புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கி இருக்கும் ஹிருத்திக் ரோஷனிடம் ஏற்கனவே ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட், போர்ஷே கேயென் டர்போ எஸ், ரேஞ்ச்ரோவர் வோக், மேபக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் - க்ளாஸ் உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த உயர்வகை சொகுசு கார்கள் கராஜில் வரிசை கட்டி நிற்கின்றன.

Picture credit: Bollywood Mantra

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor Hrithik Roshan Gets Aston Martin Rapide S Car.
Story first published: Thursday, April 12, 2018, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X