சத்தமே இல்லாமல் விலையுயர்ந்த காரில் வந்தது பிரபல நடிகர் அவரா!! தெரிந்ததும் சூழ்ந்துக் கொண்ட கேமராக்கள்!
ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) பிரபல பாலிவுட் நடிகரான இவர் புதியதாக விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கி உள்ளார். எவ்வளவு விலையில் அவர் இந்த காரை வாங்கியுள்ளார் என்பதையும், இந்த ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லேண்ட் ரோவர் நிறுவனம் உருவாக்கும் ரேஞ்ச் ரோவர் கார்கள் அவற்றின் கம்பீரமான உருவத்தினாலும், விசாலமான இடவசதி உடனான உட்பக்க கேபினினாலும் பணக்காரர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. குறிப்பாக, திரையுலக சினிமா நட்சத்திரங்கள் ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் காரணமாகவே, சமீப ஆண்டுகளில் நிறைய சினிமா ஸ்டார்கள் புதியதாக ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவதை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றோம். இந்த வரிசையில், பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் புதியதாக விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கி உள்ளார். இந்த ரேஞ்ச் ரோவர் கார் ஷார்ட்-வீல்பேஸ் மற்றும் லாங்-வீல்பேஸ் என இரு வெர்சன்களில் கிடைக்கிறது.
இதில், லாங்-வீல்பேஸ் வெர்சனை ஹிருத்திக் ரோஷன் வாங்கியுள்ளார். லாங்-வீல்பேஸ் வெர்சன் கொஞ்சம் அதிக நீளம் கொண்டதாக இருக்கும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.3.1 கோடியாக உள்ளது. மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட இயக்குனர் ஃபாரா கானின் இல்ல விருந்து நிகழ்ச்சிக்கு நடிகர் ஷிருத்திக் ரோஷன் இந்த காரில் தனது மகனுடன் வந்தார்.
மேலும், அந்த சமயத்தில் காரினுள் ஹிருத்திக் ரோஷனின் பெண் நண்பர் சபா அசாட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், ஹிருத்திக் ரோஷன் ரேஞ்ச் ரோவர் 3.0 ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் வேரியண்ட் காரை வாங்கியுள்ளார். ஷிருத்திக் ரோஷனிடம் உள்ள இந்த கார் சாண்டோரினி கருப்பு நிறத்தில் வெளிப்பக்கத்தையும், டேன் லெதரில் கேபினையும் கொண்டுள்ளது.
இந்த காரை என்னென்ன வசதிகளுடன் நடிகர் ஷிருத்திக் ரோஷன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் 3.0 லிட்டர் டீசல் ஹைப்ரீட் என்ஜின் உள்ளது. அதாவது, இந்த காரில் என்ஜின் உடன் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும்.

இந்த என்ஜின் சிஸ்டத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அத்துடன், இது ஒரு ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட கார் ஆகும். அதாவது, காரின் அனைத்து 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் இயக்க ஆற்றல் செல்லும். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் வேறு சில லக்சரி கார்களும் உள்ளன. அவற்றுள் முக்கியமானது லம்போர்கினி உருஸ்.
லம்போர்கினியின் லக்சரி எஸ்யூவி காரான உருஸ் மாடலை 2022ஆம் ஆண்டில் நடிகர் ஷிருத்திக் ரோஷன் வாங்கி இருந்தார். பையான்கோ மோனோசெரஸ் என்கிற வெள்ளை நிறத்தில் ஷிருத்திக் ரோஷனிடம் லம்போர்கினி உருஸ் கார் உள்ளது. 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜினை கொண்ட லம்போர்கினி உருஸ் காரும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமானதாக விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஞ்ச் ரோவர் காரை வைத்தில்லாத பாலிவுட் சினிமா நட்சத்திரங்களே கிடையாது என சொல்லும் அளவிற்கு கிட்டத்தட்ட அனைவரிடத்திலும் இந்த சொகுசு எஸ்யூவி கார் உள்ளது. சமீபத்தில்தான், நடிகர் கார்த்திக் ஆர்யன் தனது ரேஞ்ச் ரோவர் காரில் காட்சித்தந்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, மற்றொரு பாலிவுட் நடிகராக ஹிருத்திக் ரோஷன் தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை பொது வெளியில் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications








