வெறும் டிராயர் உடன் காரில் இருந்து இறங்கிய மன்னர் குடும்ப வாரிசு! அக்காவுக்கு அப்படியே ஆப்போசிட்டா இருக்காரு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். பாலிவுட் நடிகர்கள் சுனில் ஷெட்டி (Suniel Shetty) மற்றும் ராகவ் ஜூயல் (Raghav Juyal) போன்றவர்களிடம், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 இருக்கிறது. இந்த வரிசையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானிடமும் (Shah Rukh Khan) ஒரு சமயத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் இருந்தது.

ஆனால் ஷாருக்கான் தற்போதும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை பயன்படுத்தி வருகிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, சொகுசு அம்சங்கள் நிரம்பியது என்பதால், பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் தொடர்ந்து பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை வாங்கி வருகின்றனர்.

Ibrahim Ali Khan Arrives In BMW X5

இதில், இப்ராஹிம் அலி கான் (Ibrahim Ali Khan) மிகவும் முக்கியமானவர். கடந்த 2024ம் ஆண்டின் மத்தியில்தான், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை இப்ராஹிம் அலி கான் வாங்கினார். இந்த காரின் தற்போதைய விலை 97 லட்ச ரூபாய் ஆகும். பொறுங்கள். இது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை மட்டுமே.

டாப் வேரியண்ட்டின் விலை 1.09 கோடி ரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டும்தான். ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் சில லட்ச ரூபாய் கூடுதலாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியுள்ள இப்ராஹிம் அலி கான் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

BMW X5

23 வயது மட்டுமே நிரம்பிய இப்ராஹிம் அலி கான், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், மன்னர் பரம்பரை வாரிசாக இருப்பவருமான சயீஃப் அலி கானின் (Saif Ali Khan) மகன் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே இப்ராஹிம் அலி கானிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 தவிர இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களும் உள்ளன.

இதில், மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 (Mercedes Benz EQS 580) குறிப்பிடத்தக்கது ஆகும். இப்ராஹிம் அலி கானின் அக்காவும், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவருமான சாரா அலி கான் (Sara Ali Khan) மிகவும் எளிமையான கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர்.

மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) மற்றும் ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) போன்ற மிகவும் எளிமையான கார்களில்தான், சாரா அலி கானை பெரும்பாலும் பார்க்க முடியும். ஆனால் இப்ராஹிம் அலி கான் அவருக்கு அப்படியே வேறு விதமாக இருக்க கூடியவர். மிகவும் விலை உயர்ந்த கார்களில்தான் இப்ராஹிம் அலி கானை பெரும்பாலும் காண முடியும்.

இந்த வரிசையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில், இப்ராஹிம் அலி கான் வந்து இறங்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இப்ராஹிம் அலி கான் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்ற வகையில், இப்ராஹிம் அலி கான் மிகவும் எளிமையான உடையில் இருக்கிறார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இப்ராஹிம் அலி கான் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரானது, ஆடி க்யூ7 (Audi Q7), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. சொகுசான பயணத்தை விரும்ப கூடியவர்களுக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 நல்ல ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, February 28, 2025, 18:30 [IST]
English summary
Actor ibrahim ali khan arrives in bmw x5 luxury suv viral video full details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+