அந்த பிரபல நடிகரின் தம்பியா இது? யார்கிட்டயும் இல்லாத எலக்ட்ரிக் காரில் சுற்றிக் கொண்டிருக்கிறார்!!
எம்ஜி மோட்டார் (MG MOtor) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக சைபர்ஸ்டர் (Cyberster) என்கிற எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. எம்ஜி நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள விலையுயர்ந்த எம்ஜி எலக்ட்ரிக் காரான சைபர்ஸ்டரை அறிமுகத்திற்கு முன்னதாகவே சினிமா நடிகர் (Cinema Actor) ஒருவர் பயன்படுத்தி வருகிறார். யார் அவர் என்பதையும், அவர் பயன்படுத்திவரும் எம்ஜி சைபர்ஸ்டர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் காரை வாங்க மக்கள் நிறைய பேர் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இதனாலேயே புது, புது எலக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் அடுத்தடுத்து கொண்டுவர எம்ஜி மோட்டார் விரும்புகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு தான் விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டு மார்க்கெட்டில் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து எம்ஜி சைபர்ஸ்டர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட அஸ்டர் (Astor) காரை எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது.
இதனால் எம்ஜி சைபர்ஸ்டர் காரின் இந்திய அறிமுகம் தாமதமாகி உள்ள நிலையில், சைபர்ஸ்டர் காரை அறிமுகத்திற்கு முன்னதாக இந்திய திரைப்பட சினிமா நடிகர் ஒருவர் பயன்படுத்தி வருகிறார். அவரது பெயர், இஷான் கட்டர் (Ishaan Khatter) ஆகும். மஞ்சள் நிறத்திலான எம்ஜி சைபர்ஸ்டர் காரை இந்த பாலிவுட் (Bollywood) நடிகர் பயன்படுத்தி வருகிறார்.

பிரபல பாலிவுட் சினிமா நட்சத்திர தம்பதிக்கு மகனாக மும்பையில் பிறந்த 29 வயதான இஷான் கட்டார், பிரபல நடிகர் ஷாகித் கபூரின் சகோதரர் ஆவார். 2005ஆம் ஆண்டில் நடிகர் சஞ்சய் தத்தின் நடிப்பில் வெளியான 'வா! லைஃப் ஹோ டோ ஐசி' என்கிற இந்தி திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சதிரமாக அறிமுகமான நடிகர் இஷான் கட்டார் அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதை விடுத்து திரைப்படங்களில் இயக்குனருக்கு உதவியாக உதவி இயக்குனராக பணியாற்ற ஆரம்பித்தார்.
அதன்படி, இஷான் கட்டார் உதவி இயக்குனராக பணியாற்றிய 'உடாப் பஞ்சாப்' என்கிற திரைப்படம் 2016ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. அதற்கடுத்த திரைப்படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றிய இஷான் கட்டார், அதன்பின் 2017ஆம் ஆண்டில் 'பியண்ட் தி க்ளவுட்ஸ்' என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக பாலிவுட்டில் அறிமுகமாகினார். இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, நடிகை மாளவிகா மோகனன் முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முதல் திரைப்படத்திற்கு பின் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகர் இஷான் கட்டாரின் நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டில் எந்த திரைப்படமும் திரைக்குவரவில்லை. தற்சமயம் 'தி ராயல்ஸ்' என்கிற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்துவரும் இஷான் கட்டர் மஞ்சள் நிறத்திலான எம்ஜி சைபர்ஸ்டர் காரில் மும்பையில் காட்சி தந்துள்ளார்.
கத்திரிக்கோல் டிசைனிலான கதவுகளை கொண்ட சைபர்ஸ்டர் காரில் இருந்து நடிகர் இஷான் கட்டர் வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், எம்ஜி சைபர்ஸ்டர் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாதது ஆகும். அப்படியிருக்க, நடிகர் இஷான் கட்டர் மட்டும் எவ்வாறு இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரை பயன்படுத்துகிறார் என்கிற கேள்வி எழுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, விலையுயர்ந்த கார்களை அவற்றின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே அவை பயன்படுத்துவதற்கு எவ்வாறு உள்ளது என்பதை அறியும் முயற்சியாக சினிமா பிரபலங்களும், விஐபிகளும் அவற்றை சில நாட்களுக்கு டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்ப்பது உண்டு. அவ்வாறுதான், நடிகர் இஷான் கட்டர் இந்த எம்ஜி சைபர்ஸ்டர் காரை பயன்படுத்தி வருகிறார் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications
