61 வயதில் கார் வாங்கிய காமெடி நடிகர் ஆள் அடையாளமே தெரியல! வாழ்க்கையிலேயே முதல்முறையா இதை செய்திருக்காரு!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars), பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். இவற்றை புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை சமீபத்தில்தான் மஹிந்திரா துவங்கியுள்ளதால், சாலையில் தென்படும் இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பணக்காரர்களும், சினிமா (Cinema) பிரபலங்களும் தான் அதிகமாக இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது ஒரு பிரபலமான நடிகர் ஒருவர் இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றை வாங்கி உள்ளார். அவரது பெயர், ஜாவீத் ஜாஃபேரி (Jaaved Jaaferi). பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இவர் ஒரு பாலிவுட் நடிகர் (Bollywood Actor) என்பது.

இந்தி மொழி படங்களில் அதிகமாக காமெடியன் (Comedian) கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜாவீத் ஜாஃபேரி, நடிகர் மட்டுமின்றி சிறந்த நடன கலைஞரும் ஆவார். அத்துடன், கொஞ்சம் பணத்தை சம்பாதித்த பிறகு திரைப்படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்த இவர், சமீபத்தில் அரசியலிலும் புகுந்துள்ளார்.
61 வயதாகும் ஜாவீத் ஜாஃபேரி 1980ஆம் காலக்கட்டத்தில் இருந்தே சினிமாவில் நடித்துவரும் பழமையான நடிகர் ஆவார். இந்த வயதில் இப்போதும் தொடர்ந்து நடித்துவரும் நடிகர் ஜாவீத் ஜாஃபேரியின் நடிப்பில் அடுத்ததாக 'தமால் 4' வருகிற 2026ஆம் வருடத்தில் திரைக்கு வர உள்ளது.

சினிமாவில் நடிப்பது, நடனமாடுவது மட்டுமில்லாமல், ஜாவீத் ஜாஃபேரி சிறந்த டப்பிங் (Dubbing) கலைஞரும் ஆவார். 'தி ஜங்கிள் புக் 2' (The Jungle Book 2), 'தி இன்க்ரீடிபிள்ஸ்' (The Incredibles) உள்ளிட்ட பிரபலமான ஆங்கில திரைப்படங்கள் மட்டுமின்றி, கார்டூன் (Cartoon) நிகழ்ச்சிகளுக்கும் இந்தி மொழி டப்பிங்கை ஜாவீத் ஜாஃபேரி கொடுத்துள்ளார்.
இவை எல்லாவற்றையும் விட, சுமார் 18 வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றியது நடிகர் ஜாவீத் ஜாஃபேரியை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது. இத்தகையவர் தான் தற்போது விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். இதனை சம்பந்தப்பட்ட மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோவில், தான் வாங்கிய முதல் எலக்ட்ரிக் கார் இது என்றும், இத்தனை வருடங்களில் டெஸ்லா (Tesla) எலக்ட்ரிக் கார் உள்பட பல்வேறு கார்களை தான் பயன்படுத்திய போதிலும், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் வித்தியாசமான அனுபவத்தை வழங்கியதாகவும் நடிகர் ஜாவீத் ஜாஃபேரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வெளிப்பக்கத்தில் இருந்து வரும் சத்தம் பெரிய அளவில் காருக்குள் தடுக்கப்படுவதும், எக்ஸ்இவி 9இ காரை ஓட்டும்போது கிடைத்த அனுபவமும் நடிகர் ஜாவீத் ஜாஃபேரியை வெகுவாக கவர்ந்துள்ளன. முற்றிலும் சில்வர் நிறத்திலான மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை இந்த நடிகர் வாங்கியுள்ளார். இதனை 'டெசர்ட் மிஸ்ட்' (Desert Myst) என மஹிந்திரா அழைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ஜாவீத் ஜாஃபேரி உள்பட சினிமா பிரபலங்கள் பலர் மஹிந்திராவின் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை கடந்த சில வாரங்களில் டெலிவிரி பெற்றுள்ளனர். நம் தமிழ் சினிமாவிலும் சிலர் வாங்கியுள்ளனர். எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை காட்டிலும் மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் விலை குறைவானதாக இருப்பினும், எக்ஸ்இவி 9இ தான் நிறைய பேரது விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








