சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
ஜாக்கி ஷெரூஃப் (Jackie Shroff), அனுபவம் வாய்ந்த பிரபல பாலிவுட் நடிகர். பாலிவுட்டில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து, பழம் தின்று கொட்டை போட்ட நடிகர் இவர் ஆவார். தமிழில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்தாலே செல்வ செழிப்பில் திளைக்கிறார் என்று அர்த்தம். ஜாக்கி ஷெரூஃப் கூடுதலாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அப்படியென்றால், இவரது லக்சரி வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. கார்களை பொறுத்தவரையில், ஜாக்கி ஷெரூஃப்பிடம் நிறைய சொகுசு கார்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சில மாடல்களை பற்றி இனி பார்க்கலாம்.

பி.எம்.டபிள்யூ எம்5 (BMW M5): பிஎம்டபிள்யூவின் 4-டோர் ஸ்போர்ட்ஸ் சலூன் காரான இதனை ஜாக்கி ஷெரூஃப் கருப்பு நிறத்தில் வாங்கினார். ஆனால், இப்போதும் இந்த காரை இந்த நடிகர் வைத்துள்ளாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் காரில் 4.4 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 553 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி (Bentley Continental GT): நடிகர் ஜாக்கி ஷெரூஃப்பிடம் உள்ள விலைமிக்க கார்களுள் ஒன்று இதுவாகும். இந்த பெண்ட்லீ கார் இந்தியாவில் இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 500 பிஎச்பி & 660 என்எம் டார்க் திறன் வரையிலும், 6.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 626 பிஎச்பி & 820 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.

ஜாகுவார் எஸ்.எஸ்100 (Jaguar SS100): நடிகர் ஜாக்கி ஷெரூஃப்பிடம் சில பழமை வாய்ந்த கிளாசிக் கார்களும் உள்ளன. அவற்றுள் இந்த பழைய ஜாகுவார் காரும் ஒன்றாகும். 1939ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஜாகுவார் எஸ்.எஸ்100 காரில் 3.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஜாகுவார் எஸ்.எஸ்100 மட்டுமின்றி, பாண்டியாக் ஃபையர்பேர்டு, நிஸான் பேட்ரோல் ஒய்60 உள்ளிட்ட பழமை வாய்ந்த கிளாசிக் கார்களும் ஜாக்கி ஷெரூஃப்பிடம் ஒரு சமயத்தில் இருந்தன.

ஹம்மர் எச்2 (Hummer H2): உலகளவில் பிரபலமான & வலிமையான எஸ்யூவி கார் இந்த ஹம்மர் வாகனம் ஆகும். பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரிடத்தில் உள்ள ஹம்மர் எச்2 வாகனம் ஜாக்கி ஷெரூஃப்பிடம் கருப்பு நிறத்தில் உள்ளது. இந்த பவர்ஃபுல் எஸ்யூவி வாகனத்தில் 3.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. கூடுதல் தொகையை செலுத்துவதன் மூலம் இந்த ஹம்மர் வாகனத்தை 5.3 லிட்டர் வி8 என்ஜின் உடனும் வாங்கலாம்.

ஃபியட் 1100 (Fiat 1100): ஜாகுவார் எஸ்.எஸ்100 உடன் நடிகர் ஜாக்கி ஷெரூஃப்பிடம் உள்ள மற்றொரு பழமையான கார் இதுவாகும். 1968இல் உருவாக்கப்பட்ட ஃபியட் 1100 காரை ஜாக்கி ஷெரூஃப் வைத்துள்ளார். 1960 -70ஆம் காலக்கட்டத்தில் மிகவும் சொகுசான செடான் காராக இது விளங்கியது. இந்த காரை முழுவதுமாக சர்வீஸ் செய்து புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஜாக்கி ஷெரூஃப் வைத்துள்ளார்.

ஜாகுவார் எக்ஸ்.கே.ஆர் (Jaguar XKR): நடிகர் ஜாக்கி ஷெரூஃப்பிடம் உள்ள மற்றொரு செயல்திறன்மிக்க கார் இதுவாகும். கூபே தோற்றத்திலான இந்த பெர்ஃபார்மன்ஸ் காரை பிரிட்டிஷ் ரேசிங் பச்சை நிறத்தில், கோல்டன்-கலர் அலாய் சக்கரங்களுடன் ஜாக்கி ஷெரூஃப் வைத்துள்ளார். இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 510 பிஎஸ் மற்றும் 625 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை எல்லாம் நடிகர் ஜாக்கி ஷெரூஃப்பிடம் உள்ள விலையுயர்ந்த லக்சரி கார்கள் ஆகும். இவை இல்லாமல், இஸுஸு வி-கிராஸ், டொயோட்டா இன்னோவா, டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களும் ஜாக்கி ஷெரூஃப்பிடம் உள்ளன. நம்மில் பெரும்பாலானோருக்கு ஃபார்ச்சூனர் காரே விலையுயர்ந்ததாக இருக்கும் நிலையில், அத்தகைய காரையே இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியவில்லை என்றால், ஜாக்கி ஷெரூஃப்பிடம் எந்த அளவிற்கு விலையுயர்ந்த கார்கள் அதிகமாக உள்ளன என்பதை பார்க்கவும்.


Click it and Unblock the Notifications









