”தக... தக.. என தங்கநிறத்தில் ஜொலிக்கும் புகாட்டி வெய்ரோன் கார்” பிரபல நடிகரின் அசத்தலான மாடிஃபிகேஷன்

Written By:

உலகளவில் பலரும் ஆடம்பர மற்றும் அதிகதிறன் கொண்ட காரை வாங்க காசுசேர்த்து வைத்துக்கொண்டு இருக்க, தன் புகாட்டி வெய்ரான் காருக்கு தனித்துவமான மாடிஃபிகேஷன் செய்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஒருவர்.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

உலக சினிமா பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் குவன்டின் டரன்டினோவிற்கு மிக பெரிய செல்வாக்கு உண்டு.

அவர் இயக்கிய படங்களில் பலருக்கும் விருப்பமான படம் என்றால் டிஜாங்கோ அன்செயின்ட். அதிரடி அரசியல் பேசு படம் இது.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

ஆஸ்கர் விருது வென்ற லியானார்டோ டிகேப்ரியோ இருக்கும் போது இந்த படத்தில் ஹீரோவாக கலக்கியவர் ஜாமி ஃபாக்ஸ்.

எல்க்ட்ரோ, அமேசிங் ஸ்பைடர் மேன் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தும் சத்தம் இல்லாமல் பல சாதனை செய்திருக்கிறார்.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

கார் ஓட்டுவதிலும் கைதேர்ந்தவரான இவரிடம் புகாட்டி நிறுவனத்தின் அதிக செயல்திறன் மற்றும் ஆற்றல் கொண்ட வெய்ரோன் கார் உள்ளது.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

ஜாமி ஃபாக்ஸ் இந்த காரை வாங்கும் போது அது நீலம் மற்றும் கருப்பு நிறங்களின் காம்போவில் இருந்துள்ளது. அது பிடிக்காமல் போக, தற்போது தனது புகாட்டி வெய்ரோன் காரை நடிகர் ஜாமி சில மாடிபிகேஷன் செய்துள்ளார்.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

அடர் நீலம் மற்றும் கருப்பு நிறங்களின் கலவையில் இருந்த ஜாமி ஃபாக்ஸின் புகாட்டி வெய்ரோன், தற்போது தக தகவென தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.

தங்க நிறத்தில் தோற்றமளிக்கு புகாட்டி வெய்ரோன் காருடன், நிற்பது போன்ற புகைப்படத்தை ஜாமி ஃபாக்ஸ் தனது பிரத்யேக முகநூல் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

அதனுடன், எப்போதும் தான் தனித்துவமாக தெரிய விரும்புவதாகவும், தனது காரை பார்க்கும் பலருக்கு மேலும் சில ஆச்சர்யங்கள் காத்திருப்பதாகவும் அந்த பதிவில் ஜாமி ஃபாக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

ஜாமி ஃபாக்ஸின் புகாட்டி வெய்ரோன் கார் தங்க முலாம் பூசப்பட்டு தக தக வென ஜொலிப்பது ஹாலிவுட் மட்டுமின்றி ஆட்டோமொபைல் உலகையே ஒரு கலக்கு கலக்கி உள்ளது.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

இதற்கு பிறகு பல ஸ்போர்ட்ஸ் மாடல் கார்கள் இந்த தோற்றத்திற்கு மாறலாம் எனவும் சில ஆட்டோமொபைல் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

இன்று ஆட்டோமொபைல் உலகை திகைப்பில் ஆழ்த்தியுள்ள புகாட்டி வெய்ரோன் கார் போன்று, முன்னதாக பல ஸ்போர்ட்ஸ் மாடல் கார்கள் தங்க நிற பூச்சை பெற்றுள்ளன.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

அதில் பல ஆர்வலர்களின் கண்ணை உருத்திய மாடல் என்றால் நிஸான் ஜி.டி.ஆர். ”குல் ரேஸிங்” என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தங்க நிற காருக்கு உலகளவில் பெரிய வரவேற்பு இருந்தது.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

நிஸான் ஜி.டி-ஆர் காரை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாட்டில் வசிக்கும் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் தனது போர்சே 918 ஸ்பைடர் காரை தங்க நிறத்திற்கு மாற்றினார்.

அதுவும் இணையதளங்களில் ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடையே மிகப்பெரிய சிலிர்ப்பை உருவாக்கியது.

தங்க முலாம் பூசிய பிரபல நடிகரின் புகாட்டி வெய்ரோன் கார்..!!

ஜாமி ஃபாக்ஸின் புகாட்டி வெய்ரோன் கார் தக தகவென தங்க நிறத்தில் ஜொலிப்பது போன்று, இதே மாடிஃபிகேஷன் கொண்டு பல கார்கள் இனி தயாராகும் என ஆட்டோமொபைல் வலைதளம் ஒன்று ஆருடம் கூறியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Jamie Foxx, Hollywood Well Known Celebrity Painted his Bugati Veyron Car into Gold. Click for Details...
Story first published: Monday, June 12, 2017, 13:56 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark