பைக் வாங்க ஷோரூமுக்கு வந்தது அந்த பிரபல நடிகரின் மகனா? அப்பாவை போலவே அச்சு அசலாக உள்ளார்!

ஜெயசூர்யா (Jayasuriya), இந்த பெயரை பல இடங்களில் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இலங்கை கிரிக்கெட் வீரர்களில் நட்சத்திர வீரர் ஒருவரது பெயர் ஜெயசூர்யா ஆகும். அதேபோல், ஜெயசூர்யா என்கிற பெயரில் மலையாள நடிகர் ஒருவரும் உள்ளதும் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். மலையாள நடிகராக இருப்பினும், 2002இல் ஜெயசூர்யாவின் நடிப்பில் வெளிவந்த 'என் மன வானில்' என்கிற தமிழ் திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் இருக்கும் நடிகர் வடிவேலு (Vadivelu) உடன் வாய் பேச முடியாதவராக நடிகர் ஜெயசூர்யாவை பார்த்து இருப்பீர்கள்.

நம் தமிழ்நாட்டில் இந்த நடிகரை தெரிந்தவர்கள் குறைவாக இருந்தாலும், கேரளாவில் எவரொருவருக்கும் தெரிந்த நன்கு பரீட்சையமான நடிகராக ஜெயசூர்யா விளங்குகிறார். ஏனெனில், அந்த அளவிற்கு மளையாள சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கடந்த 30 வருடங்களாக நடித்து வருகிறார். இவரை பற்றி ஏன் இப்போது பார்க்கிறோம் என்கிற கேள்விக்கு உங்களுக்கு எழலாம்.

jayasuriya s son buys himalayan 450

மலையாள நடிகர் ஜெயசூர்யா தனது மகனுக்கு விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளார். மனைவி மற்றும் மகன் உடன் குடும்பமாக ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom)-க்கு சென்று நடிகர் ஜெயசூர்யா அவர்கள் பைக்கை டெலிவிரி (Delivery) பெறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயசூர்யா தனது மகனுக்காக வாங்கிக் கொடுத்திருப்பது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 (Himalayan 450) மோட்டார்சைக்கிள் ஆகும். விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரில் ராயல் என்ஃபீல்டு ஷோரூமுக்கு வந்து நடிகர் ஜெயசூர்யாவின் குடும்பம் பிராண்ட்-நியூ ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக்கை வாங்கி உள்ளனர்.

jayasuriya s son buys himalayan 450

பைக்கை டெலிவிரி பெறுவதற்கு முன்னர், ஜெயசூர்யாவின் மகன் அத்வைத் (Advaith) பைக்கை ஓட்டி பார்க்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது. நடிகர் ஜெயசூர்யா தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்திருப்பது 'சால்டே ஹிமாலயன் சால்ட்' (Salte Himalayan Salt) என்கிற பெயிண்ட்டை கொண்ட ஹிமாலயன் 450 பைக் ஆகும்.

இந்த பெயிண்ட் ஆப்ஷனில் பைக்கை சுற்றிலும் சிவப்பு நிறத்திலான கோடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பெயிண்ட் ஆப்ஷனில் பைக்கின் அலாய் சக்கரங்களின் ரிம்களில் கூட சிவப்பு நிற ஹைலைட்களை காணலாம். இது இல்லாமல், இன்னும் பல்வேறு நிறங்களிலான பெயிண்ட் ஆப்ஷன்களில் ஹிமாலயன் 450 பைக் விற்பனை செய்யப்படுகிறது.

jayasuriya s son buys himalayan 450

முன்பு விற்பனையில் இருந்த ஹிமாலயன் 411 பைக்கிற்கு பதிலாக 2023ஆம் ஆண்டின் இறுதியில் ஹிமாலயன் 450 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. பெயருக்கேற்ப, இந்த பைக்கில் 450சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. பேஸ், பாஸ், சம்மிட் மற்றும் ஹன்லே பிளாக் என 4 விதமான வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.85 லட்சத்தில் இருந்து ரூ.2.98 லட்சம் வரையில் உள்ளன. இந்த அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாக 452சிசி லிக்யுடு-கூல்டு 'ஷெர்பா' என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது. இந்த பைக்கில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.91 வினாடிகளில் எட்டிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்காக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 விளங்குகிறது. இருப்பினும், இளைஞர்கள் பலரால் வாங்க முடியாத எட்டாக்கனியாகவே ஹிமாலயன் 450 உள்ளது. ஆனால், இதனை மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் மகன் அத்வைத் எளிதாக நிஜமாக்கி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2025, 20:10 [IST]
English summary
Actor jayasuriya son advaith buys royal enfield himalayan 450 bike
மேலும்... #celebrity bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X