மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

பிரபல நடிகர் ஒருவர் தற்போது புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

புதிய தலைமுறை தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போதில் இருந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக புதிய தலைமுறை தார் இருந்து வருகிறது. இது திறன்மிக்க ஆஃப் ரோடு எஸ்யூவி ஆகும். அதனை நிரூபிக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் நிறைய இருக்கின்றன.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

இந்தியாவின் பிரபல மனிதர்கள் பலரும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி மீது ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இதில் ஒரு சிலர் இந்த எஸ்யூவியை வாங்கவும் செய்துள்ளனர். இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு பிரபலம் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை தனது கராஜில் புதிதாக சேர்த்துள்ளார்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

தற்போது புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்கியிருப்பது ஜெயசூர்யா ஆகும். இவர் மலையாள திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உள்ளார். தனது குடும்பத்தினருடன் இவர் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை டெலிவரி எடுத்துள்ளார். நடிகர் ஜெயசூர்யா இந்த புதிய எஸ்யூவியை டெலிவரி எடுக்கும்போது அவரது மனைவி, மகன் மற்றும் மகள் உடனிருந்தனர்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

டீலர்ஷிப்பில் டெலிவரி எடுத்த பிறகு, நடிகர் ஜெயசூர்யா தனது புதிய எஸ்யூவியில் ஒரு ரவுண்டு வரவும் செய்தார். முன்பு இருந்ததை காட்டிலும் புதிய தார் தற்போது மிகவும் மேம்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 4×4 எஸ்யூவி கார்களில் ஒன்றாக புதிய தலைமுறை மஹிந்திரா தார் திகழ்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் வெகு சமீபத்தில் புதிய ஸ்கார்பியோ என் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இந்த புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம்தான் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் ஏராளமான புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், க்ரூஸ் கண்ட்ரோல், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை சப்போர்ட் செய்யக்கூடிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

அத்துடன் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் உட்புறத்தில் நிறைய இடவசதியும் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. 2.0 லிட்டர் mStallion டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் ஆகிய 2 இன்ஜின் ஆப்ஷன்களை புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பெற்றுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

இதில் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஹெச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் இந்த எஸ்யூவியின் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஹெச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த 2 இன்ஜின்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்கியிருக்கும் ஒரே நடிகர் ஜெயசூர்யா கிடையாது. அவருக்கு முன்பாகவும் நிறைய நடிகர்கள் இந்த காரை வாங்கியுள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ், மலையாள நடிகை அனு சித்தாரா உள்பட பலரும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்கியுள்ளனர். தற்போது புதிய தலைமுறை தார் எஸ்யூவியை வாங்கியிருக்கும் நடிகர் ஜெயசூர்யா கார் ஆர்வலர் ஆவார்.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

அவரிடம் புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு முன்னதாகவே நிறைய கார்கள் இருக்கின்றன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் பி-க்ளாஸ் (Mercedes Benz B-Class), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC), ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF), மினி கூப்பர் (Mini Cooper) மற்றும் லெக்ஸஸ் இஎஸ்300ஹெச் (Lexus ES300H) ஆகிய கார்கள் குறிப்பிடத்தக்கவை.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நடிகர்கள்! இப்ப ஒருத்தர் வாங்கியிருக்காரு! யார் தெரியுமா?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் மிகவும் நீண்டதாக உள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகளவில் முன்பதிவு செய்திருப்பதும், செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டிருப்பதும்தான் இதற்கு முக்கியமான காரணங்கள். காத்திருப்பு காலம் அதிகமாக இருந்தாலும் கூட வாடிக்கையாளர்கள் பலர் தார் எஸ்யூவியை வாங்கும் முடிவில் உறுதியாக உள்ளனர்.

Article Published On: Thursday, September 1, 2022, 9:02 [IST]
English summary
Actor jayasurya buys new mahindra thar suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+