நேரா ஷோரூமுக்கு குடும்பத்துடன் வந்தது இந்த பிரபல நடிகரா! வீட்டிற்கு ஓட்டி சென்ற காரில் இவ்வளவு மேட்டரு இருக்கா
நடிகர் ஜெயசூர்யா (Jayasurya), பிரபல மலையாள நடிகர். தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெயசூர்யா புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ரேஞ்ச் ரோவரில் எந்த காரை இவர் வாங்கியுள்ளார்? என்பதையும், அதன் சிறப்பம்சங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்வப்னகூடு, புலிவால் கல்யாணம் மற்றும் சதிகாத சந்து உள்ளிட்டவை நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வெளிவந்த பிரபலமான மலையாள திரைப்படங்கள் ஆகும். ஆனால், நம் தமிழ் மக்களுக்கு வடிவேலு உடன், வாய் பேச முடியாதவராக இவர் நடித்த திரைப்படம் தான் ஞாபகத்தில் இருக்கும். நடிகர் ஜெயசூர்யாவுக்கு 2004இல் சரிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

பொதுவாகவே மலையாள நடிகர்கள் ஆட்டோமொபைல் கார் மற்றும் பைக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இதில் நடிகர் ஜெயசூர்யா மட்டும் என்ன விதிவிலக்கா? இவரிடமும் மெர்சிடிஸ்-பென்ஸ் பி-கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்.எஃப் மற்றும் லெக்ஸஸ் இ.எஸ்300எச் என பல்வேறு சொகுசு கார்கள் உள்ளன. இந்த நிலையில், மற்றுமொரு புதிய காராக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபியை இந்த நடிகர் வாங்கி உள்ளார்.
கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள ஒரு ஷோரூமுக்கு குடும்பத்துடன் வந்து இந்த ரேஞ்ச் ரோவர் காரை நடிகர் ஜெயசூர்யா டெலிவிரி எடுத்துள்ளார். அப்போது ஷோரூமில் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன. ஆட்டோபயோகிராபி என்பது ரேஞ்ச் ரோவர் கார் வேரியண்ட்களில் உள்ள ஒரு வேரியண்ட் ஆகும். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அதிக விலை கொண்ட டாப் வேரியண்ட் ஆகும்.

மற்ற ரேஞ்ச் ரோவர் கார்களை போன்று, இந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரையும் லேண்ட் ரோவர் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டீசல் என்ஜின் உடன் இந்த காரை நடிகர் ஜெயசூர்யா வாங்கியுள்ளார். டீசல் என்ஜின் உடன் ஆட்டோபயோகிராபி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.99 கோடியில் இருந்து ரூ.3.28 கோடி வரையில் தற்சமயம் உள்ளன.
நடிகர் ஜெயசூர்யாவின் காரில் 3.0 லிட்டர் இன்லைன்-6 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 345 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றின் உதவியுடன், இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடலாம்.

ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி ஆனது ஓர் 4-வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்ட லக்சரி கார் ஆகும். ஆதலால், இந்த எஸ்யூவி காரை தைரியமாக ஆஃப்-ரோட்டிற்கு கொண்டு செல்லலாம். இதற்கு இணையாக, இந்த காரின் உட்பக்கத்தில் மிகவும் சொகுசான பயண அனுபவம் கிடைக்கும். பொதுவாகவே, ரேஞ்ச் ரோவர் கார்களில் உட்பக்க கேபின் உயர் தரத்தில் வடிவமைக்கப்படுவது வழக்கம்.
நடிகர் ஜெயசூர்யா வாங்கியிருக்கும் ஆட்டோபயோகிராபி காரின் உள்ளே 13.1-இன்ச் பிவி புரோ டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 13.7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றுடன், லேண்ட் ரோவரின் டெர்ரன் ரெஸ்பான்ஸ் 2 தொழிற்நுட்பம், பனோராமிக் சன்ரூஃப், 19-ஸ்பீக்கர் 800 வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-ஃபங்க்சன் ஸ்டேரிங் சக்கரமும் இந்த காரில் இடம்பெறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, ரேஞ்ச் ரோவர் கார்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே ஓர் ஈர்ப்பு உள்ளது. மலையாள மோலிவுட் சினிமா உலகிலும் மோகன்லால், பிரித்விராஜ், ஃபஹத் ஃபாசில் மற்றும் டோவினோ தாமஸிடம் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன. தற்போது நடிகர் ஜெயசூர்யாவும் புதியதாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கி உள்ளார். ரேஞ்ச் ரோவர் கார்களில் ஆட்டோபயோகிராபி மாடல் ஆனது சற்று விலைமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









