என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
மிகப் பெரிய பைக் காதலராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் நடிகர் ஜான் அபிரகாம். இவரிடத்தில் ஏகப்பட்ட விலை உயர்ந்த மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய பைக் (Bike)-குகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே இந்த நடிகர் அப்ரில்லா ஆர்எஸ் 457 ஸ்போர்ட்ஸ் பைக் (Aprilia RS457 Sports Bike)-கை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்திலேயே அப்ரில்லா (Aprilia) நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் ஜான் ஆபிரகாம் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அவர் அப்ரில்லா ஆர்எஸ் 457 ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை நடிகரும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "மோட்டார் சைக்கிள் எனது மதம். இதுவே என் வாழ்க்கை. நான் அப்ரில்லா பந்தயக் குழுவில் இணைந்திருப்பதை அறிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும், அப்ரில்லாவின் ஆர்எஸ்வி4 (Aprilia RSV4) பைக்கிற்கு அடுத்தபடியாக ஆர்எஸ் 457-யையும் எனது கேரேஜில் இணைத்திருக்கின்றேன்" என்றார்.
ஆர்எஸ்வி4 ஆர்எஃப் சூப்பர் பைக் அவர் வைத்திருக்கும் மிக மிக விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 25 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது ஓர் 1,078 சிசி திறன் கொண்ட எஞ்சினுடைய பைக் ஆகும்.
195 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். இது ஓர் லிமிடெட் எடிசன் பைக்காகும். டிராக் பயன்பாட்டிற்கு என்றே பிரத்யேகமாக அப்ரில்லா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட பைக் மாடலே இதுவாகும். இத்தகைய பைக்கையே தனக்கு சொந்தமானதாக வைத்திருக்கின்றார் ஜான் ஆபிரகாம்.
இதுதவிர, 1,340 சிசி திறனை வெளியேற்றக் கூடிய எஞ்சினைக் கொண்ட சுஸுகி ஹயபுசா, யமஹா வி-மேக்ஸ் (Yamaha V-Max 60th Anniversary), கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ் 14ஆர், ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர், யமஹா ஆர்1 டுகாட்டி பனிகேல் வி4 உள்ளிட்ட பைக் மாடல்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்துடனேயே தற்போது புதிதாக அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது இந்திய சந்தையில் கேடிஎம் ஆர்சி 390 மற்றும் நிஞ்சா 400 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இது ஓர் 457 சிசி பைக்காகும். பாரல்லல் ட்வின் சிலிண்டர் செட்-அப்பையே இதன் எஞ்சின் கொண்டிருக்கின்றது.
இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 48 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ. 4.10 லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதிகம் பிரீமியம் தர அம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த அளவு அதிக விலைக்கு அப்ரில்லா ஆர்எஸ்457 விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த பைக்கில் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 220 மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதோபோல், மிக சிறந்த ரைடு அனுபவத்திற்காக முன் பக்கத்தில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இந்த பைக்கை அப்ரில்லா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கிற்கு சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, ஜான் ஆபிரகாம் போன்ற பைக் காதலர்கள் மத்தியில் இதற்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








