எல்லா நடிகரும் இந்த மாதிரி இருந்துவிட்டால் எப்படி இருக்கும்...!! ரசிகர் இதை வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டார்!
ஜான் ஆபிரகாம் (John Abraham), பிரபலமான பாலிவுட் நடிகர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், அதில் ஒரு ரசிகர், தான் வாங்கிய புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை ஜான் ஆபிரகாமிடம் காட்டி ஆசி பெற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலிவுட் ஸ்டார்கள் பலர், மோட்டார்சைக்கிள் பிரியர்களாக இருக்கின்றனர். இதனாலேயே அவர்களிடத்தில் ஏராளமான விலையுயர்ந்த பைக்குகளும், ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் உள்ளன. அதேநேரம், ஷூட்டிங் ஸ்பாட்டில் யாராவது கவர்ச்சிகரமான பைக்குகளை கொண்டு வந்தால், அவற்றை ஓட்டி பார்க்கும் சினிமா நடிகர், நடிகைகளையும் பார்த்துள்ளோம்.

இந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமிடம் அவரது ரசிகர் ஒருவர் தனது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை காட்டி ஆசி பெற்றுள்ளார். பாலிவுட் சினிமா வட்டாரத்தில் கார்களை காட்டிலும் விலையுயர்ந்த பைக்குகள் மீது அதிக ஆர்வத்துடன் இருப்பவர் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆவார்.
இதனாலேயே, இவரது திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் பைக் ஓட்டுவது போன்ற காட்சிகளில் ஜான் ஆபிரகாமை அதிகமாக பார்க்க முடியும். இத்தகைய நடிகரிடத்தில் அவரது ரசிகர், தான் வாங்கிய புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை காட்டி வாழ்த்து பெற்றிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பலரும் லைக் & ஷேர் செய்து வருகின்றனர்.

ஜான் ஆபிரகாமிடம் ஹிமாலயன் பைக்கை காட்டி ஆசி பெற்றுள்ள இந்த ரசிகரின் பெயர் அக்ஷய் கெடாரி ஆகும். ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் 2ஆம் ஜென்ரேஷன் தற்சமயம் விற்பனையில் உள்ளது. ஆனால், ஜான் ஆபிரகாமின் இந்த ரசிகர் முதல் ஜென்ரேஷன் மாடலை வாங்கியுள்ளார். அதாவது, 2வது ஜென்ரேஷன் ஹிமாலயன் பைக் விற்பனைக்கு வந்த போதிலும், முதல் ஜென்ரேஷன் இன்னமும் தொடர்ந்து விற்பனையில் உள்ளது.
ரசிகர் அக்ஷய் குமார் தனது புதிய ஹிமாலயன் 411 பைக்கை காட்டியதும், அதில் ஏறி அமர்ந்த நடிகர் ஜான் ஆபிரகாம், பின்னர் பைக்கின் பெட்ரோல் டேங்கில் தனது கையெழுத்தை போட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்பின், பைக் பின்னால் இருக்க, ரசிகர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து சில பல போட்டோக்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடிகர் ஜான் ஆபிரகாம் சென்றார்.

2வது ஜென்ரேஷன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விற்பனைக்கு வந்துவிட்டதால், முதல் ஜென்ரேஷனின் விற்பனை நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், இப்போது வரையில் முதல் ஜென்ரேஷன் ஹிமாலயன் தொடர்ந்து விற்பனையில் உள்ளது. முதல் ஜென்ரேஷனுக்கும், 2வது ஜென்ரேஷனுக்கும் இடையேயான மிக பெரிய வித்தியாசம் அவற்றின் என்ஜின்களாகும்.
ஏனெனில், முதல் ஜென்ரேஷன் ஹிமாலயன் 411சிசி என்ஜினையும், 2வது ஜென்ரேஷன் மாடல் 450சிசி என்ஜினையும் பெறுகின்றன. நடிகர் ஜான் ஆபிரகாமின் ரசிகர் வாங்கியிருக்கும் முதல் ஜென்ரேஷன் ஹிமாலயன் பைக்கில் 411சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் & ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 24.5 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ஜான் ஆபிரகாமிடம், தான் வாங்கிய புதிய பைக்கை காட்டி ஆசி பெறும் 3வது ரசிகர் இவர் ஆவார். இதற்குமுன், ரசிகர் ஒருவர் தனது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 ஆர் பைக்கை காட்டி ஜான் ஆபிரகாமிடம் வாழ்த்து பெற்றிருந்தார். நடிகர் ஜான் ஆபிரகாமும் எந்தவொரு முக சுளிப்பும் இன்றி ரசிகர்களின் பைக்குகளுக்கு தனது ஆட்டோகிராஃபை போட்டு கொடுக்கிறார். இது, ஜான் ஆபிரகாமின் பைக்குகள் மீதான ஆர்வத்தை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









