விலையுயர்ந்த பைக்கில் யாருக்கும் தெரியாமல் சென்றது இந்த பிரபல நடிகரா? ஃபேன்ஸ் கண்டுபிடிச்சிட்டாங்க!
ஜான் ஆபிரகாம் (John Abraham), பிரபல பாலிவுட் நடிகர் என்பது நமக்கு தெரியும். மற்ற பாலிவுட் ஸ்டார்களை போன்று இவரிடம் நிறைய சொகுசு கார்கள் & பைக்குகள் உள்ளன. இருப்பினும், புதுசு, புதுசாக விலையுயர்ந்த வாகனங்களை வாங்கி குவிப்பதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், புதியதாக சுமார் ரூ.32 லட்சத்தில் விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்கை ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ளார். அந்த புதிய பைக்கில் இந்த நடிகர் சாலையில் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
சினிமா நடிகர், நடிகையருக்கு விலையுயர்ந்த கார் & பைக்குகள் என்றாலே தனி ஆர்வம் என்பது நமக்கு தெரியும். குறிப்பாக, பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மாதத்திற்கு ஒரு வாகனத்தை புதியதாக வாங்குகின்றனர். பாலிவுட் ஸ்டார்கள் பெரும்பாலும் வாங்குவது விலையுயர்ந்த லக்சரியான கார்களாகவே இருக்கும். ஆனால், ஒரு நடிகர் விலையுயர்ந்த மற்றும் பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிள்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

அவர்தான், பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆவார். இவரிடம், பல இலட்சம் விலை கொண்ட பைக்குகள் ஏகப்பட்டவை இருப்பதை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். இந்த வரிசையில், புதியதாக ஏப்ரிலியா ஆர்.எஸ்.வி4 1100 ஃபேக்ட்ரி அல்ட்ரா டார்க் எடிசன் பைக்கை இவர் வாங்கியுள்ளார். ஏப்ரிலியா ஆர்.எஸ்.வி4 1100 ஃபேக்ட்ரி மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிசனாக இது விளங்குகிறது.
இந்த பைக்கின் விலையை கேட்டால், உங்களுக்கு மயக்கமே வந்துவிடும். ஏனெனில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது சுமார் ரூ.32 லட்சமாக உள்ளது. ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் எல்லாம் சேர்த்தால், ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இன்னும் சில இலட்ச ரூபாய்களை சேர்த்தால், இந்த விலையில் ஒரு பென்ஸ் காரை கூட வாங்கிவிடலாம்.

அந்த அளவிற்கு விலைமிக்க இந்த ஏப்ரிலியா பைக்கை ஜான் ஆபிரகாம் சாலையில் ஓட்டிவரும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவின் மூலம் பார்க்கும்போது, முற்றிலும் கருப்பு நிறத்திலான ஏப்ரிலியா ஆர்.எஸ்.வி4 1100 ஃபேக்ட்ரி பைக்கை இந்த நடிகர் வாங்கியுள்ளார். வீடியோவில், பைக்கில் நம்பர் பிளேட் இருப்பதுபோல் தெரியவில்லை.
நடிகர் ஜான் ஆபிரகாம் மும்பையில் உள்ள தனது அலுவலகத்திற்கு இந்த ஏப்ரிலியா பைக்கில் செல்லும்போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜான் ஆபிரகாமின் புதிய ஏப்ரிலியா ஆர்.எஸ்.வி4 1100 ஃபேக்ட்ரி அல்ட்ரா டார்க் எடிசன் பைக் பெயருக்கு ஏற்ப முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தாலும், பைக்கின் அலாய் சக்கரங்கள் கோல்டு நிறத்தில் உள்ளன. பைக்கின் மேலும் சில பகுதிகளிலும் கோல்டு நிறத்தை பார்க்க முடிகிறது.
இந்தியாவில் ஏப்ரிலியா ஆர்.எஸ்.வி4 1100 பைக் அல்ட்ரா கோல்டு, டைம் அட்டாக் மற்றும் ஸ்பீடு வொயிட் கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இத்தாலி நாட்டை சேர்ந்த சூப்பர் பைக் நிறுவனமான ஏப்ரிலியா 2024 ஆர்.எஸ்.வி4 1100 ஃபேக்ட்ரி பைக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதற்குள் நடிகர் ஜான் ஆபிரகாம் பைக்கை டெலிவிரி பெற்றுள்ளார் என்றால், ஏப்ரல் மாதத்திலேயே இவர் பைக்கை புக் செய்திருக்க வேண்டும்.
இந்த பவர்ஃபுல்லான இத்தாலியன் ஸ்டைல் பைக்கில் 1,099சிசி லாங்கிட்யூடினல் வி4 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகபட்சமாக 13,000 ஆர்பிஎம்-இல் 214 பிஎச்பி மற்றும் 10,550 ஆர்பிஎம்-இல் 125 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் சிறப்பான மிட்-ரேஞ்ச் மற்றும் டாப்-ரேஞ்ச் பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இரட்டை-பீம் அலுமினியம் ஃப்ரேமில் உருவாக்கப்படும் இந்த பைக்கின் பின்பக்கத்தில் அண்டர்-பிரேஸ்டு ஸ்விங்கார்ம் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ள 3வது ஏப்ரிலியா பைக் இதுவாகும். இந்தியாவில் விலை குறைவான ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கையும் இவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரலில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பைக்கை அடுத்த மே மாதத்தில் சாலையில் ஓட்டிக் கொண்டு செல்கிறார் என்றால், நடிகர் ஜான் ஆபிரகாம் எந்த அளவிற்கு சூப்பர் பைக்குகள் மீது ஆர்வத்துடன் இருக்கிறார் என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









