எவ்வளவு பெரிய நடிகர்... கண்ணை காட்டி இருந்தால் இதை செய்ய பல பேர் இருக்காங்க!! அவரே ஸ்பாட்டுக்கு வந்துட்டாரு!

ஜூனியர் என்டிஆர் (Jr NTR) என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் நந்தமூரி தாரக ராமாராவ் விலையுயர்ந்த புத்தம் புதிய மெர்சிடிஸ்-மேபக் (Mercedes-Maybach) காரில் காட்சி தந்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அப்படி எந்த மாதிரியான மெர்சிடிஸ் காரை இவர் வாங்கியுள்ளார்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நந்தமூரி தாரக ராமாராவ், இப்படியொரு பெயரில் நடிகர் இருப்பது நம் தமிழ் மக்கள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், ஜூனியர் என்டிஆர் என சொன்னால் இந்தியா முழுவதுமே பலருக்கு பரீட்சையமான பெயர் ஆகும். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் நடிகர் ஜூனியர் என்டிஆரை இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.

junior ntr buys mercedes-maybach s580

ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் அடுத்ததாக தேவாரா என்கிற திரைப்படம் திரைக்குவர உள்ளது. பாகுபலி, புஷ்பா திரைப்படங்களை போன்று பாகங்களாக உருவாகும் தேவாரா படத்திற்கு நம் ஊர் அனிருத் தான் இசையமைத்துள்ளார். கொராடாலா சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரில் காட்சி தந்துள்ளார்.

மற்ற சினிமா நடிகர்களை போல், ஜூனியர் என்டிஆரும் விலையுயர்ந்த கார் & பைக்குகளின் மீது ஆர்வம் கொண்டவர். தற்போது இவர் காட்சி தந்திருப்பது மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் எஸ்580 என்கிற லக்சரி காரில் ஆகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மெர்சிடிஸ்-மேபக் காரை சமீபத்தில்தான் ஜூனியர் என்டிஆர் வாங்கி உள்ளார்.

junior ntr buys mercedes-maybach s580

புதியதாக வாங்கிய இந்த காரை ஆர்டிஓ-இல் பதிவு செய்வதற்காக ஜூனியர் என்டிஆர் நேரில் வந்த போது, அவரை காண்பதற்காக ரசிகர்கள் குவிந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், ஜூனியர் என்டிஆர் கருப்பு நிறத்தில் வாங்கியுள்ள அவரது மெர்சிடிஸ் மேபக் எஸ்-கிளாஸ் எஸ்580 காரும் காட்சி தந்துள்ளது. ஹைதராபாத்துக்கு அருகே உள்ள கையிர்தாபாத்தில் இருக்கும் ஒரு ஆர்டிஓ அலுவலகத்துக்கு ஜூனியர் என்டிஆர் தனது இந்த புதிய காரை பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஜூனியர் என்டிஆரின் வீடு அமைந்திருப்பது இந்த கையிர்தாபாத்தில் தான். இவர் வாங்கியிருக்கும் மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் எஸ்580 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மெர்சிடிஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த லக்சரி செடான் கார் எஸ்-கிளாஸ் ஆகும். எஸ்-கிளாஸ் கார்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் பிராண்டில் இருந்தும், அதேபோன்று மெர்சிடிஸ்-மேபக் பிராண்டில் இருந்தும் விற்பனை செய்யப்படுகின்றன.

junior ntr buys mercedes-maybach s580

பென்ஸ் பிராண்டை காட்டிலும், மேபக் பிராண்டில் கிடைக்கும் மெர்சிடிஸ் கார்கள் இன்னும் விலைமிக்கவை ஆகும். இதில், எஸ்-கிளாஸ் செடான் மாடலும் விதிவிலக்கு கிடையாது. மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் கார் இந்தியாவில் தற்சமயம் எஸ்580 மற்றும் எஸ்680 என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஹைப்ரீட் வேரியண்ட்டான எஸ்580 -ஐ நடிகர் ஜூனியர் என்டிஆர் வாங்கியுள்ளார்.

இந்த வேரியண்ட்டில், 4.0 லிட்டர் எம்176 ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் உடன் 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இவ்வாறு, என்ஜின் + எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் கலந்து வழங்கப்படுவதினாலேயே இதனை ஹைப்ரீட் வேரியண்ட் என்கிறோம். மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் எஸ்580 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.69 கோடியாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனை காட்டிலும் விலைமிக்க எஸ்680 வேரியண்ட் விற்பனையில் இருந்தாலும், குறிப்பாக எஸ்580 வேரியண்ட்டை ஏன் நடிகர் ஜூனியர் என்டிஆர் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ஏனெனில், இவரிடம் நிச்சயமாக எஸ்680 வேரியண்ட்டை வாங்கும் அளவிற்கும் பணம் இருக்கும். ஒருவேளை, ஹைப்ரீட் காரை வாங்க வேண்டும் என்கிற ஆசையில் இந்த வேரியண்ட்டை இவர் வாங்கி இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2024, 23:58 [IST]
English summary
Actor junior ntr buys mercedes maybach s class s580 check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X