Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிக மானியம், சலுகை என அதிரடி காட்டும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்... புகழ்ந்து தள்ளிய கமல் ஹாசன்..
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புகழ்ந்து தள்ளியிருக்கின்றார். இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வாகன அழிப்பு கொள்கையை மத்திய அரசு 2021 பட்ஜெட்டில் அறிவித்திருக்கின்றது. 15 ஆண்டுகள் பழைய வர்த்தக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகள் பழைய தனி நபர் வாகனங்களை முற்றிலுமாக பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சியின் அடிப்படையில் இந்த நடவடிக்கையில் மத்திய அரசு களமிறங்கியிருக்கின்றது.

மறுபக்கம், எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணியில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக இப்பணியில் டெல்லி அரசு சற்று அதிகளவில் தீவிரம் காட்டி வருகின்றது.

இதற்காக 'ஸ்விட்ச் டெல்லி' (Switch Delhi) எனும் திட்டத்தையும் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடங்கியிருக்கின்றார். இதனடிப்படையில் பல்வேறு சிறப்பு சலுகைகளை புதிய மின் வாகனங்களை வாங்குவோர்க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களை மின் வாகனங்களின் பக்கம் கவர உதவியாக இருக்கும்.

அதேசமயம், பொதுமக்களை மட்டுமின்றி பொது போக்குவரத்தில் பயன்படுத்தும் வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் அர்விந்த கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து, அரசின் பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களைக் களமிறக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆறு மாதங்களுக்குள் இந்த பணியை முடிக்க இருப்பதாக டெல்லி அரசு அண்மையில் தகவல் வெளியிட்டது. இவரின் இந்த திட்டத்திற்கு பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங்களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால். மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார்.

மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்" என கூறியிருக்கின்றார்.

கமலஹாசனின் இந்த டுவிட் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியைச் சார்ந்தவர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. மேலும், பலர் கமலின் இந்த கருத்துக்கு எதிர் கருத்தும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். விவாசாயிகளின் போராட்டத்தை முன் வைத்து கருத்துகள் ஏதேனும் உண்டா எனவும் அவரைக் கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.