பிக் பாஸ் செட்டுக்கு 12 லட்ச ரூபா பைக்ல வந்தது அவரா! நாளைக்கு நடக்கற ஃபைனல்ல திடீர்னு வீட்டுக்குள்ள வர போறாரா!
பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு, இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் தங்களின் பிரபலத்தை மேலும் அதிகரித்து கொள்ள பலரும் விரும்புகின்றனர். இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு சில ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. புகழ் மற்றும் பணம் என இரண்டும் ஒரே இடத்தில் ஒரு சேர கிடைப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மறுபக்கம் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சண்டைகள், அங்கு வழங்கப்படும் டாஸ்க்குகள், இறுதியில் வெற்றி பெற போவது யார்? உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் தற்போது நடைபெற்று கொண்டுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது நமக்கு நாளை (ஜனவரி 19) தெரிய வந்து விடும். நாளை ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் வேறு என்பதால், பிக் பாஸ் ஃபைனல் (Finale) மீது ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி கொண்டுள்ளது.
இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் (Tamil) மட்டுமல்லாது, பல்வேறு மொழிகளிலும் நடைபெறுகிறது. இதில், ஹிந்தி (Hindi) மிகவும் முக்கியமானது ஆகும். தமிழில் தற்போது நடைபெற்று கொண்டிருப்பது 8வது சீசன் season 8) ஆகும். மறுபக்கம் ஹிந்தியில் நடைபெற்று கொண்டிருப்பது 18வது சீசன் (Season 18) ஆகும்.

இந்த 2 நிகழ்ச்சிகளின் ஃபைனலும் நாளைதான் நடைபெறவுள்ளது. இதில், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இருந்தே பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகரான கன்வர் தில்லான் (Kanwar Dhillon) பேசு பொருளாக இருந்து வருகிறார். இத்தனைக்கும் அவர் தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை.
ஆரம்பத்தில் கன்வர் தில்லான் பிக் பாஸ் சீசன் 18-ல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் அவர் பேசு பொருளாக மாறியதற்கு காரணம் உள்ளது. பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் அலைஸ் கௌசிக் (Alice kaushik) என்ற நடிகை பங்கு பெற்றார். இவரும், கன்வர் தில்லானும் பாண்டியா ஸ்டோர் (Pandya Store) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றாக நடித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கன்வர் தில்லான் தன்னிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதாக நடிகை அலைஸ் கௌசிக் கூறினார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே வழங்கிய பேட்டிகளில், கன்வர் தில்லான் அதனை மறுத்தார். அத்துடன் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக சர்ச்சை உருவானது. இந்த சூழலில் கன்வர் தில்லானை பற்றி தற்போது இங்கே பேசி கொண்டிருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. பிக் பாஸ் சீசன் 18 ஃபைனல் நாளை நடைபெறும் நிலையில், அதன் செட்டிற்கு வெளியே கன்வர் தில்லான் பைக்கில் வலம் வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், கன்வர் தில்லானுடன் நாம் பார்ப்பது, கவாஸாகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் (Kawasaki Ninja 1000SX), பைக் ஆகும். ஆனால் இந்த பைக் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. கடந்த 2024ம் ஆண்டில் இந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.
இதற்கு பதிலாக கவாஸாகி நின்ஜா 1100எஸ்எக்ஸ் (Kawasaki Ninja 1100SX) என்ற புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இருப்பினும் கன்வர் தில்லான் பயன்படுத்திய கவாஸாகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் பைக், விற்பனையில் இருந்த சமயத்தில் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக இருந்தது.
அதாவது கடைசியாக 10.89 லட்ச ரூபாய் முதல் 12.20 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கவாஸாகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 1,043 சிசி இன்ஜின் ஆகும்.
அதிகபட்சமாக 10 ஆயிரம் ஆர்பிஎம்மில் 140.13 பிஹெச்பி பவரையும், 8 ஆயிரம் ஆர்பிஎம்மில் 111 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் என இந்த பைக்கில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கன்வர் தில்லான் பயன்படுத்திய கவாஸாகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் பைக், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற, அதே நேரத்தில் ஸ்டைலான ஒரு பைக் ஆகும். செயல்திறன் மிக்க பைக்குகளில் அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் சூப்பர் பைக் ஆர்வலர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே பிக் பாஸ் செட்டிற்கு கன்வர் தில்லான் மிகவும் விலை உயர்ந்த பைக்கில் வந்தது ஏன்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள ஃபைனலில் கன்வர் தில்லான் திடீரென தோன்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








