விமானத்தில் சாதாரண பயணிகளில் ஒருவராக வந்தது இவ்ளோ பெரிய ஆளா! திடீர்னு பாத்ததும் எல்லாரும் ஸ்டண் ஆய்ட்டாங்க!

என்னதான் காலம் மாறி விட்டாலும் கூட, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது இந்திய மக்கள் பலருக்கு இன்னமும் பெருங்கனவுதான். அப்படி பல்வேறு போராட்டங்களை கடந்து விமானத்தில் பறக்கும்போது, விளையாட்டு வீரர்களையோ, தொழில் அதிபர்களையோ அல்லது சினிமா நட்சத்திரங்களையோ உங்களால் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.

ஏனெனில் சாமானிய மக்கள் பயணம் செய்வது பெரும்பாலும் எகானமி (Economy) வகுப்பு இருக்கைகளாகதான் இருக்கும். ஆனால் நாங்கள் மேலே கூறியுள்ள பிரபலங்களோ, ஃபர்ஸ்ட் க்ளாஸ் (First Class) வகுப்பு இருக்கைகளில்தான் பயணம் செய்வார்கள். பொதுவாக விமானங்களில் ஃபர்ஸ்ட் க்ளாஸ் வகுப்பு இருக்கைகளுக்கான கட்டணம் மிகவும் அதிகம்.

Kartik Aaryan Flies Economy Class

அதற்கு ஏற்ப அங்கு பயணம் செய்பவர்களுக்கு சொகுசான பயணமும், வசதிகளும் கிடைக்கும். சாமானிய மக்களால் ஃபர்ஸ்ட் க்ளாஸ் வகுப்பு இருக்கைகளில் பயணம் செய்வது சற்று சிரமமான காரியம்தான். அப்படி இருக்கும்போது, சாதாரண எகானமி வகுப்பு இருக்கைகளில் பயணம் செய்யும்போது, திடீரென ஒரு பிரபலத்தை காண நேரிட்டால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு அனுபவம் சமீபத்தில் ஒரு விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் ஒரு உள்நாட்டு விமானத்தில், கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) சாதாரண எகானமி வகுப்பு இருக்கைகளில் பயணம் செய்துள்ளார். இவர் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆவார்.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், நடிகர் கார்த்திக் ஆர்யன் ஒரு விமானத்தின் உள்ளே தனது இருக்கையை தேடி அமர்வதை நம்மால் காண முடிகிறது. திடீரென கார்த்திக் ஆர்யனை பார்த்ததும், விமான பயணிகள் அனைவரும் உற்சாகமடைந்து விட்டனர்.

இதில் ஒருவர் வீடியோ எடுக்க அது தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால் நடிகர் கார்த்திக் ஆர்யன், விமானத்தில் எகானமி வகுப்பு இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்வது இது முதல் முறை கிடையாது. கடந்த 2022ம் ஆண்டு, ஜோத்பூர் நகரில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் கூட நடிகர் கார்த்திக் ஆர்யன் எகானமி வகுப்பு இருக்கைகளில்தான் பயணம் செய்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கார்த்திக் ஆர்யனை போல், நடிகை கீர்த்தி சனோனும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விமானத்தின் எகானமி வகுப்பு இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்திருந்தார். அப்போது அவர் ஒரு குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தார். இவர் சமீபத்தில் வெளியாகி, கடுமையான விமர்சனங்களை சந்தித்து கொண்டிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் நடித்தவர் ஆவார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் பிரபலங்கள், சாதாரண மனிதர்களை போல், விமானத்தில் எகானமி வகுப்புகளில் பயணம் செய்வது பெரிய விஷயம்தான். இது அவர்களின் எளிமையை காட்டுகிறது என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. அதுவும் கார்த்திக் ஆர்யன் போன்ற நபர்கள் மீண்டும் மீண்டும் எகானமி வகுப்பு இருக்கைகளில் பயணம் செய்வது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 27, 2023, 23:49 [IST]
English summary
Actor kartik aaryan flies economy class viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+