செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

பிரபல இளம் நடிகர் ஒருவர் புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

திரைப்பட நடிகர், நடிகைகள் என்றாலே மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவது சர்வ சாதாரணமான விஷயம்தான். மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை திரைப்பட நடிகர், நடிகைகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். கார்கள் மட்டுமல்லாது, பைக்குகளும் திரையுலகினரின் விருப்பமாக உள்ளது.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

அதிலும் ராயல் என்பீல்டு பைக்குகள் என்றால் சொல்லவே வேண்டாம். பொதுவாகவே திரைப்பட நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என்றில்லாமல், ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில் பிரபல நடிகர் ஒருவர் தற்போது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்கை வாங்கியுள்ளார்.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) நேற்று (நவம்பர் 22) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இது அவரது 31வது பிறந்த நாள் ஆகும். தனது பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திக் ஆர்யன் புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கை வாங்கியுள்ளார். தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு கார்த்திக் ஆர்யன் இந்த புதிய பைக்கில்தான் வந்தார்.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. 350 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியலில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 முன்னணியில் உள்ளது. கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடல் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், 349 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிலும் கூட இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.3 ஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் அதிர்வுகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்த புதிய தலைமுறை மாடலின் மிகப்பெரிய அப்டேட்டாக கருதப்படுகிறது.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

அதேபோல் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியையும் இந்த புதிய தலைமுறை மாடல் பெற்றுள்ளது. இந்த வரிசையில் ஸ்விட்ச்கியரையும் ராயல் என்பீல்டு நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இது மீட்டியோர் 350 பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.84 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 2.15 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. எனவேதான் 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆதிக்கத்தை யாராலும் தகர்க்க முடியவில்லை. பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்த போதிலும், இந்த செக்மெண்ட்டில் கிளாசிக் 350 பைக்தான் தொடர்ந்து ராஜாங்கம் செய்து வருகிறது.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் களமிறக்கியுள்ள மீட்டியோர் 350 பைக்கிற்கும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ஆகிய இரண்டு பைக்குகளுக்கும் போட்டியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கும் தற்போது மெல்ல மெல்ல பிரபலமாகி வருகிறது.

செம சூப்பர்... புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய பிரபல இளம் நடிகர்... யார்னு தெரியுமா?

பைக் ஆர்வலர்கள் பலரின் கவனத்தை ஹோண்டா ஹைனெஸ் சிபி350 கவர்ந்துள்ளது. இதன் ஒவ்வொரு மாத விற்பனை எண்ணிக்கையும் தற்போது கவனிக்கத்தக்க வகையில் உள்ளது. வரும் காலங்களில் இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் இன்னும் கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor kartik aaryan gifts himself royal enfield classic 350 check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X