ஹிட் படமே குடுக்கல! இருந்தாலும் 3 கோடி ரூபாய் காரில் ஏறிச் சென்றது இவரா?
இந்தியாவில் பிரபலங்கள் பலர் காஸ்ட்லியான காரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் காஸ்ட்லியான காரை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகளை பெறுகின்றனர். மேலும் இவர்களுக்கு அதிக விலை கொண்ட கார்களை வாங்க காசும் அதிகமாக இருப்பதால் இப்படியான கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்படியாக ஹீரோவாக நடித்து வரும் நடிகர் ஒருவர் ரூ3 கோடி மதிப்பிலான காரை பயன்படுத்தி வருகின்றார். இவர் பயன்படுத்தும் கார் எது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர் கிரண் அப்பாவரம். இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் இனி சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தொலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கு மக்களை விட அதிகம் இவர் வெளியில் தெரியவில்லை. இந்நிலையில் திருப்பதியில் ஒரு கல்லூரியில் நடக்கும் விழாவிற்காக இவர் திருப்பதி வந்தார்.

திருப்பதி விமான நிலையத்திலிருந்து இவர் காரில் ஏறிச்செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ படுவைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் அவர் காஸ்ட்லியான கார் ஒன்றில் ஏறி செல்கிறார். இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அல்லது மிக மோசமான பாக்ஸ் ஆபீஸ் பிளாஃப்பை சந்தித்துள்ளது. இருந்தும் இவர் காஸ்ட்லியான காரை பயன்படுத்துவது பலருக்க ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் அவர் லேண்ட்ரோவர் நிறவனத்தின் டிஃபென்டர் காரை பயன்படுத்தி வருகிறார். இந்த கார் மார்கெட்டில் ரூ1.20 கோடி முதல் ரூ3.21 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆகிய 2 ஆப்ஷன்களும் இருக்கின்றன. இந்த கார் மொத்தம் 14 விதமான வேரியன்ட்களில் விற்பனயைாகி வருகிறது. இதில் டிஃபென்டர் ஆக்டா வெர்ஷன் தான் அதிக விலையில் விற்பனையாகிறது.

இந்த காரின் சிறப்பம்சமே இந்த காரின் ரோடு பிரஸென்ஸ் தான். இந்த கார் சாலையில் பயணிக்கும் போது மற்றவர்கள் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த காரின் வடிவமைப்பு இருக்கிறது.மேலும் இந்த கார் பல்வேறு விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பியபடி வாகனத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும் இந்த கார் ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட காராகவும் இருக்கிறது. இதன் ரைடு குவாலிட்டியும் சிறப்பாக இருக்கும்.
இந்த காரில் இருக்கும் இன்ஜினை பொரத்தவரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் பி-300 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீவேகத்தை வெறும் 7.4 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. இதன் டீசல் இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் 6 சிலிண்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடனும் இணைக்கப்படுகிறது.

இந்த காரில் உள்ள அனைத்து வேரியன்டகளிலும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் ஆஃப்ரோடு அம்சங்கள் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளன. இதனால் அதிக பயணிகளை இந்த காரில் ஏற்றிச்செல்ல முடியும். இதன் காரணமாக பிரபலங்கள் பலர் இந்த கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற காராக இதை தயாரிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காஸ்ட்லியான கார்களை பெரிய நடிகர்கள் பயன்படுத்துவது சாதாரண விஷயம் தான் நடிகர் கிரண் போல வளர்ந்து வரும் நடிகர்கள் கூட காஸ்ட்லியான கார்களை பயன்படுத்து மூலம் மக்கள் மத்தியில் ஒரு கவனத்தை ஈர்க்கிறார். இதனால் அவரது பிரபலம் மேலும் அதிகமாகிறது. காருக்கும் அவருக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









