நடிகர் கொட்டாச்சி மகளுக்கு பரிசளித்த காரின் விலை இத்தனை லட்சமா? இவ்வளவு பணம் சம்பாதிச்சிட்டாரா?
காமெடி நடிகர் கொட்டாச்சி தனது மகள் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கியா நிறுவனத்தின் சோனட் காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் மகளும் திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர். இவர் வாங்கிய கார் என்ன? அதன் விலை எவ்வளவு? என்பது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் விவேக் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கொட்டாச்சி. இவர் நடித்த பல்வேறு திரைப்பட காமெடிகள் சூப்பர் ஹிட் ஆகிய இன்றளவும் மக்கள் மறக்காத அளவுக்கு காமெடி காட்சிகளில் நடித்திருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார். தற்போது இவர் சரியாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் இவரது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை பெற்றார். பலர் இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்கள்.
இந்நிலையில் மானஸ்வி இமைக்கா நொடிகள் படம் மட்டுமல்லாமல் தர்பார், சித்திரை செவ்வானம், மாமனிதன், டிடி ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மானஸ்வியின் பிறந்தநாள் வந்தது. அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மானஸ்வியின் தந்தை நடிகர் கொட்டாச்சி அவருக்கு கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.

நீண்ட நாட்களாக தாங்கள் சொந்தமாக கார் ஒன்றை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும், இந்த ஆசையை தனது அப்பாவிடம் அடிக்கடி காட்டி வந்ததாகவும், இதை மனதில் வைத்து தனது மகள் பிறந்தநாளுக்கு எப்படியாவது கார் வாங்கி விட வேண்டும் என யோசித்து இந்த காரை அவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் கார் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் உள்ளபடி நடிகர் கொட்டாட்சி சொந்தமாக கியா நிறுவனத்தின் சோனட் காரை வாங்கி உள்ளார். இந்த கார் கியா நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. கியா சோனட் கார் மொத்தம் 23 விதமான வேரியன்ட்களில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

கியா சோனட் காரை பொருத்தவரை ஒரு டீசல் இன்ஜினும், மூன்று பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கொண்ட காராக இருக்கிறது. டீசல் இன்ஜினை பொருத்தவரை 1493 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 1197 சிசி இன்ஜின், 1199 சிசி இன்ஜின், 998 சிசி இன்ஜின் என்ற மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இது ஒரு 5 சீட்டர் காராகும். இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 3995மிமீ நீளமும், 1790 மிமீ அகலமும், 2245 வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இது ஒரு 5 சீட்டர் காராகும். இந்த கார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார் என்பதால் மக்கள் மத்தியில் இந்த கார் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறது.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 7.99 லட்சம் முதல் ரூபாய் 15.69 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. நடிகர் கொட்டாட்சி வாங்கிய இந்த கார் ரூபாய் 13 லட்சம் என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது. அவர் எந்த வேரியன்ட் காரை வாங்கி உள்ளார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த ரூபாய் 13 லட்சம் என்ற விலையில் எச்டிகே டீசல் மற்றும் எச்டிஎக்ஸ் பெட்ரோல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன் உடன் கூடிய வேரியண்ட்கள் விற்பனையாகி வருகின்றன. நாம் வீடியோவில் பார்த்த தகவலின் படி இந்த காரின் வேரியன்டை சரியாக கணிக்க முடியாது. இரண்டு கார்களிலும் ஒரு சில அம்சங்கள் மட்டுமே மாறும் என்பதால் சரியான வேரியண்ட்டை கணிப்பது கடினமான காரியமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபலங்கள் கார் வாங்குவது அந்த காருக்கு மிகப்பெரிய அளவுக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நடிகர் கொட்டாட்சி போன்ற பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காத நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்து கார் வாங்குவது பலருக்கு ஒரு ஊக்கம் தரும் செய்தியாக அமைந்துள்ளது. இவர் வாங்கிய இந்த கார் நிச்சயம் இவரது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்.


Click it and Unblock the Notifications









