கார்களை தேர்ந்தெடுத்து வாங்குவதில் முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் பாலிவுட் நடிகைகள்..!!

Written By:

சமீபத்தில் நடிகர் சைஃப் அலிகான் தனது மகன் தைமூருக்காக ஜீப் செரோக்கி எஸ்.ஆர்.டி காரை வாங்கினார். அவரை தொடர்ந்து மீண்டும் ஒரு பாலிவுட் பிரபலம் ஜீப் நிறுவனத்திற்கு வாடிக்கையாளராகி உள்ளார்.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

பாலிவுட்டில் அலாவுதீன் படத்தில் அறிமுகமானவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜுத்வா 2 திரைப்படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

இதை கொண்டாடும் விதமாக தனக்கு தானே ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை வாங்கி பரிசளித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அதை இணையதளங்களிலும் பதிவிட்டுள்ளார் ஜாக்குலின்.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

நடிகை ஜாக்குலின் வாங்கிய காரை குறித்து எந்த தகவலும் தற்போது வரை தெரியவில்லை. அவரது காம்பஸ் எஸ்யூவி காரை பற்றி தகவல்களை இதுவரை ஜீப் இந்தியா நிறுவனமும் வெளியிடவில்லை.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

சிவப்பு மற்றும் கருப்பு நிற கலவையில் அசத்தலாக இருக்கும் ஜாக்குலின் ஜீப் காம்பஸ் காரில் 7 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், செலக்ட் டிரேன் மேனஜ்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் இபிடி, டூயல் ஏர்பேக்ஸ் போன்ற பலவித அம்சங்கள் உள்ளன.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

1.4 லிட்டர் மல்டி-ஏர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என இருவேறு எஞ்சின் தேர்வுகளில் வெளிவரும் இந்த காரின் வேரியண்டுகளுக்கு ஏற்ப 163 பிஎச்பி முதல் 173 பிஎச்பி ஆற்றலை வழங்கும்.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

பெட்ரோல் தேர்வு ஜீப் காம்பஸ் கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிடிசிடி 7 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகிய தேவைகளில் கிடைக்கிறது. அதேபோல டீசல் வேரியன்ட் 4x4 டேரிவேட்டிவ் டிரான்ஸ்மிஷன் தேர்வை பெற்றிருக்கிறது.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பிற் கிடையில் வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை குவித்து வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் ரூ. 15.16 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இருந்து தொடங்குகிறது.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி விட்ட ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார் என்றால், அங்கு வளர்ந்து வரும் நடிகையாக உள்ள கீர்த்தி செனோன் ஆடி கியூ7 ஆடம்பர காரை சொந்தமாக வாங்கியுள்ளார்.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

ஹீரோபத்னி மற்றும் பேர்லி கி பர்ஃபி போன்ற பாலிவுட் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் கீர்த்தி செனோன். மஹேஷ் பாபு உடன் ’நேன் ஓக்கடே’ படத்தில் நடித்ததன் மூலம் இவர் தென்னிந்தியாவிலும் பிரபலம்.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

ஆடி கியூ 7 காரை வாங்கியதை தொடர்ந்து, ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரஹில் அன்சாரி நடிகை கீர்த்தி செனோன் வீட்டிற்கே சென்று அவரிடம் காரை வழங்கினார்.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

இதை தனது இஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்ட கீர்த்தி, ”ஆடி கியூ7 காரே உன்னை என் குடும்பத்தில் வரவேற்பதாக” தனக்கு தானே வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

இந்தியாவின் விற்பனையாகும் ஆடி கியூ7 லார் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் மற்றும் 3.0 டிடிஐ டீசல் என இருவேறு தேர்வுகளை பெற்றுள்ளது. எஞ்சின் தேர்விற்கு ஏற்றவாறு 252 பிஎச்பி முதல் 249 பிஎச்பி வரை இந்த கார் ஆற்றலை வழங்கவல்லது.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

ஆடி கியூ7 காரின் டீசல் மற்றும் பெட்ரோல் வேரியன்டுகள் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. இந்த கார் விலை ரூ. 67.76 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் இருந்து தொடங்குகிறது.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் ஜாக்குலின் மற்றும் கீர்த்தி இருவரும் ஒரு சேர புதிய கார்களை வாங்கியிருப்பது ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருசேர கார் வாங்கி திரையுலகை ஆச்சர்யப்படுத்திய பிரபல நடிகைகள்..!!

இதன் காரணமாக மேற்கூறிய நடிகைகள் எப்போது தங்களது புதிய கார்களில் மும்பை சாலைகளை அலங்கரிப்பார்கள் என மும்பை ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Actor Kriti Sanon And Jacqueline Fernandez Buys Audi Q7 and Jeep Compass SUV cars. Click for details...
Story first published: Tuesday, January 30, 2018, 15:18 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark