பிரபல நடிகரின் மனைவி காரில் இருந்தபோது டிரைவர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
கார் டிரைவர் ஒருவரின் மோசமான நடத்தை குறித்து, பிரபல நடிகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகர் குணால் கெம்மு (Kunal Kemmu) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரச்னை தொடர்பாக அவர் இதன் மூலம் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றபோது, தனது மனைவி சோஹா அலி கான் (Soha Ali Khan) மற்றும் மகள் இனாயா (Inaaya) ஆகியோருடன் குணால் கெம்மு பயணித்து கொண்டிருந்தார்.

வெள்ளை நிற லம்போர்கினி கல்லார்டோ (Lamborghini Gallardo) காரின் புகைப்படம் ஒன்றை குணால் கெம்மு பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குணால் கெம்மு கூறியிருப்பதாவது: இன்று காலை 9 மணிக்கு (சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று) எனது மனைவி, மகள் மற்றும் அருகில் வசிப்பவருடன் ஜூகூ (Juhu) காலை உணவிற்காக சென்று கொண்டிருந்தேன். (ஜூகூ என்பது மும்பையின் ஒரு பகுதி ஆகும்).

அருகில் வசிப்பவரின் குழந்தைகளும் எங்களுடன் இருந்தனர். அப்போது புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட இந்த காரின் டிரைவர் பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டினார். திடீரென ஓவர்டேக் செய்ய முயன்றார். அத்துடன் எனது காருக்கு முன்பு திடீரென பிரேக் பிடித்தார். அவர் அவருடைய பாதுகாப்பிற்கு மட்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொள்ளவில்லை.

எனது காரில் இருந்தவர்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்து அச்சுறுத்தலை உண்டாக்கினார். மோதலை தவிர்ப்பதற்காக நான் மிகவும் கடுமையாக பிரேக் பிடிக்க வேண்டியிருந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சிகரமாக இருந்தது. பின்னர் அந்த காரின் டிரைவர் காரில் இருந்து இறங்கி, எங்களிடம் விரலை காட்டி மோசமாக நடந்து கொண்டார்.

காருக்கு உள்ளே பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதை பார்த்த பிறகும் கூட, அவர் தொடர்ந்து மோசமான நடத்தையை வெளிப்படுத்தினார். இந்த முட்டாள்தனமான செயலை பதிவு செய்வதற்காக நான் எனது செல்போனை எடுத்தபோது, அவர் காரில் ஏறி சென்று விட்டார். இந்த தவறான நடத்தையை மும்பை காவல் துறையினர் கவனிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு குணால் கெம்மு கூறியுள்ளார். கார் டிரைவர் ஒருவரின் மோசமான நடத்தைக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே தேவையில்லாமல் இதுபோன்ற தகராறுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகம். இதுபோன்ற சூழ்நிலைகளில் அமைதியான மனதுடன் வாகனம் ஓட்டுவது கடினமான காரியமாக இருக்கிறது. வாகன ஓட்டிகள் 'டென்ஷன்' ஆகி தகராறுகளில் ஈடுபட்டு கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

மற்ற வாகன ஓட்டிகளுடன் உங்களுக்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் ஒரு சில வழிகளை பின்பற்ற வேண்டும். டிரைவிங் எப்போதுமே ரிலாக்ஸாக இருக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரிலாக்ஸாக இருங்கள். மியூசிக், ஏசி ஆகியவற்றை ஆன் செய்து கொள்ளுங்கள். நீங்கள் ரிலாக்ஸாக இருப்பதற்கு இவை உதவி செய்யும்.

வாகனத்தை ஓட்டுவதற்கு அமர்ந்த உடன் எப்போதும் நல்ல மூடில் இருங்கள். எங்கேயோ இருக்கும் டென்ஷனை சாலையில் மற்ற வாகன ஓட்டிகளிடம் காட்ட வேண்டாம். அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுங்கள். இது மற்ற வாகன ஓட்டிகள் உங்களிடம் கோபப்படாமல் இருப்பதற்கு உதவி செய்யும்.

எப்போதும் வேக வரம்பை பின்பற்றுங்கள். தேவையான சமயங்களில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் கொடுங்கள். உதாரணத்திற்கு இடது பக்கம் திரும்பும்போது இடது பக்க இன்டிகேட்டரை 'ஆன்' செய்யுங்கள். இடது பக்கம் திரும்பும்போது வலது பக்க இன்டிகேட்டரை 'ஆன்' செய்தால், மற்ற வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படும். இந்த குழப்பம் உங்கள் மீதான கோபமாக மாறும்.

இது தேவையற்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல் உங்கள் வாகனத்தின் ரியர் வியூ மிரர்களையும் சரியாக பயன்படுத்துங்கள். ஆனால் நீங்கள் சரியாகவும், பொறுமையாகவும் நடந்து கொண்டாலும் கூட, மற்ற வாகன ஓட்டிகள் ஆக்ரோஷமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்டவர்கள் உங்களிடம் சண்டைக்கு வந்தால், முடிந்தவரை அங்கிருந்து கிளம்பி விடுவது நல்லது.

இது உங்கள் நேரத்தை சேமிக்க உதவும். இல்லாவிட்டால் தேவையில்லாமல் கால விரயம் ஏற்படும். அத்துடன் இது உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது. தேவையில்லாத சண்டைகளால் 'டென்ஷன்' ஆகி கொண்டிருந்தால், பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படும். எனவே டென்ஷனை குறைப்பதற்கான வழிகளை கண்டறிந்து, உடனடியாக 'கூல்' ஆகி விடுவது சிறந்தது.


Click it and Unblock the Notifications








