ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய இந்தி நடிகருக்கு டுவிட்டரில் அபராதம் விதித்து மும்பை போலீஸ் அதிரடி

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய இந்தி நடிகருக்கு, மும்பை போலீசார் டுவிட்டர் மூலம் அபாரதம் விதித்துள்ளனர்.

By Balasubramanian

இந்தி சினிமாக்களில் பிரபலமான ஹீரோவாக வலம் வருபவர் குணால் கேமு, இவர் கோல்மால், டிராபிக் சிக்னல், உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

ஹெல்மெட் அணியாமல பைக் ஓட்டிய இந்தி நடிகருக்கு டுவிட்டர் மூலம் அபராதம் விதித்து மும்பை போலீஸ் அதிரடி

இந்நிலையில் அவர் மும்பை நகரில் தனது டுகாட்டி மான்ஸ்டர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வலம் வந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

ஹெல்மெட் அணியாமல பைக் ஓட்டிய இந்தி நடிகருக்கு டுவிட்டர் மூலம் அபராதம் விதித்து மும்பை போலீஸ் அதிரடி

இதையடுத்து குணால் கேமு, தனது டுவிட்டர் பக்கத்தில் "சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம், சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்ட பிடிக்கும், தூரமாக இருந்தாலும், அடுத்த வீட்டிற்காக இருந்தாலும் ஹெல்மெட் அணிந்து தான் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். எனது தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன்." என பதிவிட்டிருந்தார்.

அவர் டுவிட்டரில் பதிவு செய்த 1 நேரத்தில் மும்பை போலீசாரின் அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து, குணால் கேமுவை டேக் செய்து "உங்களுக்கு பைக் ஓட்ட பிடித்திருக்கலாம். ஆனால் இந்திய குடிமகன்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். தவறுக்கான தண்டனை இருந்தால் தான் மீண்டும் தவறு நடக்காது என எண்ணுகிறோம். அடுத்த முறை இந்த தவறை செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம். இதில் அபாராத இ-செல்லான் இணைக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டிருந்தனர்.

சாலை பாதுகாப்பில் மும்பை போலீசார் இந்திய அளவில் முன்னோடியாக திகழ்கின்றனர். சமூக வலைதளங்களிலும் பல விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் மாதமும் இது போன்ற செயலில் ஈடுபட்ட வருண் தவான் என்ற நடிகருக்கு மும்பை போலீசார் அபாரதம் விதித்தனர்.

ஹெல்மெட் அணியாமல பைக் ஓட்டிய இந்தி நடிகருக்கு டுவிட்டர் மூலம் அபராதம் விதித்து மும்பை போலீஸ் அதிரடி

சாலை பாதுகாப்பில் விழிப்புடன் செயல்படும் மும்பை போலீசார் போல் மற்ற மாநில போலீசாரும், வி.ஐ.பி.,களுக்கு சலுகை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Article Published On: Thursday, March 22, 2018, 17:10 [IST]
English summary
hindi actor kunar khemu fined for not wearing helmet while driving. Read in hindi
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+