காரை வாங்கியதில் இருந்து ஜாலியா ரவுண்ட் அடிச்சிட்டு இருக்காரு! போர்ஷே கார் எல்லாம் இப்போது சாதாரணம் ஆகிடுச்சு

போர்ஷே (Porsche) கார்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருப்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு நம்மில் நிறைய பேருக்கு போர்ஷே கார்கள் கனவு வாகனங்களாக உள்ளன. அவற்றை வாங்கும் அளவிற்கு பணம் இல்லாவிடினும், வாழ்வில் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என ஏதாவது ஒரு போர்ஷே கார் மீது ஆசை கொண்டிருப்போம். ஆனால், இங்கு ஒரு நடிகர் சர்வ சாதாரணமாக தனது புத்தம் புதிய போர்ஷே காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் படங்களும் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன.

குஞ்சாக்கோ போபன் (Kunchacko Boban) இப்படியொரு பெயரில் ஒரு நடிகரை உங்களில் நிறைய பேர் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், இவர் ஒரு மலையாள நடிகர் ஆவார். மலையாள நடிகர் மட்டும் இல்லை, மலையாள திரைப்பட தயாரிப்பாளரும் கூட.

kunchacko boban spotted with porsche

48 வயதான குஞ்சாக்கோ போபன் இப்போது வேண்டுமாயின் கொஞ்சம் வயதானவர் போன்று காட்சியளித்தாலும், 20- 25 வருடங்களுக்கு முன்னர் ஆணழகனாக மலையாள சினிமா வட்டாரத்தில் உலா வந்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவரை ரசிகர்கள் 'சாக்லெட் பாய்' என அழைத்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் ரசிகர்கள் இவரை சாக்லெட் பாய் என்றுதான் அழைக்கின்றனர்.

அனுபவமிக்க மலையாள நடிகர்கள் என்றதும் நம்மில் நிறைய பேருக்கு மம்முட்டி, மோகன்லால், பிரத்விராஜ் போன்றோரை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், குஞ்சாக்கோ போபனும் நன்கு அனுபவமிக்க மலையாள நடிகர் ஆவார். 20 வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் இருக்கும் இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்திற்குமேல் சினிமாவில் மார்க்கெட் குறைந்ததை அடுத்து டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

kunchacko boban spotted with porsche

வெள்ளி திரை, சின்ன திரை என இரு திரைகள் மூலம் கிடைத்த பணத்தில் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவரும் குஞ்சாக்கோ போபன் அந்த பணத்தில் திரைப்படங்களை தயாரிக்கும் வேலைகளையும் கவனித்து வருகிறார். மேலும், அந்த பணத்தில் அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்குவதையும் குஞ்சாக்கோ போபன் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் இந்த நடிகர் பிராண்ட்-நியூ போர்ஷே கேயென்னே (Cayenne) என்கிற அல்ட்ரா-லக்சரி எஸ்யூவி காரை வாங்கினார். குடும்பத்துடன் நடிகர் குஞ்சாக்கோ போபன் தனது புதிய போர்ஷே கேயென்னே காரை டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று அந்த சமயத்தில் இணையத்தில் வெளியாகி பெரிதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

kunchacko boban spotted with porsche

அந்த வரிசையில், தனது புதிய போர்ஷே காருடன் நடிகர் குஞ்சாக்கோ போபன் இருக்கும் மற்றொரு வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வரும் காட்சிகளை வைத்து பார்க்கும்போது, படப்பிடிப்பிற்கு தனது புதிய போர்ஷே காரில் குஞ்சாக்கோ போபன் வந்ததை அறிய முடிகிறது. காரில் இருந்து இறங்கி வெளியே வந்தவர், நேராக கேரவனுக்குள் செல்லும் காட்சிகளை வீடியோவில் பார்க்க முடிகிறது.

இந்த மலையாள நடிகர் வைத்திருகும் போர்ஷே கேயென்னே காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இந்த கார் பேஸ் மற்றும் ஜிடிஎஸ் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.43 கோடி மற்றும் ரூ.2 கோடியாக உள்ளன. சாதாரணமான போர்ஷே கேயென்னே கார் மட்டுமின்றி, கேயென்னே கூபே என்கிற மற்றொரு காரும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

kunchacko boban spotted with porsche
Take a Poll

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள சினிமா நட்சத்திரங்களுக்கு இவ்வாறான வித்தியாசமான கார்கள் என்றாலே தனி ஆர்வம் உண்டு. அதாவது, எல்லாரும் வாங்குவது போன்றதான மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களை அதிகமாக வாங்க மாட்டார்கள். ஆதலால், மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனும் இந்த போர்ஷே கேயென்னே காரை வாங்கி பயன்படுத்துவதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

FAQs
போர்ஷே கேயென்னே காரின் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு எவ்வளவு?

75 லிட்டர்கள்

போர்ஷே கேயென்னே காருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள கார்கள் எவை?

மசராட்டி லெவண்டே, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ், ரேஞ்ச் ரோவர் வேலர் & பி.எம்.டபிள்யூ எக்ஸ்7

போர்ஷே கேயென்னே காரை எந்த என்ஜின் உடன் வாங்கலாம்?

3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் அல்லது 2.9 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 என்ஜின்

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Saturday, March 15, 2025, 6:00 [IST]
English summary
Actor kunchacko boban spotted with his new porsche cayenne
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X