நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ கார் கலெக்ஷன்!

By Saravana

டைட்டானிக் படத்தின் மூலம் உலகின் பட்டி தொட்டியெல்லாம் முகமறிந்த நாயகனாகிவிட்ட லியனார்டோ டிகாப்ரியோ, ஒருவழியாக ஆஸ்கர் விருதை பெற்றுவிட்டார். தி ரெவனென்ட் படத்திற்காக, இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை அவர் பெற்றுக் கொண்டு வழங்கிய அவரது பசுமை கொள்கை குறித்த ஏற்புரை வீடியோ உலகம் முழுவதும் அனலை பரப்பிய டாப்பிக்காக மாறியது.

ஆம், ஆஸ்கார் மேடையில் அவர் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு அமைந்தது. மேடையில் மட்டுமே அவர் சுற்றுச்சூழல் நண்பனாக காட்டிக் கொள்ள முயலவில்லை. அதற்கான சில விஷயங்களை சொந்த வாழ்க்கையிலும் அவர் கடைபிடித்து வருகிறார். அதற்கு, அவரது கார் கலெக்ஷன் சிறந்த சாட்சியாக கூற முடியும். அவரது 'பசுமை' கார் கலெக்ஷனை நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.

டொயோட்டா பிரையஸ்

டொயோட்டா பிரையஸ்

டிகாப்ரியோ கார் கலெக்ஷனில் டொயோட்டா பிரையஸ் காரும் ஒன்று. இது ஹைபிரிட் எனப்படும் இரட்டை வகை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்டது. 1997ல் ஜப்பானிலும், 2000வது ஆண்டில் உலக அளவிலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் உலகில் 90 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின், மின் மோட்டார் கொண்டதாக வணிக ரீதியிலான தயாரிக்கப்பட்ட உலகின் முதல் ஹைபிரிட் கார் மாடலும் இதுவே. இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான பிரையஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன.

பிரையஸ் ஹைபிரிட் சிஸ்டம்

பிரையஸ் ஹைபிரிட் சிஸ்டம்

குறைவான புகை மற்றும் அதிக மைலேஜ் தரும் என்ற டிகாப்ரியோ போன்ற எண்ணம் கொண்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக இந்த முதலாம் தலைமுறை மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டது. இந்த கார் 58 எச்பி பவரை அளிக்க வல்ல பெட்ரோல் எஞ்சினையும், 40 எச்பி பவரை அளிக்கும் மின் மோட்டாரையும் பெற்றிருந்தது.

பிரையஸ் மைலேஜ்

பிரையஸ் மைலேஜ்

டொயோட்டா பிரையஸ் கார் 100 கிமீ பயணிப்பதற்கு 4.8 லிட்டர் பெட்ரோல் செலவாகும் என கணக்கீடுகளின்படி தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மிக குறைவான புகை வெளியிடும் தன்மை கொண்டதாக இருப்பதும் இதன் சிறப்பாகும்.

டெஸ்லா ரோட்ஸ்டெர்

டெஸ்லா ரோட்ஸ்டெர்

அடுத்து டிகாப்ரியோ கராஜில் இருக்கும் மாடல் டெஸ்லா ரோட்ஸ்டெர் எலக்ட்ரிக் கார். 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை தயாரிப்பில் இருந்தது. மொத்தம் 2,450 டெஸ்லா ரோட்ஸ்டெர் கார்கள் உலகின் 30 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இன்று மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியாம் அயான் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்ட உலகின் முதல் காரும் இதுதான்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 393 கிமீ தூரம் பயணிக்கும். பிற கார்களின் எரிபொருள் செலவுடன் ஒப்பிடுகையில், மிக குறைவான எரிபொருள் செலவு கொண்டது. மேலும், பல நாடுகளில் இந்த காருக்கு மானியத் தொகை வழங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டது.

டெஸ்லா ரோட்ஸ்டெர் செயல்திறன்

டெஸ்லா ரோட்ஸ்டெர் செயல்திறன்

டெஸ்லா ரோட்ஸ்டெர் காரில் 53KWh லித்தியம் அயான் பேட்டரி மிகுந்த செயல்திறன் மிக்கது. இதனால், இந்த கார் 0- 97 கிமீ வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடும். அதாவது பெட்ரோல் ரோட்ஸ்டெர் மாடல்களைவிட இந்த எலக்ட்ரிக் கார் மிக குறைவான வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் வல்லமை கொண்டது. அசத்தலான டிசைன், சிறப்பான தொழில்நுட்பம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

03. ஃபிஸ்கர் கர்மா ஹைபிரிட்

03. ஃபிஸ்கர் கர்மா ஹைபிரிட்

டிகாப்ரியோவிடம் இருக்கும் ஃபிஸ்கர் கர்மா ஸ்போர்ட்ஸ் காரும் ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்டது. பின்லாந்து நாட்டை சேர்ந்த வால்மெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தயாரிப்பு. கடந்த 2011ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் 2012ம் ஆண்டு நிதி பிரச்னைகளால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் சிஸ்டம்

இந்த காரில் தலா 161 எச்பி பவரை அளிக்கும் இரண்டு மின் மோட்டார்கள் மற்றும் 260 எச்பி பவரை அளிக்க வல்ல ஜெனரல் மோட்டார்ஸிடமிருந்து பெறப்பட்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் கேபின் ஏசி.,க்கு தேவையான மின்சாரம் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல்கள் மூலமாக சூரிய மின்சக்தியிலிருந்து பெறப்படுகிறது.

செயல்திறன்

செயல்திறன்

மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஃபிஸ்கர் கர்மான ஸ்போர்ட்ஸ் கார் 0 - 97 கிமீ வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் எட்டிவிடும். ஒருமுறை சார்ஜ் செய்தால், மின் மோட்டாரில் மட்டும் 52 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

பிஎம்டபிள்யூ எச்7 ஹைட்ரஜன் கார்

பிஎம்டபிள்யூ எச்7 ஹைட்ரஜன் கார்

ஹைட்ரஜன் எரிசக்தியில் இயங்கும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார்தான், பிஎம்டபிள்யூ எச்7 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 2005 முதல் 2007 வரை லிமிடேட் எடிசன் மாடலாக உற்பத்தி செய்யப்பட்டது. மேலும், பிஎம்டபிள்யூ எச்7 கார்தான் உலகின் முதல் தயாரிப்பு நிலை ஹைட்ரஜன் கார் மாடல் என்றும் பிஎம்டபிள்யூ தெரிவித்தது. மொத்தமாக 100 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

தற்போது ஹைட்ரஜன் கார்களில் ஃப்யூவல் செல்லில் எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பிஎம்டபிள்யூ எச்7 காரில் இருந்த 6.0 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சினிலேயே ஹைட்ரஜனை எரித்து ஆற்றலை உற்பத்தி செய்யும் வகையில் வெளியிடப்பட்டது இதன் முக்கி சிறப்பு. இதற்காக, ஹைட்ரஜனை உட்செலுத்துவதற்காக விசேஷ இன்ஜெக்டர்களை பிஎம்டபிள்யூ பொருத்தியது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த காரில் இருக்கும் எஞ்சின் 260 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 0 -100 கிமீ வேகத்தை 9.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் இருந்த டேங்கில் 8 கிலோ ஹைட்ரஜனை நிரப்ப முடியும். இதனை வைத்து 201 கிமீ தூரம் பயணிக்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் மோசடி பற்றி சினிமா

ஃபோக்ஸ்வேகன் மோசடி பற்றி சினிமா

கடந்த ஆண்டு டீசல் கார்களின் புகை அளவில் ஃபோக்ஸ்வேகன் செய்த மிகப்பெரிய மோசடி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும் வகையிலான ஃபோக்ஸ்வேகன் ஊழலை வைத்து புதிய சினிமா தயாரிக்கப் போவதாக டிகாப்ரியோ அறிவித்தார். இதன் மூலம் அவருக்கு சுற்றுச்சூழல் மீதுள்ள ஆர்வமும், அதற்கு எதிரானவர்கள் மீது பாய தயங்காத உணர்வும் பிரதிபலிக்கிறது.

அறக்கட்டளை

அறக்கட்டளை

டிகாப்ரியோ சுற்றுச்சூழல் நண்பன் என்பதோடு நில்லாமல், இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி செயல்பட்டு வருகிறார். மேலும், அமெரிக்காவின் பசுமை அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.

ரியல் ஹீரோ

ரியல் ஹீரோ

மேடையில் ஒன்று பேசி, நிஜ வாழ்வில் வேறு முகத்தை காட்டும் அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களுக்கு மத்தியில், மேடையில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு ஹீரோவாக முன்னிற்கிறார் டிகாப்ரியோ.

ஆஸ்கர் விருது வாங்கிய டிகாப்ரியோவுக்கு எமது வாழ்த்துகள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 1, 2016, 15:48 [IST]
English summary
Actor Leonardo Dicaprio's Environment Friendly Car Collection.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+