ஆள் அடையாளமே தெரியல.. இந்த பைக்கை வாங்கினதுல மனஷன் இன்னும் வயசு குறஞ்ச பையனா மாறிட்டாரு! இந்தியாலேயே முதல் ஆள்
'வயசானாலும் ஆளும் ஸ்டைலும் குறையவே இல்லைனு' படையப்பா படத்தில் ரஜினி-யைப் பார்த்து ரம்யாகிருஷ்ணன் சொல்வாங்க. இந்த டயலாக் அப்படியே பொருந்தக் கூடிய நபர்களில் ஒருவராக நடிகர் மாதவன் இருக்கின்றார். அவருடைய தோற்றம் மட்டும் அல்ல செயல்களும் அப்படியே உள்ளன. முடிகள் ஆங்காங்கே நரைத்துக் காணப்பட்டாலும் இப்போதும் அவர் வயது குறைவான யூத்துகளைப் போலவே காட்சியளிக்கின்றார். இந்த நிலையிலேயே அவர், டீனேஜர்கள் அதிகம் விரும்பி வாங்கக் கூடிய பிராண்டின் புதுமுக பைக் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிக்ஸ்டன் குரோம்வெல் 1200 (Brixton Cromwell 1200) பைக் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். வெளிநாடுகளில் இந்த பிராண்டின் தயாரிப்புகளுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பைக்கின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே இந்தியாவில் ரூ. 7.8 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

இத்தகைய காஸ்ட்லியான பைக்கையே நடிகர் மாதவன் வாங்கி இருக்கின்றார். இந்த பைக்கை இந்தியாவில் வாங்கும் முதல் ஆளும் இவரே ஆவார். இப்போதே இந்த பைக்கின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இதன் வாயிலாக டெலிவரி பணிகள் தொடங்கியதும் முதல் ஆளாக நடிகர் மாதவன் ஓடி வந்து பிரிக்ஸ்டன் குரோம்வெல் 1200 பைக்கை வாங்கியிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
நடிகர் மாதவனுக்கும் இந்த பைக்கிற்கும் இடையே மிகப் பெரிய ஒற்றுமை உள்ளது. அதாவது, மாதவனைப் போலவே இந்த பைக்கும் பழைய ஸ்கூல் பையன் தோற்றத்தையே கொண்டிருக்கின்றது. இதுவே அந்த பைக்கின் ஸ்பெஷல் ஆகும். இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு சிறப்புகளை அது தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மாதவன் இந்த பைக்கை வாங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக பிரிக்ஸ்டன் நிறுவனம் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றது. கூலர் போட்டுக் கொண்டு கூலாக அந்த பைக்கின்மீது அமர்ந்து போஸ் கொடுக்கும் படத்தையே பிரிக்ஸ்டன் பகிர்ந்திருக்கின்றது. மாதவன் ஆலிவ் கிரீன் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் குரோம்வெல் 1200 பைக் மாடலையே வாங்கி இருக்கின்றார்.
இந்த பைக் பார்க் வேண்டுமானால் பழைய ஸ்கூல் பையனை போல இருக்கலாம், ஆனால், அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கி இருப்பதில் இன்றைய நவீன கால பைக் மாடல்களுக்கே அது டஃப் கொடுக்கும். மிக முக்கியமாக இந்த பைக்கில் டிஎஃப்டி திரை, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிராக்சன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், பன்முக ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை 1,222 சிசி லிக்யூடு கூல்டு ட்வின் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 82 பிஎச்பி மற்றும் 108 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 198 கிமீ ஆகும். இத்தகைய பைக்கையே நடிகர் மாதவன் தற்போது வாங்கி இருக்கின்றார். இதன் வாயிலாக தான் ஒரு மிகப் பெரிய பைக் விரும்பி என்பதை அவர் நிரூபித்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவரிடத்தில் ஏற்கனவே யமஹா வே-மேக்ஸ், 1,679 சிசி திறன் கொண்ட பைக், இந்தியன் ரோட்மாஸ்டர், ஹோண்டா கோல்டுவிங், டிரையம்ப் ராக்கெட் 3ஆர் உள்ளிட்ட பைக் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக ஆஸ்திரிய நாட்டின் பிராண்டான பிரிக்ஸ்டன்-இன் பைக்கையும் அவர் வாங்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








