நடிகர் மாதவனின் "பிக் பாய்" பற்றி தெரியுமா?

Written By:

நடிகர் மாதவன் தனது இந்தியன் ரோடு மாஸ்டர் பைக்கிற்கு "பிக் பாய்" என பெயர் வைத்துள்ளார். அவருக்கு தற்போது நடந்த அறுவை சிகிச்சை காரணமாக இந்த பைக்கை ஓட்ட முடியாமல் தவித்து வருகிறார்.

நடிகர் மாதவனின்

2000ம் வது ஆண்டுகளில் பெண்களின் கனவு கண்ணனாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் மாதவன். இவர் தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் மாதவனின்

நடிகர் மாதவன் ஒரு பைக் பிரியரும் கூட, மார்க்கெட்டில் உள்ளபைக்குகள் பற்றி தெரிந்து கொண்டு தனக்கு பிடித்த பைக்கை உடனடியாக வாங்கி விடுவார். அவர் கடந்த தீபாவளிக்கு வாங்கிய பைக் தான் இந்தியன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரோடுமாஸ்டர் பைக்.

நடிகர் மாதவனின்

இதனுடன் அவர் எடுத்துக்கொண்ட படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் கடந்த பிப்., மாதம் ஜிம்மில் அவர் பயிற்சி எடுக்கும் போது அவரது தோளில் அடிபட்டது.

இதன் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது அடிபட்ட அதே இடத்தில் இறுதி சுற்று படத்தின் படபிடிப்பின் போதும் அடிப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் மாதவனின்

அவருக்கு அறுவை சிகிச்சை கடந்த பிப்., மாதம் முடிந்த நிலையில் டாக்டர்கள் அவரை 3 மாதங்களூக்கு பைக் ஓட்டக்கூடாது,5 மாதங்களுக்கு சண்டை காட்சிகளில் நடிக்க கூடாது என்று கூறியுள்ளனர்.

நடிகர் மாதவனின்

இதனால் நடிகர் மாதவன் தனது ரோடுமாஸ்டர் பைக்கை மிகவும் மிஸ் செய்கிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்காக "பிக் பாய்" காத்திருக்கிறது என பதிவிட்டிருந்தார். அந்த பதிவை கீழே காணுங்கள்

மாதவனின் "பிக் பாய்" ஆன இந்தியன் மோட்டர்ஸ் ரோடுமாஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனையாகும் அமெரிக்க சொகுசு பைக், இது ஒரு விண்டேஜ் மாடல் பைக், இதில் எல்.இ.டி. லைட், ஹீட்டட் ஷீட் மற்றும் க்ரிப் இருக்கிறது.

நடிகர் மாதவனின்

மேலும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கால் வைக்கும் போர்டு, எலெக்டரானிக் அட்ஜெட்ஸ்ட்மெண்ட் உடன் கூடிய விண்ட் ஷீல்டு, க்ரூஸ் கண்ட்ரோல், என பல வசதிகள் உள்ளடக்கியுள்ளது.

நடிகர் மாதவனின்

இது 64.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்.7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட், மியூசிக், ஸ்மார்ட் போன் பேரிங், என பல டெக்னாலஜி வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

நடிகர் மாதவனின்

இதன் இன்ஜினை பொருத்தவரை 1811சிசி, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், தண்டர்ஸ்டோக் 111, வி டுவின் ரக இன்ஜின் கொண்டுள்ளது. இது 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

நடிகர் மாதவனின்

இதன் இந்திய சந்தைக்கான விலை ரூ 42.35 லட்சம் ஆகும். இவ்வளவு அம்சம் உள்ள பைக்கை கண் முன்னே வைத்துக்கொண்டு ஓட்டமுடியாமல் போவது என்பது கொடுமை தான்.

நடிகர் மாதவனின்

விரைவில் நடிகர் மாதவன் குணமாகி தனது "பிக் பாய்"யை ஓட்டி அசத்த உங்கள் வாழ்த்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor R. Madhavan Misses His Indian Roadmaster. Read in Tamil
Story first published: Thursday, April 5, 2018, 14:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark