'அலைபாயுதே' மாதவனின் பிரமிக்க வைக்கும் மோட்டார் உலகம்!

By Saravana

தமிழிலும், இந்தி சினிமா உலகிலும் முத்திரை பதித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கலக்கலான ஹீரோவான மாதவன் அன்பே சிவம், ரன் உள்ளிட்ட படங்களின் மூலமாக முத்திரை பதித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் வந்த இறுதிச்சுற்று மூலமாக திரையுலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்திருக்கும் நடிகர் மாதவன் தீவிரமான பைக் பிரியர். அவரிடம் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகள் உள்ளன. மேலும், சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். அவரது மோட்டார் உலகம் பற்றிய சுவாரஸ்யத் தொகுப்பை காணலாம்.

 பிஎம்டபிள்யூ பைக்

பிஎம்டபிள்யூ பைக்

நடிகர் மாதவனிடம் பிஎம்டபிள்யூ கே1600 ஜிடிஎல் என்ற மிக விலையுயர்ந்த பைக் மாடல் உள்ளது. டூரிங் ரகத்தை சேர்ந்த இந்த பைக்கை மிக நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்துகிறார்.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் 2011ல் டெலிவிரி துவங்கியது. இந்த பைக்கை ரூ.30 லட்சம் மதிப்பில் வாங்கியிருக்கிறார் நடிகர் மாதவன்.

எஞ்சின்

எஞ்சின்

நீண்ட தூர பயணங்களை எளிதாக்கும் வகையில், இந் பைக்கில் 6 சிலிண்டர்கள் கொண்ட 158 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1,649சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நம்மூரில் விற்பனையாகும் பல சக்திவாய்ந்த எஸ்யூவி மாடல்களைவிட அதிக சக்திவாய்ந்த பைக் மாடல்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இந்த பைக் 332 கிலோ எடை கொண்டது. லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் 26 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

அடாப்டிவ் ஸினான் ஹெட்லைட், கூடுதலாக எல்இடி ஹெட்லைட், சென்ட்ரல் லாக்கிங், அலாரம், வெப்பப்படுத்தும் வசதியுடன் இருக்கை, முகத்தில் காற்று அறைவதை தவிர்க்கும் விண்ட் ஷீல்டு, அதிக பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக பெட்டிகள் போன்ற பல வசதிகளை பெற்றிருக்கிறது. அடுத்து, அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு விலையுயர்ந்த பைக்கின் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 யமஹா பைக்

யமஹா பைக்

பாலிவுட் நட்சத்திரங்களின் பலரின் ஃபேவரிட் பைக் மாடலான யமஹா வி-மேக்ஸ் பைக் ஒன்றும் மாதவனிடம் உள்ளது. இது க்ரூஸர் ரகத்தை சேர்ந்தது.

விலை

விலை

யமஹா நிறுவனத்தின் பவர்ஃபுல் மாடல்களில் ஒன்றான இந்த பைக்கை ரூ.24 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார் மாதவன்.

எஞ்சின்

எஞ்சின்

யமஹா வி-மேக்ஸ் பைக்கில் 200 எச்பி பவரையும், 166.8 என்எம் டார்க்கையும் வழங்கும் 1,700சிசி வி4 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

யமஹா வி மேக்ஸ் பைக் 308 கிலோ எடை கொண்டது. மணிக்கு 210 கிமீ வேகம் செல்லும் வல்லமை கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 14 கிமீ மட்டுமே மைலேஜ் தருமாம். 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஸ்லிப்பர் க்ளட்ச், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட முன் மற்றும் பின் சஸ்பென்ஷன் அமைப்பு என பல நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக, இதன் தோற்றம் படு மிரட்டலாக இருக்கிறது. அதுசரி, மாதவனுக்கு பைக்குகள் பிடிக்கும் என்பது மட்டுமல்ல, சொகுசு கார்களிலும் நாட்டமில்லாமல் இல்லை. அவரிடம் இருக்கும் சொகுசு கார் விபரத்தை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பிஎம்டபிள்யூ கார்

பிஎம்டபிள்யூ கார்

பிஎம்டபிள்யூவின் உச்சபட்ச இடவசதி, சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடலான பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே மாதவன் பயன்படுத்துகிறார். அவ்வப்போது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது இந்த காரில்தான் வருகிறார்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

இந்த கார் பல விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ரூ.92.4 லட்சம் முதல் ரூ.1.95 கோடி வரையிலான விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

 இடவசதி

இடவசதி

இந்த காரின் மிக முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மிக தாராளமான இடவசதியை அளிக்கிறது. பிரிமியம் லெதர் இரு்கைகள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள், ஐ- டிரைவ் ஆடியோ சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப் என வசதிகளக்கு பஞ்சமில்லை.

பிஎம்டபிள்யூ பிரியர்

பிஎம்டபிள்யூ பிரியர்

நடிகர் மாதவன் பிஎம்டபிள்யூ பிரியர் என்பது அவரது கார் மற்றும் பைக்கிலிருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், அவரது முதல் கார் எது தெரியுமா?

மாருதி கார்

மாருதி கார்

மாதவன் வாங்கிய முதல் கார் மாருதி வேகன்- ஆர். டால் பாய் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த காரை பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாயாரா புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

மாருதி வேகன் ஆர் எனது ஃபேவரிட் கார் மாடல். வழக்மான சர்வீஸுகளை தவிர்த்து, ஒருமுறை கூட ரிப்பேர் என்று ஒர்க்ஷாப் சென்றதில்லை. அவ்வளவு நம்பகமான கார் என்று மாதவன் புகழ்கிறார்.

பிராண்டு அம்பாசிடர்

பிராண்டு அம்பாசிடர்

சொந்தமாக மாருதி வேகன் ஆர் காரை வாங்கிய மாதவன், அந்த காரின் பிராண்டு அம்பாஸிடராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், மாதவன் கையெழுத்துடன் கூடிய சிக்னேச்சர் எடிசன் வேகன் ஆர் காரும் அறிமுகம் செய்யப்பட்டது டிரைவ்ஸ்பார்க் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

பிடித்த சாலை

பிடித்த சாலை

ஜெர்மனியில் உள்ள ஆட்டோபான் விரைவு சாலை தனக்கு மிகவும் பிடித்த சாலை என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்...

இந்தியாவில்...

மும்பையிலிருந்து புனே நகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் சாலை இந்தியாவில் மிகவும் பிடித்த சாலை எனவும், தமிழகத்தில் உள்ள பல சாலைகள் தனக்கு விருப்பமானதாகவும் குறிப்பிடுகிறார்.

தமிழ் பையன்

தமிழ் பையன்

தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாதவன் 1970ல் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். அவரது தந்தை ரெங்கநாதன் டாடா ஸ்டீல் ஆலையில் அதிகாரியாகவும், தாய் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மேலாளராகவும் பணிபுரிந்தவர்கள். கோல்ஹாப்பூரில் கல்லூரி படிப்பை முடித்த மாதவன் கூடுதல் திறன் பயிற்களில் சிறந்து விளங்கினார். மேலும், மஹாராஷ்டிரா தேசிய சாரணர் படையில் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் விளங்கியவர். மஹாராஷ்டிர தேசிய சாரணர் படையின் மூலமாக இங்கிலாந்து ராயல் ஆர்மியில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயே வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், வயது தகுதியில் 6 மாதங்கள் கூடுதலாகியதால், வேலையில் சேர முடியாமல் போனது. பின்னர், இந்தியா வந்து முதுகலை பட்டப் படிப்பை முடிந்த அவர், விளம்பரம் மற்றும் மாடலிங் துறை மூலமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2016, 12:51 [IST]
English summary
Actor Madhavan's Motor World.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+