40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் விலை உயர்ந்த சொகுசு படகு ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருக்கும் அந்த படகின் நீளம் சுமார் 40 அடி நீளம் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த படகு பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நடிகர் மாதவனை அறியாத திரையுலகமே இருக்க முடியாது. இந்தியாவின் பல மொழி படங்களில் இவர் நடித்திருக்கின்றார். குறிப்பாக, தமிழ், இந்தி திரையுலகிலேயே இவருடைய ஆதிக்கம் மிகப் பெரியதாக உள்ளது. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற ரோல்களையும் மாதவன் திரைத்துறையில் ஆற்றி இருக்கின்றார்.

Madhavan luxury yacht

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. இத்துடன், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (Film and Television Institute of India) இயக்குநராகவும் அவர் உள்ளார். இத்தகைய முக்கிய பிரபலமாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகர் மாதவனே மிக மிக விலை உயர்ந்த சொகுசு படகு ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றிலேயே இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தான் 40 அடி நீளம் கொண்ட உயர் படகை வைத்திருக்கின்றேன் என்பதை அவர் தெரியப்படுத்தினார். ஆனால், இந்த படகு இந்தியாவில் இல்லை துபாயிலேயே இருக்கின்றது என்றார். தற்போது மாதவனும் அவருடைய குடும்பத்தாரும் துபாயில் வசித்து வருகின்றனர்.

இங்கேயே மாதவன் அந்த 40 அடி நீளமுள்ள படகை வாங்கி இருக்கின்றார். சுமார் 40 அடி நீளம் கொண்ட அந்த படகு அதிக சொகுசு வசதிகள் நிறைந்த படகாகும். இந்த படகை இயக்குவதற்கான கேப்டன் உரிமத்தை அவர் வாங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த படகிலேயே சில நேரங்களில் அமர்ந்து நான் கதையை எழுதுவேன் என்ற மாதவனே அந்த பேட்டியில் கூறியிருக்கின்றார். இதுமட்டுமல்ல, மனதை ஆசுவாசப்படுத்த சில நேரங்களில் அவர் கடலுக்குள் சென்று அங்கு படகை நிறுத்திவிட்டு, அங்கிருந்த வண்ணம் கடலை ரசித்த நாட்களும் பல என அவர் தெரிவித்து இருக்கின்றார்.

எனவே தான் வாங்கியதிலேயே மிக சிறந்த வாங்குதல் என அப்படகை அவர் குறிப்பிட்டுள்ளார். கேப்டைன் உரிமைத்தைப் பெறுவதற்காக அவர் 6 மாசங்கள் வரை அதற்கான பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே கோவிட் காலகட்டத்தில் அதற்கான உரிமத்தை அவர் பெற்றிருக்கின்றார்.

அவர் வாங்கியது எந்த நிறுவனத்தின் சொகுசு படகு என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை. ஆகையால், படகின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை போன்ற விபரங்களை துள்ளியமாக கூற முடியவில்லை. விரைவில் இது பற்றிய விபரங்கள் வெளியுலகிற்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதாரணமாக ஓர் 40 அடி சொகுசு படகின் விலையே ரூ. 14 கோடிக்கும் அதிகமா இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே மாதவன் வாங்கியிருக்கும் அந்த 40 நடி நீள படகின் விலையும் 14 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், சொகுச அம்சங்கள் நிறைந்ததாகவும் அது இருக்கும். இதனால்தான் அந்தவகை படகுகளை உல்லாச படகுகள் என அழைக்கப்படுகின்றது. வேகத்திலும் அவை மிக சிறந்ததாக இருக்கும். எனவே சந்தோஷமான ஃபன் மற்றும் ஜாய் என அனைத்தும் இந்த படகில் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள சில நடிகர்கள் தங்களுக்கு சொந்தமாக விமானங்களையும், விலையுயர்ந்த படகுகளையும் தங்களுக்குச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அந்தவகையிலேயே மாதவனும் தனக்கு சொந்தமாக ஓர் படகை வைத்திருக்கின்றார். ஆனால், இந்த தகவல் இந்திய திரையுலகிற்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 12:44 [IST]
English summary
Actor madhavan reveals he owning 40 foot luxury yacht
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+