தங்க தேர் போல இருக்கு!! நடிகர் மாதவனிடம் உள்ள சூப்பர் பைக்குகளை பார்த்தது இல்லையே... அஜித்தையே மிஞ்சி விடுவார்

2000ஆம் ஆண்டின் துவக்கங்களில் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் ஆர் மாதவன். இவரை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகரான மாதவன், இதன் மூலமாகவே இந்தி உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்/ தொடர்ந்து நடித்தும் வருகிறார். இந்த நிலையில் நடிகர் மாதவனின் பெயர் சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் வருவதற்கு காரணம், அவரது மகன் வேடண்ட் மாதவன்.

2023ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்த போட்டியின் துவக்க நாளில் நீச்சல் வீரராக பங்கேற்ற வேடண்ட் மாதவன் இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார். அப்போது நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "போ இந்தியா... வெற்றி பெற வாழ்த்துக்கள்" என பதிவிட்டு இருந்தார். மொத்தம் 68 நாடுகள் பங்கேற்ற 2023 காமன்வெல்த் போட்டியில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 5 பதக்கங்கள் உடன் இந்தியா 17வது இடத்தை பிடித்தது.

சரி, இந்த செய்தியில் சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம். நடிகர் ஆர் மாதவனிடம் உள்ள மோட்டார்சைக்கிள் கலெக்‌ஷன்கள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சினிமா புகைப்படக் கலைஞர் அரவிந்த் கமலநாதன் இந்த வீடியோவை காட்சிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், தன்னிடம் உள்ள ஒவ்வொரு சூப்பர் பைக்காக, தனது கேரேஜில் இருந்து நடிகர் மாதவன் ஓட்டி காட்டுவது போல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி, நடிகர் மாதவன் வெளிக்காட்டிய சூப்பர் பைக்குகளை பற்றி இனி பார்க்கலாம்.

யமஹா வி மேக்ஸ்: யமஹாவின் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளான வி மேக்ஸை 1985இல் இருந்து 2020ஆம் ஆண்டு வரையில் யமஹா நிறுவனம் தயாரித்து வந்தது. இதில் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட யமஹா வி மேக்ஸ் பைக்கை நடிகர் மாதவன் வைத்துள்ளார் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், வீடியோவில் பைக்கின் புத்துணர்ச்சியான தோற்றத்தை பார்க்கும்போது கடந்த 10 வருடங்களுக்கு உள்ளாகவே இந்த பைக்கை அவர் வாங்கி இருப்பார் என நினைக்கிறோம். இந்த பைக்கில் 1700சிசி வி4 என்ஜின் (197 பிஎச்பி) பொருத்தப்பட்டு உள்ளது.

actor madhavan super bikes collections

இந்தியன் ரோட்மாஸ்டர்: பெயரில் மட்டும் தான் இந்தியா உள்ளது. ஆனால் இது ஒரு பக்கா அமெரிக்கன் ஸ்டைல் க்ரூஸர் பைக் ஆகும். மாதவனிடம் பழைய தோற்றத்தில் ரோட்மாஸ்டர் பைக் உள்ளது. ஆதலால், இதனை நீண்ட வருடங்களுக்கு முன் இவர் வாங்கியிருக்க வேண்டும். இந்த பைக்கில் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1811சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா கோல்டு விங்: நடிகர் மாதவன் மிக சமீபத்தில் வாங்கிய சூப்பர் பைக் இதுவாக தான் இருக்க முடியும். ஏனெனில், மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோ சற்று இருட்டான பகுதியில் எடுக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த பைக் பளபளப்பாக காட்சியளிக்கிறது. இந்தியாவில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கோல்டு விங் மோட்டார்சைக்கிளை மீண்டும் கடந்த 2022ஆம் ஆண்டில்தான் ஹோண்டா அறிமுகப்படுத்தியது. நடிகர் மாதவனின் இந்த ஹோண்டா சூப்பர் பைக்கில் 1833சிசி 6-சிலிண்டர் ஆட்டோமேட்டிக் டிசிடி பவர்டிரெயின் உள்ளது.

actor madhavan super bikes collections

டிரையம்ப் ராக்கெட் 3ஆர்: டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மிகவும் ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிள் இது எனலாம். ஏனெனில் இந்த டிரையம்ப் பைக்கில் சுமார் 2500சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பைக்கை க்ரோம் எடிசனில் நடிகர் மாதவன் வைத்துள்ளார். இதுவும் மாதவன் வாங்கிய லேட்டஸ்ட் மோட்டார்சைக்கிளுள் ஒன்றாகும். ஏனெனில், இந்தியாவில் டிரையம்ப் ராக்கெட் 3ஆர் க்ரோம் எடிசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே இந்த நடிகரால் வாங்கியிருக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் மாதவனின் சூப்பர் பைக் கலெக்‌ஷன்களை வைத்து பார்க்கும்போது, இவர் தாழ்வான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களை மிகவும் விரும்பக்கூடியவர் என்பது தெளிவாகிறது. அதாவது, ஆக்ரோஷமாக பைக்கை ஓட்டாமல், நிதானமாக, சவுகரியமாக மோட்டார்சைக்கிளை ஓட்ட விரும்புபவர்களுக்கு பெரும்பாலும் க்ரூஸர் ரக பைக்குகளே பிடிக்கும். நடிகர் மாதவனின் சூப்பர் பைக் கலெக்‌ஷன்ஸை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Article Published On: Thursday, August 24, 2023, 11:37 [IST]
English summary
Actor madhavan super bikes collections
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+