வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

நடிகர் மகேஷ் பாபு மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு (Mahesh Babu). இவர் தற்போது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை (Audi e-tron Electric SUV) வாங்கியுள்ளார். இந்தியாவில் ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் ஆடி நிறுவனத்தின் கார்களை சொந்தமாக வைத்துள்ளனர்.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

ஆனால் மகேஷ் பாபு வாங்கியுள்ள ஆடி இ-ட்ரான் காரில் ஒரு ஸ்பெஷல் உள்ளது. இந்தியாவில் ஆடி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இ-ட்ரான்தான் என்பதுதான் அந்த ஸ்பெஷல். மகேஷ் பாபு தனது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டெலிவரி எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

மகேஷ் பாபு வாங்கியுள்ள ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், ஏராளமான சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் வாங்கியுள்ள ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, அடர் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 360 டிகிரி பார்க்கிங் கேமரா, பேங் & ஒலுஃப்சன் (Bang & Olufsen) 3டி பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேப்ஸ் போன்ற வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. மேலும் இந்த காரின் சென்டர் கன்சோலில், ஆடி நிறுவனம் ட்யூயல் டச்ஸ்க்ரீன்களை வழங்கியுள்ளது. ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், 95 kWh பேட்டரி தொகுப்பை பெற்றுள்ளது.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

மேலும் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒன்று என ட்யூயல் மோட்டார் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இவை ஒருங்கிணைந்து 402 பிஹெச்பி பவரையும், 664 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் பெற்றுள்ளது.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வெறும் 5.7 வினாடிகளில் எட்டி விடும். ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 359-484 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

50 kW ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 2 மணி நேரத்திற்கு உள்ளாகவே இந்த காரின் பேட்டரியை, பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதே நேரத்தில் 11 kW ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரம்புவதற்கு 8.5 மணி நேரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 1.01 கோடி ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.19 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஆடி இ-ட்ரான் உள்ளது.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

பொதுவாக நடிகர், நடிகைகள் அனைவரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதைதான் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் கார்களை பெரும்பாலான முன்னணி நடிகர், நடிகைகள் வாங்குவதில்லை. ஆனால் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படும் மகேஷ் பாபு, விலை உயர்ந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

வித்தியாசமா இருக்காரே... விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய நடிகர் மகேஷ் பாபு... எவ்ளோனு தெரியுமா?

மகேஷ் பாபு போன்ற பிரபலங்கள் வாங்குவதால், வரும் காலங்களில் இந்திய சந்தையில், எலெக்ட்ரிக் கார்கள் பிரபலமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதைதான் விரும்புகிறது. பல்வேறு மாநில அரசுகளும் அதற்குண்டான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 16, 2022, 17:55 [IST]
English summary
Actor mahesh babu buys audi e tron electric suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+