நடிகர் மகேஷ் பாபு புதுசா வாங்கியுள்ள இந்த காருக்கு மார்க்கெட்டில் இவ்வளவு டிமாண்ட்? மயக்கம்வர வைக்கும் விலை!!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை கோல்டன் நிற பெயிண்ட்டில் வாங்கியுள்ளார். ரேஞ்ச் ரோவர் காரின் எந்த வேரியண்ட் இது? இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் மற்ற சிறப்பம்சங்கள் என்ன என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. குறிப்பாக நம் இந்திய சினிமா பிரபலங்கள் பலரிடத்தில் ரேஞ்ச் ரோவர் கார்கள் குறைந்தது ஒன்றாவது உள்ளன. கம்பீரமான தோற்றம் கொண்ட நடிகர்கள் ரேஞ்ச் ரோவர் கார்களை தங்களது தோற்றத்திற்கு ஏற்றதாக பார்க்கின்றனர். அதேநேரம், சில நடிகைகளும் ரேஞ்ச் ரோவர் கார்களில் சென்று வருகின்றனர்.

ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்களின் சிறப்பம்சமே அவற்றின் கம்பீரமான, நிமிர்ந்த தோற்றம் ஆகும். இதுதான், மற்ற பிராண்ட்களின் லக்சரி கார்களில் இருந்து ரேஞ்ச் ரோவர் கார்களை தனியாக காட்டுவது மட்டுமின்றி, பார்ப்போரையும் விரைவாக கவர்ந்து விடுகிறது. இப்படிப்பட்ட ரேஞ்ச் ரோவர் கார்களின் அழகில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மட்டும் மயங்காமலா இருப்பார்?
தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் மகேஷ் பாபுவிடம் ஏற்கனவே ஏகப்பட்ட லக்சரி கார்கள் உள்ளன. இதில் தற்போது புதியதாக ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரும் இணைக்கப்பட்டுள்ளது. எஸ்வி என்பதன் அர்த்தம் ஸ்பெஷல் வைகல் ஆகும். அதாவது, உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப சில கஸ்டமைஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு விற்கப்படும் ரேஞ்ச் ரோவர் கார் வேரியண்ட் ஆகும் இது.

நடிகர் மகேஷ் பாபு வாங்கியதாக இணையத்தில் நமக்கு கிடைத்துள்ள படங்களில் லக்சரி தரத்திலான கோல்டு நிறத்தில் அவரது ரேஞ்ச் ரோவர் கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த ரேஞ்ச் ரோவர் காரில் மகேஷ் பாபு ஹைதராபாத்துக்கு சமீபத்தில் வருகை தந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில் தற்சமயம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.39 கோடியில் இருந்து ரூ.4.17 கோடி வரையில் உள்ளன. ரேஞ்ச் ரோவரின் விலைமிக்க வேரியண்ட்டான எஸ்வி -இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4 கோடி & ரூ.4.17 கோடி ஆகும். அதாவது வீல்பேஸ் குறைவான ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4 கோடி மற்றும் லாங்-வீல்பேஸ் வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.17 கோடி ஆகும்.

ஆனால் நடிகர் மகேஷ் பாபுக்கு இந்த ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரை வாங்குவதற்கு சுமார் ரூ.5.4 கோடி வரையில் செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.17 கோடி எனில், ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் கட்டணம் & சாலை வரி உள்ளிட்டவை சேர்த்தால் காரின் ஆன்-ரோடு விலை ரூ.5.4 கோடி வந்துவிடும். ஏற்கனவே கூறியதுபோல், மகேஷ் பாபு காரில் தனது விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து பெற்றிருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பாலிவுட் சினிமாவில்தான் ரேஞ்ச் ரோவர் கார்களை அதிக பேர் வைத்துள்ளனர் என நினைத்திருந்தோம். ஆனால் தென்னிந்திய சினிமா துறையிலும் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சிரஞ்சீவியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications









