ரூ5000 கொடுத்தாலே கிடைக்கும் நம்பரை ரூ1.31 லட்சம் கொடுத்து வாங்கிய நடிகர் மம்முட்டி! ஏன் தெரியுமா?
மலையாள நடிகர் மம்முட்டி தனது புதிய பென்ஸ் காருக்கு தனது ஃபேவரைட் நம்பரை ரூபாய் 1.30 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார். மம்முட்டியிடம் இந்த பதிவெண் கொண்ட கார்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், தனது புதிய காருக்கும் அதே எண்ணை வாங்கி உள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மலையாள திரை உலகில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்முட்டி. இவரிடம் ஏராளமான கார்கள் இருக்கிறது. இவர் மட்டுமல்ல இவரது மகன் துல்கர் சல்மானும் தற்போது மலையாள மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என பல்வேறு திரை படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

நடிகர் மம்மூட்டியின் கராஜில் ஏகப்பட்ட காஸ்ட்லியான கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. திரைப்பட நடிகர் என்பதால் அவரிடம் அதிகமான பணம் புழங்குவதால் காஸ்ட்லியான பல காரை சொந்தமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் புதிதாக பென்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்றை புதிதாக வாங்கி இருந்தார்.
இந்த காருக்கான பதிவெண் வாங்க வேண்டிய நேரம் வந்தது. அதே நேரத்தில் இவர் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஆர்டிஓவில் இந்த புதிய பென்ஸ் காரை பதிவு செய்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த ஆர்டிஓ-வில் தற்போது ஃபேன்ஸி பதிவெண்ணிற்கான ஆன்லைன் ஏலம் நடந்து கொண்டிருந்தது. அந்த ஏலத்தில் நடிகர் மம்முட்டியும் கலந்து கொண்டார்.
நடிகர் மம்மூட்டியிடம் உள்ள கார்கள் மற்றும் அவர் கேராவேன் கூட 369 என்ற பதிவெண்ணில் தான் இருக்கிறது. இது அவரது ஃபேவரிட் நம்பராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதே நம்பரை தனது புதிய பென்ஸ் காருக்கும் வாங்க வேண்டும் என 369 என்ற எண்ணிற்கு அவர் கடுமையாக போட்டி போட்டார்.
மொத்தம் மூன்று பேர் இந்த எண்ணிற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் நடிகர் மம்முட்டி இந்த எண்ணை ரூபாய் 1.31 லட்சம் கொடுத்து எழுத்தில் எடுத்துள்ளார். இந்த எண் முதன்முறையாக ஏலத்திற்கு வரும்போது வெறும் ரூபாய் 5000 என்ற விலையில் தான் ஏலத்திற்கு அறிமுகமானது. படிப்படியாக ஏலம் ஏறி ஏறி ரூபாய் 1.31 லட்சம் என்ற விலையில் நடிகர் மம்முட்டிக்கு இது காரின் நம்பர் கிடைத்துள்ளது.
தற்போது இவரது காருக்கு KL07DC0369 என்ற பதிவின் வழங்கப்பட்டு விட்டது. இந்த ஏலத்தில் இதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 500 என்ற எண்ணிற்கு தான் அதிகமான போட்டி இருந்தது இந்த எண் ₹2.45 லட்சம் என்ற விலையில் கொச்சியை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்காக 5 பேர் போட்டி போட்டனர்.
நடிகர் மம்முட்டி மற்றும் துல்கர்சல்மான் ஆகியோரிடம் ஏகப்பட்ட கார்கள் அவர்களின் பயன்பாட்டுக்காக இருக்கிறது. அந்த கார்கள் எல்லாம் 369 என்ற பதிவு எண்ணை கொண்டதாக இருக்கிறது. முக்கியமாக மெர்சிடிஸ் மேபேட்ச் ஜிஎல்எஸ் 600, ஜி வேகன், பென்ஸ் வி கிளாஸ், எஸ் கிளாஸ், லேண்ட்ரோவர் டிஃபெண்டர். ரேஞ்ச் ரோவர், போக்ஸ்வேகன் போலோ ஜி டிஐ மற்றும் இவரது கேராவேன் கூட இந்த 369 என்ற பதிவு எண்ணில் தான் இருக்கிறது.
கேரளவில் தற்போதைய சட்டப்படி யார் வேண்டுமானாலும் அடிப்படையிலான ரூபாய் 5000 விலையில் ஃபேன்ஸி நம்பர்களை ஏலம் எடுத்துக் கொள்ளலாம். போட்டிக்கு யாரும் இல்லாத பட்சத்தில் ரூபாய் 5000 என்ற விலைக்கு அந்த ஃபேன்ஸி நம்பர் அவருக்கு வழங்கப்படும். போட்டி ஏற்படும் பட்சத்தில் முறையாக ஏலம் நடத்தப்பட்டு யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த நம்பர் வழங்கப்படும். அதன் அடிப்படையில் தான் தற்போது நடிகர் மம்முட்டிக்கு இந்த நம்பர் ஒதுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகில் நடிகர் மம்முட்டி மட்டுமல்ல கேரளாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் பல சொகுசு கார்களை அனுபவித்து வைத்திருக்கிறார்கள். முக்கியமாக நடிகர் பிரித்திவிராஜ், டோமினோ தாமஸ், ஆசிப் அலி, நிவின்பாலி ஆகியோரிடம் பல சொகுசு கார்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்த டிரெண்ட் மலையாளத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள திரையுலகத்தினரிடம் உள்ளது.


Click it and Unblock the Notifications








