Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உல்லாசமா போகலாம்... புல்லட் புரூஃப் வசதிகள் எல்லாம் இருக்காம்... இந்த சொகுசு கேரவன் எந்த நடிகருடையது தெரியுமா?
பிரபல நடிகர் மம்முட்டி, சொகுசு கேரவன் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல மொழிகளின் திரைத்துறைகளிலும் மம்முட்டி பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். மற்ற நடிகர், நடிகைகளை போலவே மம்முட்டியும் வாகனங்களை அதிகமாக விரும்ப கூடியவர். வாகன ஆர்வலர்கள் மத்தியில், நடிகர் மம்முட்டியின் 369 கராஜ் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

மம்முட்டியின் அனைத்து வாகனங்களும் 369 என்ற பதிவு எண்ணைதான் பெற்றுள்ளன. இதே பதிவு எண்ணுடன் தற்போது ஒரு புதிய வாகனம் மம்முட்டியின் கராஜிற்கு வந்துள்ளது. செமி புல்லட் புரூஃப் சூப்பர் கேரவன்தான் மம்முட்டியின் கராஜிற்கு புதிதாக வந்துள்ள விருந்தாளி. சொகுசு வசதிகள் நிறைந்த இந்த கேரவனை மம்முட்டி புதிதாக வாங்கியுள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்த பதிவு எண்ணை இந்த புதிய கேரவனுக்கும் மம்முட்டி பெற்றுள்ளார். KL 07 CU 369 என்ற பதிவு எண்ணை இந்த கேரவன் தாங்கி நிற்கிறது. ஓஜெஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இந்த கேரவனை வடிவமைத்துள்ளது. வாகன ஆர்வலர்கள் ஓஜெஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தை பற்றி அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கேரவன்களை உருவாக்குவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஓஜெஸ் ஆட்டோமொபைல்ஸ் இருந்து வருகிறது. நடிகர் மம்முட்டியின் தேவைகளுக்கு ஏற்ப இந்த கேரவனை ஓஜெஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது. வால்வோ வாகனம் ஒன்று கேரவனாக மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் படுக்கை அறை உள்பட இந்த கேரவனில் அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கேரவனில் சௌகரியமான பயணங்களுக்கு ஏற்ற வகையில் சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த கேரவனின் வெளிப்புறம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் மம்முட்டி வாங்கியுள்ள புதிய கேரவனின் புகைப்படங்கள் தற்போது முகநூல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. மம்முட்டியின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த கேரவனின் மதிப்பு எவ்வளவு? என்பது தெரியவில்லை.

இந்த சொகுசு கேரவன் மட்டுமல்லாது, இன்னும் ஏராளமான சொகுசு கார்களையும் நடிகர் மம்முட்டி சொந்தமாக வைத்துள்ளார். நமக்கு திகைப்பை ஏற்படுத்தும் வகையில் அவரிடம் பல்வேறு சொகுசு கார்கள் உள்ளன. இதில், பிஎம்டபிள்யூ இ46 எம்3 (BMW E46 M3) காரும் ஒன்று. இதுதவிர ஜாகுவார் எக்ஸ்ஜே (Jaguar XJ) காரும் மம்முட்டியிடம் உள்ளது.

மம்முட்டியின் கராஜில் உள்ள விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று. மற்ற ஒரு சில நடிகர்களை போல் அல்லாமல், ஜாகுவார் எக்ஸ்ஜே காரை மம்முட்டியேதான் ஓட்டுவார் என கூறப்படுகிறது. மேலும் விலை உயர்ந்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) கார் ஒன்றையும் நடிகர் மம்முட்டி சொந்தமாக வைத்துள்ளார்.
Image Courtesy: Ojes Automobiles And All Kerala Contract Carriages