இந்த வயதிலும் பிரபல முன்னணி நடிகரின் தீராத டிராவல் ஆசை!! ஆஸ்திரேலியாவில் 2,300கிமீ கார் பயணம்...

மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களும், தந்தையும் மகனுமான மம்முட்டி & துல்கர் சல்மான் மிகுந்த கார் பிரியர்கள் என்பது உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக, நடிகர் துல்கர் சல்மான் '369 கேரேஜ்' என்கிற பெயரில் கார் கேரேஜ் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அதேபோல் மம்முட்டியும் எந்தவொரு காரையும் இயக்கி பார்க்க மிகவும் விரும்புபவர். அதாவது, மம்முட்டி காரில் செல்கிறார் என்றால் அவரை பின் இருக்கை வரிசையிலோ அல்லது முன் இருக்கை பயணியாகவோ பார்ப்பது அரிது. கார் டிரைவராகவே எப்போதும் காட்சி தந்துள்ளார். அதுபோலவே தற்போது கொட்டும் மழையில் நடிகர் மம்முட்டி கார் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் மம்முட்டி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் விடுமுறை சுற்றுலாவிற்காக சென்றுள்ளார்.

இந்த வயதிலும் பிரபல முன்னணி நடிகரின் தீராத டிராவல் ஆசை!!

ஆஸ்திரேலியாவில் இருந்துதான் அந்த வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் ஒருவர் வேறொரு நாட்டில் கார் ஓட்டுகிறார்... இதில் என்ன சிறப்பு உள்ளது என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் நடிகர் மம்முட்டியின் இந்த பயணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் இவர் சுமார் 2,300கிமீ தொலைவிற்கு காரை இயக்கி சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் துவங்கிய மம்முட்டியின் இந்த பயணம் கான்பெர்ரா, மெல்போர்ன் வழியாக டஸ்மெனியாவில் முடிவுற்றுள்ளது.

நடிகர் மம்முட்டியின் இந்த ஆஸ்திரேலிய பயணம் மொத்தம் 2 நாட்கள் இருந்துள்ளது. இரண்டு நாட்கள் இருப்பினும் மம்முட்டி இந்த பயணத்தில் ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்தையும் மகிழ்ச்சியுடனும், வழியில் ஆஸ்திரேலிய மக்கள் பின்பற்றிய போக்குவரத்து விதிமுறைகளை கண்டு மகிழ்ந்தார் என மம்முட்டியுடன் இந்த பயணத்தில் உடன் சென்ற அவரது நண்பர் ராபர்ட் என்பவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா ஆனது பெரும்பான்மையான நிலப்பரப்பை வறண்டதாக கொண்டது.

அதேநேரம் ஆஸ்திரேலியாவில் பசுமையான சூழலும் ஓரிரு இடங்களில் உள்ளது. இந்த நாட்டில் மரங்கள் மிகவும் நீளமானவைகளாக இருக்கும். இதனால் வறண்ட பூமியாக இருப்பினும் அவ்வப்போது மழை பெய்வதும் இருக்கும். அவை அனைத்தையும் இந்த பயணத்தின் மூலமாக மகிழ்ச்சியுடன் கண்டு கழித்துள்ள நடிகர் மம்முட்டி, ஒரு சமயத்தில் மழை பெய்த போது தனது கல்லூரி கால நினைவுகளையும் தனது நண்பர் ராபர்ட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு நடிகர் மம்முட்டி சென்று இருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இருப்பினும் முதல் பயணத்திலேயே சுமார் 2,300கிமீ தொலைவிற்கு காரை இயக்கி அசத்தியுள்ளார். இந்த பயணத்தில் மம்முட்டி பயன்படுத்தி இருப்பது கியா கார் ஒன்றை ஆகும். கியா பிராண்டில் எந்த மாடல் என்பது சரியாக தெரியவில்லை. இந்த கியா கார் ஆனது மம்முட்டியின் ஆஸ்திரேலிய நண்பர் ராபர்ட் உடையது என கூறப்படுகிறது.

இந்தியாவை போல் ஆஸ்திரேலியாவும் இடது பக்க டிரைவிங்கை கொண்ட நாடாகும். இதனாலேயே அங்கு ஒரு காரை ஓட்டுவதற்கு மம்முட்டிக்கு எளிதாக இருந்துள்ளது. விடுமுறையை கழிக்க ஆஸ்திரேலியாவிற்கு தனது மனைவி மற்றும் நெருங்கிய நண்பர் ராஜசேகரன் உடன் மம்முட்டி சென்றுள்ளார். நடிகர் மம்முட்டியிடம் போர்ஷே பனமெரா, லேண்ட் ரோவர் டிஃபெண்டர், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, போர்ஷே கேயென்னே உள்ளிட்ட கார்கள் உள்ளன.

இவ்வாறு தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்த மாடர்ன் கார்களை விரும்பக்கூடியவராக விளங்கும் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் பழமையான கிளாசிக் கார்கள் பிரியர் ஆவார். குறிப்பாக துல்கரின் 369 கேரேஜில் பழமையான லேண்ட் ரோவர் எஸ்யூவி கார்கள் புத்துணர்சியான தோற்றத்தில் உள்ளன. 1971இல் இருந்து கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் மம்முட்டி நடித்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor mammootty drove car almost 2300km in australia
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X