எந்தவொரு பரபரப்பும் இன்றி, ஏர்போர்ட்டுக்கு காரை ஓட்டி வந்தது இந்த நடிகரா!! காரின் விலை எவ்வளவு தெரியுமா?
நடிகர் மம்முட்டி அவரது புத்தம் புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரில் பொது இடத்தில் காட்சித் தந்துள்ளார். கார் ஆர்வலரான மம்முட்டி புதியதாக வாங்கி இருப்பது எந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரை என்பதையும், அந்த லக்சரி காரை பற்றியும் முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
நடிகர்கள் பலர் ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி ஆவார். இவரது மகனும், நடிகருமாகிய துல்கர் சல்மானும் புது, புது கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். மற்ற மாநிலத்தை காட்டிலும், கேரள மக்களுக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் என்றாலே தனி பிரியம் உண்டு.

நடிகர் மம்முட்டி அவ்வப்போது புதிய கார்களை வாங்கும் பழக்கம் கொண்டவர். இந்த வரிசையில் இவர் சமீபத்தில் வாங்கியுள்ள புதிய லக்சரி கார் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் 4மேட்டிக். மெர்சிடிஸ் நிறுவனத்தின் செயல்திறன்மிக்க கார் இதுவாகும். ஹேட்ச்பேக் உடலமைப்பில் இருக்கும் இந்த காரை நடிகர் மம்முட்டி சமீபத்தில் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில், புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் காரை நடிகர் மம்முட்டி ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் இருந்து அருகில் உள்ள விமான நிலையத்திற்கு நடிகர் மம்முட்டி புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் காரை ஓட்டி செல்லும்போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் நிறுத்திய பின்பு காரில் இருந்து நடிகர் மம்முட்டி வெளியே வரும் காட்சிக்களும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை மம்முட்டியின் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே கூறியதுபோல், நடிகர் மம்முட்டியின் கேரேஜில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அவற்றுள் சில கார்கள் ஆற்றல்மிக்க என்ஜினை கொண்ட, செயல்திறன் மிக்க கார்களாக விளங்குகின்றன.
நடிகர் மம்முட்டியின் கேரேஜில் ஏற்கனவே மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 என்ற செயல்திறன்மிக்க கார் உள்ளது. இந்தியாவில் கடந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎல்எஸ்600 காரை மம்முட்டி மட்டுமின்றி, பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களும் வாங்கியுள்ளனர். ஜிஎல்எஸ்600 காருக்கு அடுத்து, மம்முட்டியின் கேரேஜில் இணைந்துள்ள புதிய செயல்திறன்மிக்க ஹேட்ச்பேக் கார், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் ஆகும்.

இது, விலை குறைவான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் காரின் ஏஎம்ஜி வெர்சன் ஆகும். ஏஎம்ஜி ஏ45 எஸ் காரில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை மெர்சிடிஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 421 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடலாம். காரின் டாப்-ஸ்பீடு 270kmph ஆகும். இந்தியாவில் தற்போதைக்கு 4மேட்டிக்+ என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், மொத்தம் 6 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த காரை வாங்கலாம். காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.92.50 லட்சம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு இலட்சங்கள் கொடுத்து ஒரு காரை வாங்குவது எல்லாம் நடிகர் மம்முட்டியின் குடும்பத்தாருக்கு பெரிய விஷயமே இல்லை. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ45 எஸ் போன்ற கார்கள் எந்தவொரு கார் ஆர்வலரையும் கவர்ந்திழுக்கக்கூடியது. அப்படி இருக்கையில், நடிகர் மம்முட்டி இப்படியொரு காரை சொந்தமாக்கி இருப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஏனெனில், நடிகர் மம்முட்டியும் மிகுந்த கார் ஆர்வலர் ஆவார்.


Click it and Unblock the Notifications
