முதல் மாருதி 800 கார் மம்முட்டியிடம் செல்வதற்கு உறவினர்கள் விருப்பம்... காரணம்?!

Written By:

கடந்த 10 நாட்களுக்கு முன், முதல் மாருதி 800 காரின் நிலைமைய பார்த்தீங்களா? என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதாவது, அந்த காரின் உரிமையாளர்கள் காலமாகிவிட்ட நிலையில், அந்த பெருமைமிக்க கார் கேட்பாரற்ற நிலையில், தெருவோரம் நிறுத்தியிருப்பது குறித்து வேதனையுடன் அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதனை மாருதி கார் நிறுவனம் எடுத்து பராமரித்து அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று உரிமையாளரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில், அந்த முதல் மாருதி 800 காருக்கு ஏற்பட்ட நிலைமைய ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொண்ட மலையாள நடிகர் மம்முட்டி, அந்த காரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த காரை மாருதி நிறுவனத்தைவிட மம்முட்டியிடம் வழங்குவதே சிறந்தது என உறவினர்கள் கருதுகின்றனர். அதற்கு காரணம் என்ன தெரியுமா?

நடிகர் மம்முட்டி தீவிர கார் ஆர்வலர். ஆம், அவரது கார் கலெக்ஷனை பார்த்தாலே நீங்களே புரிந்துகொள்வீர்கள். அவரின் கார் கராஜில் இருக்கும் கார்களின் பட்டியலை ஸ்லைடரில் பார்த்தவுடன், நீங்களே அந்த மாருதி 800 காருக்கு சரியான அடுத்த உரிமையாளர் மம்முட்டியே என்று முடிவு செய்துவிடுவீர்கள். வாருங்கள் ஸ்லைடரில் மம்முட்டி கார் கராஜை ஒரு விசிட் அடிக்கலாம்.

 மம்முட்டியின் முதல் கார்

மம்முட்டியின் முதல் கார்

மம்முட்டியின் முதல் காரும் மாருதி 800தான். ஆம், பலருக்கு முதல் கார் என்பதுபோல், மம்முட்டியின் கார் கராஜும் மாருதி 800 காருடன்தான் ஆரம்பித்துள்ளது. அது இன்று மிகப்பெரிய கராஜ் ஆக மாறியிருப்பதற்கு பிள்ளையாரர் சுழி இட்ட மாடல்தான் மாருதி 800. எனவேதான், முதல் மாருதி 800 காரின் நிலைமையை பார்த்தவுடன், அதனை வாங்க அவர் தீர்மானித்திருக்கிறார்.

பேன்ஸி நம்பர்

பேன்ஸி நம்பர்

மம்முட்டியின் கார் கராஜிற்குள் செல்வதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை தெரிந்துகொண்டுவிட்டால் நல்லது. அதாவது, மம்முட்டியின் கார்கள் அனைத்தும் 369 என்ற பதிவெண்ட கொண்டதாகவே இருக்கும். கேரளா, தமிழகம், கர்நாடக, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் பதிவெண் கொண்டதாக அவரது கார்கள் இருக்கின்றன. இதில், அவரது ஆடி க்யூ7 கார் மட்டுமே விதிவிலக்கு.

மம்முட்டி ஜாகுவார் கார்

மம்முட்டி ஜாகுவார் கார்

நடிகர் மம்முட்டியிடம் ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் லாங் வீல் பேஸ் மாடல் ஒன்று இருக்கிறது. கேவியர் எனப்படும் அதிக பளபளப்பு கொண்ட பர்கண்டி என்ற பிரத்யேக வண்ணத்திலான மாடல் இது. இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக இந்தியாவில் கிடைக்கிறது. ஒரு கோடி முதல் 2.5 கோடி வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது கேஎல் 7 பிடி 369 என்ற பதிவெண் கொண்டது.

டொயோட்டா லேண்ட்க்ரூஸர்

டொயோட்டா லேண்ட்க்ரூஸர்

நடிகர் மம்முட்டியிடம் வெள்ளை நிற டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எல்சி200 எஸ்யூவி இருக்கிறது. இது ஒரு கோடி மதிப்பு கொண்டது. இந்த சொகுசு எஸ்யூவி மாடலில் 262 பிஎச்பி பவரை அளிக்கும் 4.5 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த எஸ்யூவியில் 7 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.

பிஎம்டபிள்யூ இல்லாத பிரபலமா?எ

பிஎம்டபிள்யூ இல்லாத பிரபலமா?எ

மம்முட்டியின் கார் கராஜில் அல்பைன் ஒயிட் வண்ணத்திலான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் உள்ளது இந்த 525டி என்ற டீசல் மாடல் எம் பாடி கிட் மற்றும் ரிம் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 194 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. எக்காலத்திற்கும் ஏற்ற டிசைன், தரமான கட்டுமானம், இடவசதி ஆகியவற்றின் மூலம் பெயர் பெற்ற பிஎம்பிள்யூ மாடல்களில் ஒன்று.

 ஃபோக்ஸ்வேகன் பஸாத்

ஃபோக்ஸ்வேகன் பஸாத்

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரை மம்முட்டி பயன்படுத்தி வருகிறார். பின்புறத்தில் மிக தாராள இடவசதியை அளிக்கும் இந்த கார் 170 பிஎஸ் பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது. ஏராளமான பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகளை கொண்டது. 5 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த கார் ரூ.30 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

மிட்சுபிஷி பஜேரோ

மிட்சுபிஷி பஜேரோ

எஸ்யூவி பிரியர்களின் விருப்பமான மாடல் மிட்சுபிஷி பஜேரோ. அந்த வகையில் மம்முட்டியும் பஜேரோ எஸ்யூவியை வாங்கி பயன்படுத்த தவறவில்லை. இந்த எஸ்யூவியில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎஸ் பவரையும், 292 என்எம் டார்க்கையும் வழங்கும். ரூ.21 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக வந்த புதிய பஜேரோ ஸ்போர்ட் மாடலையும் மம்முட்டி வாங்கி உபயோகப்படுத்தி வருகிறார்.

ஆடி ஏ7 ஸ்போர்ட்பேக்

ஆடி ஏ7 ஸ்போர்ட்பேக்

ஆடி இல்லாத சினிமா நட்சத்திரமா. ஆம், நடிகர் மம்முட்டியிடம் வெள்ளை நிற ஆடி ஏ7 ஸ்போர்ட்பேக் கார் உள்ளது. அதிக வசதிகள் கொண்ட சொகுசு செடான் கார் மாடல் இது. இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் டீசல் எஞ்சின் 245 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க்கையும் வழங்கும். க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இதந் முக்கிய தொழில்நுட்ப அம்சம். ரூ.87 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது.

ஆடி க்யூ7

ஆடி க்யூ7

மம்முட்டியிடம் கருப்பு நிற ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி மாடலும் உள்ளது. இந்த எஸ்யூவி மம்முட்டியின் பிற கார்களிலிருந்து சிறிது மாறுபட்டு கேஎல்7 பிஇ 3699 என்ற பதிவெண் கொண்டது. ஆடி க்யூ7 எஸ்யூவி பல சினிமா நட்சத்திரங்கள் கையில் உள்ளது. இந்த எஸ்யூவி 3.0 லிட்டர் மற்றும் 4.2 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.65 லட்சம் முதல் ரூ.88 லட்சம் விலை வரையிலான விலைப் பட்டியலில் உள்ளது.

ஸ்கோடா ஆக்டாவியா

ஸ்கோடா ஆக்டாவியா

மம்முட்டியின் மனம் விரும்பிய கார்களில் ஸ்கோடா ஆக்டாவியா மாடலும் ஒன்று. அவரது கராஜில் முந்தைய தலைமுறை ஸ்கோடா ஆக்டாவியா கார் ஒன்றும் அலங்கரித்து வருகிறது. இந்த கார் 90 பிஎச்பி பவர் கொண்ட 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிறந்த கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக விற்பனை செய்யப்பட்டது.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

இந்த தொகுப்பில் இடம்பெற்ற கார் மாடல்கள் தவிர்த்து மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி, டொயோட்டா ஃபார்ச்சூனர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ 530டி, மினி கூப்பர், பிஎம்டபிள்யூ எம்3, போர்ஷே பனமிரா மற்றும் சொகுசு கேரவன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இருக்கின்றன. அப்படியானால்...

தகுதியான நபர்

தகுதியான நபர்

என்ன, நடிகர் மம்முட்டியின் கார் கராஜை பார்த்து அசந்துவிட்டீர்களா? இதன்மூலம், அவரது கார் ஆர்வம் புரிந்திருக்கும். மேலும், முதல் மாருதி 800 காரை புனரமைத்து போற்றி பாதுகாக்க தகுதிவாய்ந்த நபர் என்பது அவரது கார் கராஜ் மூலம் தெரிய வருகிறது. அந்த கார் மம்முட்டியிடம் எப்போது செல்லும் என்பது குறித்து மீடியா உலகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

 பிரபலங்களின் மோட்டார் உலகம்

பிரபலங்களின் மோட்டார் உலகம்

01. மாறன் பிரதர்ஸின் மோட்டார் உலகம்...

02. தமிழ் சினிமா நட்சத்திரங்களின் கார்கள்...

03. சின்ன வயசில் பிஎம்டபிள்யூ: ஹன்சிகா பெருமிதம்

04. நடிகர் சூர்யாவின் மோட்டார் உலகம்...

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Kerala Cine superstar Mammootty, a car lover who owns 369 four-wheelers, has expressed his desire to buy India's first Maruti 800 that is lying unused for over a year now.
Story first published: Monday, May 4, 2015, 14:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark