குழந்தைய கேட்டா கூட இவர் யார்னு கரெக்ட்டா சொல்லும்! ஆனா செகண்ட் ஹேண்ட்ல சாதாரண காரை வாங்கி ஓட்றாரு!
திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் எல்லாம் பொதுவாக மிகவும் விலை உயர்ந்த கார்களில்தான் பயணம் செய்வார்கள். சினிமா நடிகர்கள் மட்டுமல்லாது, தொலைக்காட்சி நடிகர்களும் கூட, விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். ஆனால் நடிகர்கள் மத்தியில் சமீப காலமாக ஒரு 'டிரெண்ட்' மிக வேகமாக பரவி வருகிறது. யூஸ்டு கார்களை (Used Cars) வாங்கி பயன்படுத்துவதுதான் அந்த 'டிரெண்ட்' ஆகும். நடிகர்கள் மட்டுமல்லாது, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கூட, செகண்ட் ஹேண்ட் கார்களை (Second Hand Cars) தற்போது அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர்.
ஆனால் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் சொகுசு கார் நிறுவனங்களின் தயாரிப்புகளைதான், யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்குகின்றனர். உண்மையில் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் எல்லாம், செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

அத்துடன் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கினால், காத்திருப்பு காலமும் (Waiting Period) கிடையாது. இல்லாவிட்டால் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து விட்டு, டெலிவரிக்காக மாத கணக்கில் காத்திருக்க வேண்டும். இது போன்ற காரணங்களால்தான், யூஸ்டு கார்களின் பக்கம் பிரபலங்களின் கவனம் திரும்பியுள்ளது.
ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, சொகுசு கார் நிறுவனங்களின் தயாரிப்புகளைதான், பிரபலங்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்குகின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது ஒரு பிரபலமான நடிகர், செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில், மிகவும் விலை குறைவான கார் ஒன்றை வாங்கியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர்களில் ஒருவரான மணி சொர்னூர் (Mani Shornur) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். அத்துடன் திரைப்படங்களிலும் கூட, இவர் நடித்து வருகிறார்.
பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட, இவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளார். அவர் பயன்படுத்தி வந்த கார் இதற்கு ஒரு உதாரணம். நடிகர் மணி சொர்னூர், மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரைதான் பயன்படுத்தி வந்தார். தற்போது அந்த காரில் இருந்து 'அப்டேட்' ஆகி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அது டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று. எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் வெர்ஷன்களில், டாடா நெக்ஸான் கிடைத்து வருகிறது. ஆனால் மணி சொர்னூர் வாங்கியிருப்பது, டாடா நெக்ஸான் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் ஆகும்.
இது ஓரளவிற்கு விலை குறைவான கார்தான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை வெறும் 8 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது ஓரளவிற்கு குறைவான விலைதான் என்றபோதிலும், நடிகர் மணி சொர்னூர் இந்த காரை, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கியுள்ளார்.
டாடா நெக்ஸான் ஐசி வெர்ஷனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்/சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களுடன், ஏராளமான அதிநவீன வசதிகளும் (Features) டாடா நெக்ஸான் காரில் வழங்கப்படுகின்றன.
இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம், டாடா நெக்ஸான் எஸ்யூவி மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








