80களில் பயங்கர ஃபேமஸாக இருந்த நடிகர்... இப்போது ஆளே அடையாளம் தெரியல!! கோடி ரூபாயில் புது காருக்கு ஓனர்!

நடிகர்கள் அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். வெளிநாட்டில் வசிக்கும் நடிகர், நடிகையர் என்றால் சொல்லவே வேண்டாம், மாதத்திற்கு ஒரு கார் வாங்குவார்கள். ஏனெனில், அவர்களிடத்தில் டாலர் கணக்கில் பணம் கொட்டி கிடக்கும். அவ்வாறு, இங்கிலாந்தில் வசிக்கும் பிரபலமான நடிகர் ஒருவர் இந்தியாவில் புதியதாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். யார் அந்த பிரபலமான நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள டிஃபெண்டர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

சினிமாவில் மார்க்கெட்டை இழந்த பல இந்திய நடிகர், நடிகைகள் வெளிநாடுகளில் செட்டில் ஆகியுள்ளனர். இதற்கு உதாரணமாக, பல நடிகர், நடிகைகள் உள்ளனர். அந்த வரிசையில் ஒருவராக இருக்கும் பழைய நடிகர் மனோஜ் கே ஜெயன். 1980, 90ஆம் காலக்கட்டங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் மனோஜ் கே ஜெயன் ஆவார்.

manoj k jayan buys defender

ஆரம்ப காலக்கட்டத்தில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் வில்லன் கதாபாத்திரங்கள் வந்து குவிய ஆரம்பித்தன. தமிழில் மட்டும் பார்த்தாலே, நிறைய படங்களில் மனோஜ் கே ஜெயன் நெகட்டீவ் ரோல்களில்தான் நடித்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கின. இதனையடுத்து, இங்கிலாந்தில் குடும்பத்துடன் மனோஜ் கே ஜெயன் செட்டில் ஆகிவிட்டார்.

இங்கிலாந்தில் இருந்துக் கொண்டு அவ்வப்போது தனது குடும்பத்தினர் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடும் மனோஜ் கே ஜெயன், சமீபத்தில் தனது புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காருடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டது இணையத்தில் வைரலாகியது. இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனையில் இல்லை. இங்கிலாந்தில் புதியதாக டெஸ்லா மாடல் 3 காரை வாங்கியிருப்பதை படத்துடன் நடிகர் மனோஜ் தெரிவித்து இருந்தார்.

manoj k jayan buys defender

இந்த நிலையில் தற்போது, நடிகர் மனோஜ் கே ஜெயன் புதியதாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை இந்தியாவில் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் வசித்தாலும், இந்தியாவிற்கு அவ்வப்போது வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் மனோஜ், அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த போது டிஃபெண்டர் காரை புக் செய்து தற்போது டெலிவிரி பெற்றுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஷோரூம் ஒன்றில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை டெலிவிரி பெறும்போது ஷோரூம் அதிகாரிகளுடன் நடிகர் மனோஜ் கே ஜெயன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இங்கிலாந்தில் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை போன்று, இந்தியாவில் டிஃபெண்டர் காரையும் பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் மனோஜ் கே ஜெயன் வாங்கியுள்ளார்.

manoj k jayan buys defender

இந்தியாவில் தற்சமயம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பிரபலமான கார் டிஃபெண்டர் என்பதால் நம் நாட்டில் நிறைய வேரியண்ட்களில் டிஃபெண்டரை லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனை செய்கிறது. இவை மட்டுமில்லாமல், 75வது ஆண்டு நிறைவு எடிசனிலும் டிஃபெண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தற்சமயம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.93.55 லட்சத்தில் இருந்து ரூ.2.30 கோடி வரையில் உள்ளன. பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனிலும் டிஃபெண்டர் கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. நடிகர் மனோஜ் கே ஜெயன் வாங்கியிருக்கும் வெள்ளை நிறம் உள்பட மொத்தம் 10 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் டிஃபெண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கிலாந்தில் வசிப்பவருக்கு இந்தியாவில் எதற்கு இவ்வளவு விலையுயர்ந்த கார் என நீங்கள் நினைக்கலாம். இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டாலும், இந்தியாவிற்கு வரும்போது இங்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த ஒரு கார் வேண்டும் அல்லவா... அதற்காக இந்த டிஃபெண்டர் காரை வாங்கியிருக்கலாம். அல்லது, இந்தியாவில் இருக்கும் உறவினர்களுக்காக இந்த காரை நடிகர் மனோஜ் கே ஜெயன் வாங்கியிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2024, 15:59 [IST]
English summary
Actor manoj k jayan buys land rover defender check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X