1980களில் பிசியாக நடித்துவந்த இந்த பிரபல நடிகர் யாரென்று தெரிகிறதா? டெஸ்லா காருடன் வெளிநாட்டில் செட்டில்...!!

மனோஜ் கே ஜெயன் (Manoj K Jayan), பிரபல தென்னிந்திய நடிகர். பழைய 1980, 90ஸ் தமிழ் சினிமா படங்களை பார்ப்பவராக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு இவரை பற்றி தெரிந்திருக்கும். தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கும் மனோஜ் புதியதாக ஒரு டெஸ்லா எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். மேலும், அந்த காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் மார்க்கெட்டை இழக்கும் நடிகர், நடிகைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில், ஒரு சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த நடிகர் மனோஜ் கே ஜெயன் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.

actor manoj owns tesla car

நம் நாட்டில் டெஸ்லா எலக்ட்ரிக் காரை வாங்குவது மிகவும் செலவு மிகுந்த வேலை ஆகும். ஆனால், அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் சாதாரண மக்களிடம் கூட டெஸ்லா கார் சர்வ சாதாரணமாக இருக்கிறது. அந்த வகையில், நடிகர் மனோஜ் கே ஜெயனின் குடும்பம் இங்கிலாந்தில் புதியதாக டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளது.

டெலிவிரி எடுத்த பின், வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட காருடன் நின்று நடிகர் மனோஜ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. இதுதொடர்பான மனோஜ் கே ஜெயனின் பதிவில், இது தனது நீண்ட கால கனவு என்றும், இந்த கனவு நிஜமாகாமலே போய்விடும் என்று நினைத்ததாகவும், ஆனால் அது தற்போது நிஜமாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

actor manoj owns tesla car

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், உலகிலேயே தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று இதுவாகும். இன்னும் சொல்லப்போனால், பலத்த போட்டி மிகுந்த சீன நாட்டு சந்தையில் கூட டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் சிறப்பாக விற்பனையாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் இந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் முதன்முதலாக 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இங்கிலாந்தில் 2019இல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின் மேம்படுத்தப்பட்ட மாடல் 3 எலக்ட்ரிக் காரை கடந்த 2023ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், அப்டேட் செய்யப்பட்ட டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை நடிகர் மனோஜின் குடும்பம் வாங்கவில்லை.

actor manoj owns tesla car

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 2020ஆம் ஆண்டு சமயத்தில் அந்த நாட்டில் விற்பனையில் இருந்த பழைய ஜென்ரேஷன் டெஸ்லா மாடல் 3 காரையே இவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். இங்கிலாந்தில், ஸ்டாண்டர்ட் ரேஞ்ச், ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் பிளஸ், மிட் ரேஞ்ச், லாங் ரேஞ்ச் பிளஸ், ரியர் வீல் டிரைவ், லாங் ரேஞ்ச் ஆல் வீல் டிரைவ் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என பல்வேறு விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றின் ரேஞ்ச் ஆனது 381கிமீ-இல் இருந்து 614கிமீ வரையில் உள்ளன. ரேஞ்ச் என்பது எலக்ட்ரிக் காரில் உள்ள பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக கார் செல்லக்கூடிய தொலைவு ஆகும். இதில் எந்த வேரியண்ட்டில் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை நடிகர் மனோஜின் குடும்பம் வாங்கியுள்ளது? என்பது தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்திய மார்க்கெட்டில் இன்னும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் டெஸ்லா காரை வைத்தில்லை என்றால் நீங்கள் அப்டேட்டாக இல்லை என நினைத்து விடுவார்கள். இதன் காரணமாகவே, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் முடிந்தவரையில் ஒரு டெஸ்லா காரை ஆவது வாங்கிவிடுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2024, 22:39 [IST]
English summary
Actor manoj k jayan owns popular tesla model 3 electric car in united kingdom
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X