வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட 1980களின் ஹீரோ! டெஸ்லா காருக்கு பணத்தை தண்ணி போல செலவு பண்றாரு!!

மனோஜ் கே ஜெயன் (Manoj K Jayan), 1980, 90ஆம் காலக்கட்டங்களில் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர். தற்சமயம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் மனோஜ் கே ஜெயன் குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவரிடம் டெஸ்லா (Tesla) எலக்ட்ரிக் கார் ஒன்று உள்ளது. இதனை அவர் இங்கிலாந்தில் பயன்படுத்தி வருகிறார். டெஸ்லா காருடன் இருக்கும் படங்களை அவ்வப்போது நடிகர் மனோஜ் கே ஜெயன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.

அவ்வாறு, சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள படங்களில் அவரது டெஸ்லா காரில் புதிய மாற்றம் ஒன்றை பார்க்க முடிகிறது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம். என்ன தான் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தினாலும், டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஒன்றை ஓட்டி பார்க்க வேண்டும் என்கிற ஆசை நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்.

manoj k jayan s car number

நம் நாட்டில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இல்லை என்பது அதற்கு முக்கிய காரணம் ஆகும். ஆனால், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சிலர், நாம் பொறாமை படும் அளவிற்கு ஜாலியாக டெஸ்லா கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறான வெளிநாட்டு வாழ் இந்திய டெஸ்லா கார் உரிமையாளர் தான் நடிகர் மனோஜ் கே ஜெயன் ஆவார்.

சினிமாவில் மார்க்கெட் காலியாகிவிட்டால் அடுத்ததாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் செட்டிலாகி விடுவது நம் இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு ஒன்றும் புதியது அல்ல. அவ்வாறு செட்டிலாகிய நடிகர், நடிகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வாறு இங்கிலாந்தில் செட்டிலாகிவிட்ட நடிகர் மனோஜ் கே ஜெயனிடம் வெள்ளை நிறத்திலான டெஸ்லா மாடல் 3 என்கிற எலக்ட்ரிக் கார் ஒன்று உள்ளது.

manoj k jayan s car number

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இந்த காரை அவர் இங்கிலாந்தில் வாங்கினார். அப்போது மனோஜ் கே ஜெயன் தனது புதிய டெஸ்லா காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அந்த சமயத்தில் இந்தியாவில் வைரலாகின. அந்த வரிசையில், அதே டெஸ்லா காருடன் இருப்பது போன்று தற்போது மீண்டும் மனோஜ் கே ஜெயன் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் கவனத்தை பெற்றுள்ளன. இந்த படங்களில், மனைவி ஆஷா ஜெயன் உடன் நடிகர் மனோஜ் கே ஜெயன் காட்சியளிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் மனோஜ் தனது டெஸ்லா எலக்ட்ரிக் காரை ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை எல்லாவற்றையும் விட, இந்த படங்களில் நமது கவனத்தை ஈர்ப்பது மனோஜின் டெஸ்லா காரின் நம்பர் பிளேட் ஆகும். ஏனெனில், காரின் நம்பர் பிளேட்டில் 'மனோஜ் கே ஜெயன்' என்பதை சுருக்கமாக குறிக்கும் வகையில் 'MK J' என பதிவெண் உள்ளது.

manoj k jayan s car number

ஏப்ரலில் வாங்கிய சமயத்திலேயே இவ்வாறான நம்பர் பிளேட்டை தனது டெஸ்லா காருக்கு நடிகர் மனோஜ் கே ஜெயன் பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை. ஏனெனில், அந்த சமயத்தில் இவர் வெளியிட்டு இருந்த படங்களில் காரின் வாகன பதிவெண் பாதுகாப்பு கருதி மறைக்கப்பட்டு இருந்தது. எங்களுக்கு தெரிந்தவரையில், இப்போதுதான் 'MK J' நம்பர் பிளேட்டை இவர் பெற்றிருக்கக் கூடும்.

அதனால்தான், காரின் நம்பர் பிளேட்டை வெளிக்காட்டும்படியான படத்தை சமூக வலைத்தளங்களில் தற்போது இவர் வெளியிட்டுள்ளார் என நினைக்கிறோம். ஏப்ரலில் இந்த டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை வாங்கிய சமயத்தில், இது தனது நீண்ட கால கனவு என்றும், இதனை நிஜமாக்காமலேயே போய்விடுமோ என்று நினைத்ததாகவும், ஆனால் அதனை தற்போது நிஜமாக்கி உள்ளதாகவும் உணர்ச்சிவசத்துடன் நடிகர் மனோஜ் கே ஜெயன் தனது எக்ஸ் பதிவை வெளியிட்டு இருந்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தனது விருப்பத்திற்கேற்ப வாகன பதிவெண்ணை பெறுவதே சற்று கடினமான மற்றும் செலவுமிக்க காரியம் எனும்போது, நடிகர் மனோஜ் கே ஜெயன் இங்கிலாந்தில் தனது பெயரில் காருக்கான நம்பர் பிளேட்டை பெற்றுள்ளார். ஆதலால், நிச்சயமாக இதற்காக அவர் பல ஆயிரம் யூரோக்களை செலவு செய்திருப்பார் என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 11, 2024, 23:59 [IST]
English summary
Actor manoj k jayans tesla electric car number plate goes viral running in uk
மேலும்... #electric car #number plate #fancy number
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X