காஸ்ட்லீயான காரை பார்த்ததும் அவர் தான்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க! நடிகர் கெத்தை கொஞ்சம் கூட வெளிக்காட்டல
நாகர்ஜூனா (Nagarjuna), இந்திய அளவில் பிரபலமான சினிமா நடிகர். தெலுங்கு சினிமாவை சேர்ந்தவராக இருப்பினும், தமிழிலும் நாகர்ஜூனாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆரம்பத்தில் திரைப்பட தயாரிப்பாளராக சினிமாவிற்குள் நுழைந்தவர், 1980களின் மத்தியில் இருந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எடுத்த உடனே நடிகர் நாகர்ஜூனாவின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதன்பின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நாகர்ஜூனா, தனது திரைப்படங்களை இந்தி மற்றும் தமிழ் மொழிகளிலும் திரையிட்டுள்ளார்.
இவர் நடித்த ரட்சகன் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ் திரைப்படம் ஆகும். தற்சமயம் நடிகர் ரஜினிகாந்தின் 'கூலி' (Coolie) திரைப்படத்தில் நடித்துவரும் நாகர்ஜூனா, ஓர் கார் பிரியர் ஆவார். தன்னிடம் உள்ள விலையுயர்ந்த கார்களுக்கான ஆர்டிஓ (RTO) பதிவை புதுப்பிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் (Khairatabad) ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் நடிகர் நாகர்ஜூனா வந்த நிகழ்வுகளை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அதேபோல், தனது ஓட்டுனர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிப்பதையும் நாகர்ஜூனா வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வரிசையில் தற்போது மீண்டும் தனது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகர்ஜூனா தனது விலையுயர்ந்ர்த காரில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்துள்ளார். லெக்ஸஸ் எல்.எம்350எச் (Lexus LM350h) என்கிற பிரம்மாண்டமான விலையுயர்ந்த காரில் கைதராபாத் ஆர்டிஓ-க்கு வந்த நடிகர் நாகர்ஜூனா, அங்கு கூடியிருந்த போட்டோகிராபர்களுக்கு சில பல போஸ்களை கொடுத்துவிட்டு, ஆர்டிஓ அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
நாகர்ஜூனா வருவது சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியும் போல... ஏனெனில், நாகர்ஜூனா ஆர்டிஓ அலுவலகத்திற்குள் நுழையும் முன்னரே எல்லாமே தயார் நிலையில் இருந்தது. ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தவர், அதிகாரிகளுடன் சில நிமிடங்கள் கலந்துரையாடிய பின் சில கையெழுத்துக்களை போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஆர்டிஓ அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, நடிகர் நாகர்ஜூனா வருவது அவரது ரசிகர்களுக்கும் எப்படியோ தெரிந்துள்ளது. அவர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னரே, ரசிகர்கள் அலுவலகத்தை சூழ்ந்திருந்தனர். நாகர்ஜூனாவின் லெக்ஸஸ் எல்எம்350எச் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவரது இந்த லக்சரி கார் முற்றிலும் பளபளப்பான கருப்பு நிறத்தில் உள்ளது.
இந்த கருப்பு நிறத்தை 'கிராபைட் பிளாக் கிளாஸ் ஃபிளேக்' (Graphite Black Glass Flake) என லெக்ஸஸ் நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், சோனிக் அகாடே, சோனிக் டைட்டானியம் மற்றும் சோனிக் குவார்ட்ஸ் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் எல்.எம்350எச் கார் விற்பனை செய்யப்படுகிறது. 4-சீட்டர் மற்றும் 7-சீட்டர் என 2 விதமான சீட் ஆப்ஷன்களில் எல்.எம்350எச் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், எந்த ஆப்ஷனில் நடிகர் நாகர்ஜூனா இந்த காரை வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், 4-சீட்டர் வெர்சனில்தான் இந்த காரை வைத்திருப்பார். ஏனெனில், இந்த லெக்ஸஸ் காரை வாங்கும் தொழிலதிபர்களும், சினிமா பிரபலங்களும் நன்கு சவுகரியமான இடவசதிக்காக 4 இருக்கைகள் உடன் மட்டுமே வாங்குகின்றனர். இவ்வளவு பெரிய காரில் வெறும் 4 இருக்கைகள் மட்டுமே எனும்போது எந்த அளவிற்கு விசாலமான இடவசதி இருக்கும் என யோசித்து பாருங்கள்.
7-சீட்டர் உடன் லெக்ஸஸ் எல்.எம்350எச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.10 கோடி மற்றும் 4-சீட்டர் ஆப்ஷனில் ரூ.2.63 கோடி ஆகும். இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை ஆனது இன்னும் 1 கோடி ரூபாய் அளவிற்கு அதிகமாக வரும். எல்.எம்350எச் காரின் பெயரில் உள்ள 'எச்' என்பது ஹைப்ரீட் (Hybrid)-ஐ குறிக்கிறது. அதாவது, இது ஒரு ஹைப்ரீட் கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, நடிகர் நாகர்ஜூனா போன்ற செல்வந்தர்கள் தங்களது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நேரில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வருவதில்லை. வேறு யார் மூலமாக ஆவது இதனை செய்து விடுகின்றனர். ஆனால், நடிகர் நாகர்ஜூனா இந்த விஷயத்தில் எப்போதுமே பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். கைரதாபாத் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நடிகர் நாகர்ஜூனா நேரில் வருவது எங்களுக்கு தெரிந்தவரையில், இது 3வது நிகழ்வாகும்.


Click it and Unblock the Notifications








