மகனின் 2வது திருமணத்துக்காக பிரபல நடிகர் வாங்கியிருக்கும் கார்... ஒரே நேரத்தில் இன்னொரு பெரிய செலவு!!

நடிகர் நாகர்ஜூனா (Nagarjuna), முன்னணி தெலுங்கு நடிகர் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவின் தந்தை தான் நாகஜூர்னா என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. திரைப்படங்களில் நடிக்கும் அதே சமயத்தில் நாகர்ஜூனா ஓர் கார் பிரியர் ஆவார். அதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் நடிகர் நாகஜூர்னா புதியதாக விலையுயர்ந்த லெக்ஸஸ் (Lexus) கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்படி என்ன மாதிரியான லெக்ஸஸ் காரை நாகஜூர்னா வாங்கியுள்ளார் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பொதுவாகவே சினிமா நடிகர், நடிகைகளுக்கும், விலையுயர்ந்த கார் & பைக்கிற்கும் இடையே ஓர் பிணைப்பு உண்டு. தங்களது லக்சரியான வாழ்க்கை தரத்தை வெளிக்காட்டுவதற்காகவே சினிமா நட்சத்திரங்கள் நிறைய பேர் அவ்வப்போது புது, புது கார் & பைக்குகளை வாங்குகின்றனர். இதற்கு உதாரணமாக உலகளவில் பல நடிகர், நடிகைகளை சொல்ல முடியும்.

nagarjuna spotted with lexus lm

இந்தியாவை பொறுத்தவரையில், பாலிவுட்டில்தான் அதிகளவில் சொகுசு கார் & பைக்குகள் அடிக்கடி வாங்கப்படுகின்றன. அதேநேரம், டோலிவுட்டிலும் கார் & பைக் பிரியர்கள் பலர் உள்ளனர். தெலுங்கு சினிமாவை பொறுத்தமட்டில், நடிகர் நாகர்ஜூனா அக்கினேனியின் குடும்பம் விலையுயர்ந்த கார்களை அவ்வப்போது வாங்குவதில் பெயர் பெற்றவர்களாக உள்ளனர். நடிகர் நாகர்ஜூனா மற்றும் அவரது மகன்கள் இருவரும் கார் பிரியர்கள் ஆவர்.

குறிப்பாக, நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி தனியாக ஒரு தொகுப்பாகவே பார்த்துள்ளோம். நாக சைதன்யாவுக்கு கார்கள் மீதான ஆர்வம் அவரது தந்தையிடம் இருந்துதான் வந்தது என சொன்னால் அதில் ஆச்சிரியமில்லை. இந்த நிலையில், நடிகர் நாகர்ஜூனா விலையுயர்ந்த லெக்ஸஸ் கார் ஒன்றை டிசம்பர் 4இல் நடைபெறவிருக்கும் மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணத்தை முன்னிட்டு வாங்கியுள்ளார்.

nagarjuna spotted with lexus lm

பிராண்ட்-நியூ லெக்ஸஸ் காரை ஹைதராபாத்திற்கு அருகே உள்ள கைர்தாபாத் ஆர்டிஏ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக நடிகர் நாகர்ஜூனா கொண்டுவந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவில், புதிய லெக்ஸஸ் காரில் இருந்து நாகர்ஜூனா இறங்கி வெளியே வருவதையும், பின்னர் கைர்தாபாத் ஆர்டிஏ அலுவலகத்திற்குள் நுழைவதையும், பின்னர் அங்கிருந்து வெளியேறும்போது ரசிகர்கள் சிலருடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதையும் காணலாம்.

பொதுவாக, ஆர்டிஓ, ஆர்டிஏ அலுவலகங்களில் புதிய வாகனத்தை பதிவு செய்ய சென்றால், மணிக்கணக்கில் நேரமாகுவது வழக்கம். ஆனால், நடிகர் நாகர்ஜூனாவின் புதிய கார் பதிவானது சில நிமிடங்களில் முடிந்துவிட்டது. நாகர்ஜூனா வந்த சமயத்தில், ஆர்டிஏ அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் போலீசார் கூடியிருந்ததை வீடியோவில் காண முடிகிறது. ஆதலால், நாகர்ஜூனா வரபோகும் விஷயம் ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

nagarjuna spotted with lexus lm

சரி... நடிகர் நாகர்ஜூனா வாங்கியிருக்கும் லெக்ஸஸ் காரை பற்றி பார்ப்போம். இவர் வாங்கியிருப்பது லெக்ஸஸ் எல்.எம் (LM) என்கிற சொகுசு எம்பிவி கார் ஆகும். அதாவது, அந்த அளவிற்கு பிரம்மாண்டமான காராக எல்.எம் விளங்குகிறது. லெக்ஸஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அறிமுகமான எல்.எம் கார் 7-சீட்டர் விஐபி மற்றும் 4-சீட்டர் அல்ட்ரா லக்சரி என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில், 7-சீட்டர் விஐபி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.10 கோடியாகவும், 4-சீட்டர் அல்ட்ரா லக்சரி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.63 கோடியாகவும் உள்ளது. கிராபைட் பிளாக் கிளாஸ் ஃப்ளேக், சோனிக் அகாடே, சோனிக் டைட்டானியம் மற்றும் சோனிக் குவார்ட்ஸ் என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் லெக்ஸஸ் எல்.எம் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், நடிகர் நாகர்ஜூனா வாங்கியிருப்பது, சோனிக் அகாடே நிறத்தில் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் நாகர்ஜூனாவிடம் எத்தனை சொகுசு கார்கள் இருப்பினும், லெக்ஸஸ் எல்.எம் ஆனது கொஞ்சம் ஸ்பெஷலான கார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனனில், மினி தியேட்டர் அளவிற்கு நன்கு பிரம்மாண்டமான மற்றும் கம்பீரமான காராக இந்த லெக்ஸஸ் கார் விளங்குகிறது. இதனால், நிச்சயமாக இந்த காரை மகனின் திருமணத்திற்காகவே நடிகர் நாகர்ஜூனா வாங்கியிருப்பார்.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2024, 23:17 [IST]
English summary
Actor nagarjuna spotted with his brand new lexus lm luxury car while rta registration
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X