டொயோட்டா காரில் கெத்தா வந்திறங்கிய மலர் டீச்சரை உருகி-உருகி காதலித்த நடிகர்.. இது சாதாரண காரு இல்ல..

மலையாள திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் நிவின் பாலி-யும் ஒருவர். இவர் 'பிரேமம்' போன்ற பல முன்னணி மலையாள படங்களில் நடித்திருக்கின்றார். நிவின் பாலிக்கு மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்ததில் இந்த படத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, இந்த படத்தின் வாயிலாகவே அவர் தமிழ் திரை ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். குறிப்பாக மலர் டீச்சர் கதாபாத்திரத்தை அவர் காதலித்த விதத்திற்காகவே பலரின் மனதைக் கவர்ந்த நபராக மாறினார். இத்தகைய நடிகரே தற்போது மிகவும் சிம்பிளாக டொயோட்டா (Toyota) காரில் வந்திறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

மிகவும் எளிமையாக நிவின் பாலி வந்திறங்கியிருந்தாலும், அவர் வந்த அந்த வாகனம் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அப்படி என்ன காரில் அவர் வந்தார் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக கப்பல் போல காட்சியளிக்கும் அந்த காரின் இப்போதைய விலை, சிறப்புகள் மற்றும் எஞ்சின் விபரங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Nivin pauly spotted in toyota

டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடலாக வெல்ஃபையர் (Toyota Vellfire) இருக்கின்றது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி (Luxury MPV) ரக கார் மாடல் ஆகும். மிகவும் தாராளமான இட வசதி மற்றும் அதிக சொகுசு வசதிகளை விரும்பும் பணக்காரர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக இது இருக்கின்றது.

குறிப்பாக, உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரின் மனம் கவர்ந்த கார் மாடலாக இது இருக்கின்றது. அதிலும், மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகர்கள் பலர் இந்த கார் பெருத்த ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த அளவிற்கே அதிகப்படியான மலையாள திரை உலகைச் சேர்ந்தோர் டொயோட்டா வெல்ஃபையர் காரை பயன்படுத்தி வருகின்றனர்.

Toyota vellfire

அவர்களில் ஒருவராகவே நிவின் பாலியும் இருக்கின்றார். இந்த ஆடம்பர எம்பிவி காரின் ஒரே ஒரு யூனிட்டை வாங்க வேண்டும் என்றால் இந்தியாவில் ரூ. 1 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமாக செலவிட வேண்டி இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ஒன்றரை கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இவ்வளவு அதிக விலைக்கு விற்க அப்படி என்ன இந்த டொயோட்டா காரில் இருக்கின்றது? என நீங்கள் கேட்கலாம்.. மினி ஆடம்பர பங்களாவிற்கு இணையான சொகுசு வசதிகளையே இந்த காரில் டொயோட்டா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, பயணிகளின் சொகுசான டிராவல் அனுபவத்திற்காக மிகவும் மிருதுவான இருக்கைகளை இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது.

கூடுதல் சிறப்பாக வெண்டிலேட் மற்றும் சூடாகும் வசதிக் கொண்ட இருக்கைகளையும் டொயோட்டா நிறுழனம் இந்த எம்பிவி காரில் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மிக முக்கியமாக படுக்கைக்கு இணையாக சாய்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கைகளையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றது டொயோட்டா.

ஆகையால், படுத்துக் கொண்டு செல்கின்ற மாதிரியான டிராவல் அனுபத்தை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க இதன் இருக்கைகளை பிரீமியமான லெதரைக் கொண்டே டொயோட்டா அலங்கரித்து இருக்கின்றது. இதுதவிர, டிவி மற்றும் சிறிய குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றையும் இந்த காரில் அது வழங்கி இருக்கின்றது.

Nivin pauly in a toyota vellfire

இதுதவிர, 14 இன்ச் அளவுக் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் அட்வான்ஸ்டான பயணத்தை மேற்கொள்ள இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கும். இதுமட்டுமல்ல இந்த காரில் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீலையும் அது வழங்கி இருக்கின்றது.

இதேபோல், அடாஸ் (ADAS) தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா போன்ற அம்சங்களையும் வெல்ஃபையர் எம்பிவி காரில் டொயோட்டா வழங்கி உள்ளது. இந்த அம்சம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மாதிரியான அம்சங்களினாலேயே தொழிலதிபர்களின் மனம் கவர்ந்த காராக வெல்ஃபையர் மாறியிருக்கின்றது.

Nivin pauly

இந்தமாதிரியான ஆடம்பர அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இது நீண்ட தூர டிராவலுக்கு உகந்த வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. குடும்பத்துடனும் பயணிக்க முடியும். அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து இந்த காரில் பயணித்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஒரே நேரத்தில் 6 பேர் முதல் 7 பேர் வரை இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும். 7 பேராக போகும்போது கிடைப்பதைவிட 6 பேராக பயணிக்கும்போதே இந்த கார் மிகவும் அதிக இட வசதிக் கிடைக்கும். குறிப்பாக, துளியும் அசௌகரியமற்ற டிராவல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுபோன்று பயணத்திற்கு எஞ்சினுக்காகவும் இந்த கார் பலரைக் கவரக் கூடியதாக இருக்கின்றது. 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே வெல்ஃபையர் காரில் வழங்கி இருக்கின்றனர். இத்துடன் சேர்த்து ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இந்த இரண்டும் சேர்ந்து 193 பிஎஸ் மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இந்தியாவில் இந்த காரை முன்னணி நடிகர்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், மலையாள திரை உலகின் சூப்பர் என்றழைக்கப்படும் மோகன்லால், சுரேஷ் கோபி உள்ளிட்டோரும் இந்த ஆடம்பர எம்பிவி காரையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்ல தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த நடிகர் நாகர்ஜுனா-வும் இந்த சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றார்.

மேலும், இந்தி நடிகர்கள் ஆமிர் கான், அஜய்தேவ்கன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இந்த ஆடம்பர எம்பிவி காரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்ல அஜித், விஜய் போன்ற முன்னணி தமிழ்பட நடிகர்களும் இந்த காரை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பெரும் செல்வந்தர்களும் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே நிவின் பாலி இந்த காரில் கெத்தாக வந்திறங்கி இருக்கின்றார். கார் மிகவும் ஆடம்பரமானதாக இருந்தாலும், அவர் மிகவும் எளிமையாகவே அந்த காரில் வந்திறங்கி இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 14, 2025, 20:08 [IST]
English summary
Actor nivin pauly has been spotted in a toyota vellfire drawing attention to his luxury vehicle cho
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X