ரஜினியின் காலா படத்தில் நடித்த நடிகரா இது? வாழ்க்கை இப்படி மாறும்னு நினைச்சி பார்த்திருக்க மாட்டார்!!
நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth)-இன் காலா (Kaala) திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஓபனிங் காட்சியில் மக்களின் வீடுகளை இடிக்கும் போலீசாரை ஞாபகம் இருக்கிறதா? அவரை ஞாபகத்தில் வைத்திருப்பது கொஞ்சம் சிரமம் தான். ஏனெனில், அவர் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்திருப்பார். ஆனால், பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பிரபலமான குணச்சித்திர நடிகராக உள்ளார். இவரது பெயர், பங்கஜ் திரிபாதி (Pankaj Tripathi). சினிமாவில் வளர வளர தனது அன்றாட போக்குவரத்துக்கான காரை மேம்படுத்தி வரும் பங்கஜ் திரிபாதி, ஆனால் தற்போது தனது பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரையே பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பிறந்தவரான பங்கஜ் திரிபாதி 2004ஆம் ஆண்டிலேயே தனது 28வது வயதில் சினிமா துறைக்கு வந்துவிட்டார். ஆனால், ஓரளவிற்கு கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்தது என்றால், 2012இல் தான். அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் உருவான 'கேங்ஸ் ஆஃப் வசேய்பூர்' திரைப்படத்தில் முதல்முறையாக முக்கியமான கதாபாத்திரத்தில் பங்கஜ் நடித்தார்.

அதன்பின் எல்லாம் ஏறுமுகம் தான். தபாங் 2, குண்டே, சிங்கம் ரிட்டர்ன்ஸ் மற்றும் தில்வாலே என தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த பங்கஜ் திரிபாதிக்கு 2018இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து காலா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் அதன்பின்பே பங்கஜ் திரிபாதிக்கு பல விருதுகள் குவிய துவங்கின.
2018இல் இருந்து மட்டும் 12க்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிதுரைக்கப்பட்டுள்ள பங்கஜ் திரிபாதி, அவற்றுள் 4 விருதுகளை வென்றுள்ளார். இவை தவிர்த்து, சில தொலைக்காட்சி விருதுகளையும் பெற்றுள்ள இவரை அதிகமாக டிவி விளம்பரங்களில் பார்க்க முடியும். இவ்வாறு சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் பங்கஜ் திரிபாதி தனது அன்றாட போக்குவரத்துக்கான கார் விஷயத்தில் பின்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளார்.

ஏனெனில், இதற்குமுன் வரையில் தனது அன்றாட பயன்பாட்டிற்கு மாடர்னான டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் (Tata Nexon EV Electric Car)-ஐ பயன்படுத்தி வந்த நடிகர் பங்கஜ் திரிபாதி, தற்போது தனது பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் உடன் காட்சி தந்துள்ளார். இந்த ஃபார்ச்சூனர் காரை 2018ஆம் ஆண்டில் பங்கஜ் வாங்கி இருந்தார். இவரிடம் இருப்பது ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய ஃபார்ச்சூனர் கார் ஆகும்.
பேர்ல் வெள்ளை நிறத்தில் இந்த எஸ்யூவி காரை 4x2 வேரியண்ட்டில் பங்கஜ் திரிபாதி வைத்துள்ளார். அதாவது, இந்த காரை ஆஃப்-ரோடுகளுக்கு தைரியமாக கொண்டு செல்ல இயலாது. இருப்பினும், ஃபார்ச்சூனர் கார் என்றாலே புல்லட்-ப்ரூஃப் தரத்திலானவை மற்றும் சாலையில் கம்பீரமாக இயங்கக்கூடியவை என்பது எல்லாருக்கும் தெரியும். இதனாலேயே, சற்று விலைமிக்க காராக இருப்பினும் ஃபார்ச்சூனரை வாங்க வேண்டும் என்பது இந்தியர்கள் பலரது விருப்பமாக உள்ளது.

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்த டொயோட்டா காரில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பங்கஜ் திரிபாதி அவ்வளவாக வெளியில் காட்சித்தந்தது கிடையாது. குறிப்பாக, டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை வாங்கிய பின், ஃபார்ச்சூனர் காரை முற்றிலுமாக பங்கஜ் மறந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் தற்போது மீண்டும் பயன்படுத்த துவங்கியுள்ளதால், பங்கஜ்ஜின் டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காருக்கு என்ன ஆகியது என்கிற கேள்விதான் எழுகிறது.


Click it and Unblock the Notifications









