பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் பால் வாக்கர். சினிமா ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அறிமுகமே தேவையில்லை. சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, கார் மற்றும் பைக் ஆர்வலர்கள் மத்தியிலும் பால் வாக்கர் என்ற பெயர் மிகவும் பிரபலம். ஏனெனில் இவரும் கார் மற்றும் பைக்குகள் மீது மிகுந்த காதல் கொண்டவர்தான்.

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

ஆனால் மற்ற சாதாரண சினிமா நடிகர்களுக்கும், பால் வாக்கருக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. பால் வாக்கர் உண்மையிலேயே ஹை-பெர்ஃபார்மென்ஸ் வாகனங்களின் மீது தீவிரமான காதல் கொண்டவர். ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் திரைப்பட நட்சத்திரமான பால் வாக்கர், அவரது ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

ஹை-பெர்ஃபார்மென்ஸ் கார்கள் மற்றும் பைக்குகள் மீதான தன் காதலை, திரையில் மட்டுமல்லாது, திரைக்கு வெளியேயும் பால் வாக்கர் பல முறை பகிர்ந்து கொண்டுள்ளார். எனவே இந்த உலகப்புகழ் பெற்ற நடிகரின் கராஜில், மிகவும் மதிப்பு வாய்ந்த பல்வேறு வாகனங்கள் இருந்ததில் இயற்கையாகவே ஆச்சரியம் அடைவதற்கு எதுவும் இல்லை.

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

இந்த சூழலில், ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்டார் பால் வாக்கரின் கார் மற்றும் பைக்குகள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டுள்ளன. இதன்மூலம் 16.40 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பாரெட்-ஜாக்சன் நிறுவனம், பால் வாக்கரின் வாகனங்களை ஏலம் விட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஸ்காட்ஸ்டேல் நகரில் இந்த ஏலம் நடைபெற்றுள்ளது.

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

பால் வாக்கர் சேகரித்து வைத்திருந்த அனைத்து வாகனங்களும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவில்லை. அதற்கு மாறாக ஒரு சில வாகனங்கள் மட்டுமே ஏலம் விடப்பட்டன. இருந்தபோதும் இந்த ஏலத்தில், 23,33,450 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. பாரெட்-ஜாக்சன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கிரெய்க் ஜாக்சன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

இதன்படி இந்திய மதிப்பில் சுமார் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றுள்ளது. கார் மற்றும் பைக்குகள் மட்டுமல்லாது, டிரக்குகளையும் கூட பால் வாக்கர் சேகரித்து வைத்திருந்தார். இதில், 21 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த ஏலமானது கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு நடைபெற்றது.

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

இதில், பால் வாக்கர் சொந்தமாக வைத்திருந்த 5 பிஎம்டபிள்யூ எம்3 லைட்வெயிட் எடிசன் கார்களும் (BMW M3 Lightweight Editions) ஏலம் விடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெள்ளை நிற கார்கள் ஆகும். இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனது 1995 மாடல் இ36தான் (1995 E36). 3,85,000 அமெரிக்க டாலர்களுக்கு இது ஏலம் எடுக்கப்பட்டது.

பிரபல நடிகரின் கார், பைக்குகள் 16.40 கோடி ரூபாய்க்கு ஏலம்... பணத்தை என்ன பண்ண போறாங்கனு தெரியுமா?

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2.74 கோடி ரூபாய். இந்த ஏலம் மூலம் கிடைத்த தொகை அனைத்தும் பால் வாக்கரின் மகள் மீடோவ் ரெய்ன் வாக்கரின் டிரஸ்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பால் வாக்கரின் மகள் மீடோவ் ரெய்ன் வாக்கருக்கு தற்போது 21 வயது ஆகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Barrett-Jackson

More from DriveSpark

Article Published On: Wednesday, January 29, 2020, 14:31 [IST]
English summary
Actor Paul Walker's Cars And Bikes Auctioned Off For Rs 16.4 Crore. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+