லம்போர்கினி காரை சரியான டைமில் சர்வீஸ் செய்யும் முன்னணி நடிகர்!! கோடிகளில் வாங்கிட்டு, லட்சங்களில் செலவு...!

பிரபாஸ் (Prabhas), பிரபல தெலுங்கு நடிகரான இவரிடம் லம்போர்கினி அவெண்டடர் (Lamborghini Aventador) கார் ஒன்று உள்ளது. பிரபாஸின் அந்த லம்போர்கினி கார் சாடின் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த லம்போர்கினி காரின் முந்தைய தோற்றம் மற்றும் தற்போதைய தோற்றத்தின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

முன்னணி நடிகர்களாக இருப்பவர்களிடத்தில் லம்போர்கினி கார் இருப்பது ஒன்றும் ஆச்சிரியம் அல்ல. அந்த வகையில், முன்னணி தெலுங்கு நடிகரும், புகழ்பெற்ற பாகுபலி திரைப்பட ஹீரோவான பிரபாஸ் கடந்த 2021ஆம் ஆண்டில் புத்தம் புதிய லம்போர்கினி அவெண்டடர் எஸ் ரோட்ஸ்டர் சூப்பர்காரை அரன்சியோ அட்லஸ் என்ற ஆரஞ்சு நிறத்தில் வாங்கினார்.

prabhas changed aventador car colour

ஆனால், இப்போதுவரையில் லம்போர்கினி அவெண்டடர் காரில் நடிகர் பிரபாஸ் வெளியே காட்சித்தரவில்லை. காருடன் பிரபாஸ் இருக்கும் படங்கள் ஒன்று கூட இதுவரையில் வெளிவரவில்லை. காரின் படங்கள் மட்டுமே வெளிவருகின்றன. இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் தனது லம்போர்கினி அவெண்டடர் காரை சாடின் கருப்பு நிறத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளதாக கருப்பு நிற லம்போர்கினி அவெண்டடர் கார் ஒன்றின் படத்துடன் செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த படத்தில், முழுவதும் அடர் கருப்பு நிறத்தில் நடிகர் பிரபாஸின் அவெண்டடர் காட்சியளிக்கிறது. 2021இல் கண்ணை கவரும் ஆரஞ்ச் நிறத்தில் இந்த லம்போர்கினி அவெண்டடர் காரை ரூ.5.8 கோடிக்கு நடிகர் பிரபாஸ் வாங்கி இருந்தார். லம்போர்கினி காரை புதிய நிறத்திற்கு மாற்ற நடிகர் பிரபாஸுக்கு எவ்வளவு செலவாகியது என்பது குறித்த விபரங்கள் இல்லை.

prabhas changed aventador car colour

இந்த கார் தற்போது சாடின் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ புதிய பெயிண்ட்டிற்கு மாற்றப்பட்ட பின் காரில் ஒரு சின்ன ரவுண்ட் போகும்போது காட்சிப்படுத்தப்பட்டதாக உள்ளது. லம்போர்கினியின் பிரபலமான அவெண்டடர் காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடலாக அவெண்டடர் எஸ் ரோட்ஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ரோட்ஸ்டர் டைப் காரில் மிக முக்கிய அம்சமாக நீக்கக்கூடிய ஹார்ட்-டாப் வழங்கப்படுகிறது. அதாவது, உலோகத்திலான இந்த லம்போர்கினி காரின் மேற்கூரையை தேவைக்கேற்ப மடக்கி கொள்ளலாம். அவெண்டடர் எஸ் ரோட்ஸ்டர் காரில் 6.5 லிட்டர் வி12 நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 740 எச்பி மற்றும் 690 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிங்கிள்-க்ளட்ச் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

prabhas changed aventador car colour

0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளிலும், 200kmph வேகத்தை 9 வினாடிகளிலும் எட்டிவிடக்கூடிய லம்போர்கினி அவெண்டடர் எஸ் ரோட்ஸ்டர் காரின் டாப்-ஸ்பீடு 300kmph ஆகும். இந்த லம்போர்கினி கார் மட்டுமின்றி, நடிகர் பிரபாஸிடம் வெள்ளை நிறத்தில் 7ஆம் தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் காரும் உள்ளது.

பிரபாஸின் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரில் 6.75 லிட்டர் வி12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 460 பிஎஸ் மற்றும் 720 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு கார்கள் மட்டுமில்லாமல், ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் மற்றும் பழைய ஜென்ரேஷன் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்களும் நடிகர் பிரபாஸிடம் உள்ளன.

prabhas changed aventador car colour

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமாக ஒரு காரின் நிறத்தை மாற்ற வேண்டும் என்றாலே நிறைய செலவாகும். அப்படியிருக்கையில், லம்போர்கினி அவெண்டடர் எஸ் ரோட்ஸ்டர் போன்ற ஒரு லக்சரி ஸ்போர்ட்ஸ் காரின் நிறத்தை மாற்ற பல லட்சங்களில் செலவாகி இருக்கும். ஆனால், இதெல்லாம் நடிகர் பிரபாஸ் போன்றோருக்கு பெரிய விஷயமே கிடையாது. ரோல்ஸ்-ராய்ஸ் கார் வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலையில், அதற்கு பொருத்தமாக லம்போர்கினி காரை கருப்பு நிறத்தில் பிரபாஸ் மாற்றியுள்ளார் என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 19:30 [IST]
English summary
Actor prabhas changed his lamborghini aventador s roadster colour to satin black
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X