சொகுசு பங்களா மாதிரியான வாகனத்தை வாங்கிய பிரகாஷ் ராஜ்.. 'ஹாய் செல்லம்' இந்த வாகனத்தோட விலை எவ்ளோ தெரியுமா?..
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மிக மிக விலை உயர்ந்த வாகனம் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர், அரசியல் விமர்சகர் என பல ரோல்களை ஆற்றி வரும் பிரகாஷ் ராஜ் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக ஃபோர்ஸ் அர்பேனியா (Force Urbania) மினி வேனையே வாங்கி இருக்கின்றார். அதிக இட வசதி மற்றும் சொகுசு டிராவலுக்காகவே இந்த வாகனத்தை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். ஆனால், பிரகாஷ் ராஜ் வாங்கியிருக்கும் ஃபோர்ஸ் அர்பேனியா கூடுதல் சிறப்புமிக்கதாகக் காட்சியளிக்கின்றது.
அவர் இந்த வாகனத்தை தனிப் பயனாக்கத்திற்கு உட்படுத்தி இருக்கின்றார். அதாவது, கேரவன் வாகனமாக மாற்றி இருக்கின்றார். இதன் அடிப்படையில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் இந்த வாகனத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக தங்குவதற்கான வசதிகள் பல இந்த வாகனத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.

மேலும், தங்கும் பொழுது தேவைப்படக் கூடிய வசதிகளும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதவாது, சமையல் அறை, அலமாரி மற்றும் கழிவறையுடன் கூடிய சிறிய குளியலறை உள்ளிட்டவை நடிகர் பிரகாஷ் ராஜ்-க்காக கேரவனாக மாற்றப்பட்டும் இருக்கும் அர்பேனியா வேனில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமல்ல, இந்த வாகனத்தின் பின் மற்றும் பக்கவாட்டின் இரண்டு பக்கங்களிலும் டெண்ட் அமைக்கும் வகையில் திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதை தேவைப்படும்போது குடை போல் விரித்துக் கொள்ள முடியும். இத்துடன் வெளிப்புறத்தில் லைட்டுகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இரவு நேரங்களில் வெளியே அமர்ந்திருக்கும்போது போதிய வெளிச்சத்தை வழங்க அவை உதவியாக இருக்கும்.
இத்துடன் வாகனத்திற்குள் படுக்கை வசதி மற்றும் ஓர் சிறிய குழுவுடன் மீட்டிங் வைப்பதற்கு ஏதுவாக இருக்கைகள் உள்ளிட்டவையும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக உள்பக்கத்திற்கு மிகுந்த பிரீமியம் தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், லக்சூரி பங்களாவில் வசித்துக் கொண்டிருக்கும் உணர்வு இந்த வாகனத்திற்குள் இருக்கும் பொழுது கிடைக்கும்.
இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, பொழுதுபோக்கிற்காக திரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், பிரகாஷ் ராஜால் ஷூட்டிங்கிற்கு பின்னர் இந்த வாகனத்தில் ஹாயாக ஓய்வு எடுக்க முடியும். அத்துடன், அவசர மீட்டிங்கையும் இதில் செய்துக் கொள்ள முடியும்.

தேவைப்பட்டால் வீட்டுக்கே போகாமல் வாரக் கணக்கில் இந்த வாகனத்தில் அவரால் தங்கிக் கொள்ள முடியும். இதற்கேற்ற சகல வசதிகளையும் இந்த வேன் தற்போது பெற்றிருக்கின்றன. இதற்காக பிரகாஷ் ராஜ் எவ்வளவு செலவு செய்தார் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், பல லட்சங்களை இதற்காக அவர் வாரி இறைத்திருப்பார் என்பதை மட்டும் யூகிக்க முடிகின்றது.
இந்தியாவில் ஃபோர்ஸ் அர்பேனியா-வின் புதிய யூனிட்டை ஒன்றை வாங்க வேண்டும் என்றாலே ரூ. 30.81 லட்சத்தைச் செலவிட வேண்டியிருக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலையில் உள்ள தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 16, 13, 12, 10 மற்றும் 9 இருக்கைள் தேர்வில் இந்த வாகனம் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
வேரியண்டுகளை பொருத்த வரை மூன்று விதமான ஆப்ஷன்கள் இந்த வாகனத்தில் வழங்கப்படுகின்றது. ஷார்ட் வீல்பேஸ், மீடியம் வீல்பேஸ் மற்றும் லாங் வீல்பேஸ் ஆகியவையே அவை ஆகும். இதில் எந்த வேரியண்டை பிரகாஷ் ராஜ் வாங்கியிருக்கின்றார் என்பது தெரியவில்லை. அவர் வாங்கியிருக்கும் வாகனத்தில் தங்கும் வசதி, மீட்டிங் ரூம் வசதி என பல வழங்கப்பட்டு இருப்பதால் அது லாங் வீல்பேஸ் வேரியண்டாக இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது.
இதன் விலை ரூ. 33.40 லட்சத்தையும் தாண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏசி, சாய்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கை, பனோரமிக் ஜன்னல்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், முன் பக்கத்தில் ஏர் பேக் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் வசதி என ஏகப்பட்ட வசதிகள் இந்த வாகனத்தில் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைஸ்பார்க் கருத்து: ஃபோர்ஸ் அர்பேனியா சொகுசு பயணத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட மினி வேன் ஆகும். இதன் காரணமாகவே பலர் இந்த வாகனத்தை வாங்கி வருகின்றனர். குறிப்பாக, சிலர் குடும்பத்துடன் பயணிக்கவும் இந்த வாகனத்தை இந்தியாவில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். பலர் பிரகாஷ் ராஜ் போல கேரவனாக பயன்படுத்திக்கவும் வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








